வட்டியில்லாக் கடன்,ஜக்காத் வசூல்,ஃபித்ரா வசூல்,சமூக நலத்திட்டங்கள்,மாணவர்களுக்கு வழிகாட்டுதல்

விமான நிலைய விவரங்கள்

விமான நிலைய வருகை புறப்படு விவரங்கள் http://indiaairport.blogspot.com/

ஞாயிறு, 20 செப்டம்பர், 2009

மண்ணறை வேதனை





















இந்தப் புகைப்படம் ஓமன் நாட்டிலுள்ள ஒரு மருத்துவமனையில் இறந்த 18 வயது இளைஞனுடையது. இவனுடைய தந்தையின் வற்புறுத்தலின் பேரில் 3 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் பதைகுழியில் இருந்து இந்த இளைஞனின் பிணம் தோண்டி எடுக்கப்பட்டது.

இந்த இளைஞன் மருத்துவமனையில் இறந்தபிறகு அதேநாளில் இஸ்லாமிய சடங்குகள்படி புதைக்கப்பட்டது. ஆனால் மருத்துவரின் சிகிச்சையின் மீது சந்தேகப்பட்ட இவனது தந்தை தனது மகன் இறந்ததற்கான உண்மையான காரணம் அறிய ஆசைப்பட்டதால் இவனது பிணம் தோண்டி எடுக்கப்பட்டது.












உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் அப்பிணத்தை தோண்டி எடுப்பதற்காக அனைவரும் செல்லுகின்றனர்.3 மணி நேரத்திற்கு முன்பு சடங்குகள் செய்து விட்டுச் திரும்பிய கால்கள் மறுபடியும் அக்குழியை நோக்கிச் செல்லுகின்றது.

சற்று முன்பு புதைக்கப்பட்ட இடம் என்பதால் எளிதாக மணலைத் தோண்ட முடிகின்றது. மூடிய குழிகள் மெல்ல மெல்ல தோண்டப்பட்டு வருகின்றது. முழுவதுமாய் தோண்டி அந்த இளைஞனின் பிணம் வெளியே எடுக்கப்படுகின்றது. சிலருக்கு மயக்கம் வராத குறை. சிலர் முகம் சுளிக்கின்றனர்.

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அப்பிணத்தைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைகின்றனர் அவனது தந்தையால் அந்த பிணத்தை காண முடியவில்லை. சற்று முன் புதைக்கப்ட்ட பிணமாக அந்த உடல் தெரியவில்லை.

3 மணி நேரத்தில் அவனது உடலில் பயங்கர மாற்றம் ஏற்பட்டுளள்ளதை அனைவரும் திகிலோடு கவனிக்கின்றனர். அந்தப்பிணத்தின் உடல் ஒரு விதமான சாம்பல் நிறமாக காட்சி அளிக்கின்றது. 18 வயதான அந்த இளைஞனின் உடல் ஒரு முதியவரின் உடல் போல தோற்றமளிப்பதைக்கண்டு அனைவருக்கும் பயம் கலந்த ஆச்சர்யம்.

சுமார் 1000 பேர் சேர்ந்து அந்த பிணத்தை குழிக்குள் வைத்து அடித்துப்போட்ட மாதிரி மிகவும் சேதமடைந்து கை மற்றும் கால்களில் எலும்புகள் எல்லாம் நொறுக்கப்பட்டு இடுப்புப் பகுதியில் யாரோ நெருக்கியயது போல இடுப்பு பகுதிகள் ஒடிந்து இரத்தங்கள் வெளியே முகத்தில் சிதறி கோரமாக காட்சி அளித்தது.உடல் முழுவதும் உடலின் நிறம் முற்றிலுமாய் மங்கி காட்சி அளித்தது.












அனைவருக்கும் ஆச்சர்யம் என்னவென்றால் கண்கள் மூடியபடி அடக்கப்பட்ட அந்தப் பிணத்தின் விழிகள் முற்றிலுமாய் திறக்கப்பட்டு எதையோ பார்த்து பயந்து போய் வலி தாங்க முடியாமல் சொக்கி போனதுபோல காட்சி அளித்தது. உடலில் உள்ள இரத்தம் வெளியே வந்து மிகுந்த சித்திரவதைக்கு உட்பட்டவனைப் போல காட்சி அளித்தது.

இரண்டு பக்கம் வைக்கப்பட்டுள்ள இயந்திரங்களால் மனித உடலை நசுக்கினால் எப்படி சிதையுதோ அந்த அளவிற்கு சிதைவுகளின் கோரம் இருந்தது.


புதைத்து 3 மணிநேரத்திற்குள் இப்படி மோசமாக உடல் சிதைக்கப்பட்டுப் போனதன் காரணம் தெரியாமல் அனைவரும் திகிலடைந்து போய் இருந்தனர்.

உறவினர்கள் அந்தப் பிணத்தை எடுத்து இஸ்லாமிய மருத்துவ ஆராய்ச்சியாளர்களிடம் ஒப்படைத்து ஆராயச் சொன்னபொழுது அவர்களின் விளக்கப்படி இந்தப்பிணமானது குழிக்குள் மிகுந்த சித்திரவதைக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளது என்றும் தீய வழியில் நடப்பவர்கள் குழிக்குள் வேதனைப்படுத்தப்படுவார்கள் என்று அல்லாஹ் மற்றும் அவனது தூதுவரான நபிகள் நாயகத்தின் ஏற்கனவே கூறப்பட்டுள்ள எச்சரிக்கைதான் என்றும் விளக்கமளித்தனர்.

திகிலில் இருந்து உறையாமல் பயத்துடன் இருந்த அவனது தந்தையிடம் கேட்டபொழுது அவர் தனது மகன் தீய நடவடிக்கைகளில் ஈடுபட்டான் என்பதையும் தொழுகையை ஒழுங்காக பேணி தொழுபவன் இல்லை என்றும் வாழ்க்கையில் சரியான வழியில் அவன் செல்லவில்லை என்றும் விளக்கமளித்தார்.

அல்லாஹ்வின் பாதையில் இறந்தவனைத்தவிர மற்ற அனைவருக்கும் கப்ரு வேதனை உண்டு. கியாமத் நாளுக்கு ( இறுதி நாள் ) முன்பு வேதனைகள் வெளிக்கொணரப்பட்ட முதல் சம்பவம் இதுவாகும்.

"ஜனாஸா (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும்போதுஇ அந்த ஜனாஸா நல்லறங்கள் புரிந்தாக இருக்குமானால் என்னை விரைந்து எடுத்துச் செல்லுங்கள் என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால்இ கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள் என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும் மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி:1314 அபூஸயீத் அல்குத்ரி (ரலி))

"ஓர் அடியானது உடலைக் கப்ரில் அடக்கம் செய்துவிட்டு அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் செருப்பின் ஓசையை மய்யித் செவியேற்கும். அதற்குள் இரண்டு ( முன்கீர் - நக்கிர்) வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து முஹம்மத் எனும் இந்த மனிதரைப் - பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?' எனக் கேட்பர்.


அதற்கவன் 'இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்' என்பான்.

பிறகு '(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்' என்று அவனிடம் கூறப்பட்டதும் அவன் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பான். நிராகரிப்பவனாகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும்இ 'எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்' என்பான்.


அப்போது அவனிடம் 'நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனுடைய இரண்டு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள்இ ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் கத்துவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி: 1338 அனஸ் (ரலி))

இதுவெல்லாம் நடக்கவா போகிறது என்று வீண் அலட்சியத்தில் இருப்பவர்களுக்கு இது அல்லாஹ்வின் இறுதி எச்சரிக்கையாக இருக்ககூடுமோ?

ஹதீஸில்தானே சொல்லப்பட்டிருக்கின்றது. இதுவெல்லாம் நமக்கு வரும்பொழுது பார்த்துக்கொள்ளலாம் என்று அலட்சியப்படுத்திவிடாதீர்கள் நண்பர்களே. மண்ணறையின் வேதனையை மட்டும் மனிதர்களுக்கு கேட்குமானால் அவன் மயக்கமுற்று விடுவான் என்கிற அளவுக்கு வேதனைகள் கடுமையாக இருக்கும்.

அய்யோ வேதனையைத் தாங்க முடியவில்லையே.. அலட்சியமாக இருந்துவிட்டோமே என்று அந்த நேரத்தில் நீங்கள் எவ்வளவுதான் மன்றாடினாலும் வேதனைகள் விட்டு விலகாது. அது காலம் கடந்த ஞானயோதயம்.

ஒன்று புரிந்து கொள்ளுங்கள் : எல்லோருக்கும் மரணம் நிச்சயம். ஆனால் எப்பொழுது வரும் என்று திட்டமிட்டு தெரியாததால் நாம் இவ்வளவு அலட்சியமாக இருக்கின்றோம்.

எனக்கு மெயிலில் வந்த இந்த சம்பவத்தை என்னால் முடிந்தவரை அனைவருக்கும் தெளிவுபடுத்தியுள்ளேன். இது உண்மையாக இருக்குமா அல்லது பொய்யான தகவலா என்று ஆராய்வதும் அல்லது இதன் மூலம் தன் வாழ்க்கையைளிவுபடுத்திக்கொள்வதும் அவரவர் கைகளில் உள்ளது.

சனி, 12 செப்டம்பர், 2009

ஃபித்ரா எபபொழுது, எவ்வளவு, எங்கு கொடுக்க வேண்டும்

ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.


முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1503

ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியம் ஆகும்.

ஒரு ஸாவு என்பது இரு கைகள் கொள்ளும் அளவு போல் நான்கு மடங்காகும். நிறுத்தல் அளவையில் சுமார் இரண்டரைக் கிலோ அரிசியாகும். அல்லது அதற்கான கிரயமாகும்.

நமது பராமரிப்பில் ஐந்து நபர்கள் இருந்தால் தலைக்கு இரண்டரைக் கிலோ அரிசி வீதம் பன்னிரண்டரைக் கிலோ அரிசியை வழங்க வேண்டும். இதுவே ஃபித்ரா எனப்படுகிறது.

ஃபித்ராவின் நோக்கம்


இரண்டு காரணங்களுக்காக ஃபித்ரா எனும் இந்தத் தர்மம் கடமையாக்கப்பட் டுள்ளது.

நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன் பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழை களுக்கு உணவாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : அபூதாவூத் 137, இப்னுமாஜா 1817

நோன்பு நோற்றவர்களுக்கு நோன்பில் ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாக இது அமைகிறது. ஏழைகளுக்கு உணவளித்த நன்மையும் கிடைக்கிறது. நோன்பு வைக்காத சிறுவர்கள், நோயாளிகள் போன்றோர்களின் சார்பில் வழங்கும் போது ஏழைகளுக்கு உணவளித்த நன்மை மட்டும் கிடைக்கும்.



கொடுக்கும் நேரம்

மக்கள் (பெருநாள்) தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் ஃபித்ரா தர்மத்தை வழங்கிவிட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1503, 1509

இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு பெருநாள் தினத்தில் சுப்ஹுக்குப் பின், பெருநாள் தொழுகைக்கு முன் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்று சில சகோதரர்கள் கருதுகிறார்கள்.

பெருநாள் தொழுகைக்கு முன் பெருநாள் தினத்தில் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்றும் இந்த ஹதீஸிலிருந்து பொருள் கொள்ள இயலும்.

பெருநாள் தொழுகைக்குப் பின்னால் கொடுக்கக் கூடாது. எத்தனை நாட்களுக்கு முன்னாலும் கொடுக்கலாம் எனவும் இந்த ஹதீஸிலிருந்து பொருள் கொள்ளலாம்.

பெருநாள் தொழுகைக்கு முன் என்பதை இரண்டு விதமாகவும் புரிந்து கொள்ள இடமிருந்தாலும் வேறு பல ஹதீஸ்களை ஆராயும் போது, ”பெருநாள் தொழுகைக்குப் பின்னர் கொடுக்கும் அளவுக்கு தாமதிக்கக் கூடாது. பெரு நாளைக்கு சில நாட்களுக்கு முன்னால் கொடுக்கலாம்” என்ற கருத்தே சரியானது என்பது உறுதியாகிறது.

ரமலான் ஸகாத்தைப் பராமரிக்கும் பொறுப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை நியமித்திருந்தார்கள். அப்போது ஷைத்தான் வந்து அதிலிருந்து எடுக்கலானான். உடனே ”நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உன்னைக் கொண்டு செல்வேன்” என்று நான் கூறினேன். அதற்கு அவன் ”எனக்குக் குடும்பம் உள்ளது. எனக்குக் கடும் தேவை உள்ளது” எனக் கூறினான். அவனை நான் விட்டு விட்டேன். காலையில் நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்ற போது, ”நேற்றிரவு உன் கைதி என்ன ஆனான்?” என்று கேட்டார்கள். ”அல்லாஹ்வின் தூதரே! அவன் வறுமையை முறையிட்டதால் இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன்” என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ”அவன் உன்னிடம் பொய் சொல்லியுள்ளான். மீண்டும் உன்னிடம் வருவான்” என்று கூறினார்கள். நான் அவனுக்காக காத் திருந்தேன். அவன் மீண்டும் வந்து உணவை அள்ள ஆரம்பித்தான். அவனைப் பிடித்து ”உன்னை நபிகள் நாயகத்திடம் கொண்டு போகப் போகி றேன்” என்று கூறினேன். ”எனக்கு வறுமை உள்ளது. குடும்பம் உள்ளது. இனி வர மாட்டேன்” என்று அவன் கூறினான். அவனை நான் விட்டு விட்டேன். காலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் சென்ற போது, ”உன் கைதி என்ன ஆனான்?” என்றார்கள். அவன் கடுமையான தேவையை முறையிட்டான். இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன் எனக் கூறினேன். ”அவன் உன்னிடம் பொய் சொல்லியிருக்கிறான். மீண்டும் வருவான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். நான் அவனுக்காகக் காத்திருந்தேன். மூன்றாவது நாளும் வந்தான்…. என்ற ஹதீஸ் புகாரியில் வகாலத் என்ற பாடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுருக்கமாக புகாரி 3275, 5010 ஆகிய எண்களில் கூறப்பட்டுள்ளது.

”இந்த ஹதீஸில் ஃபித்ரா என்று கூறப்படவில்லை. ரமளான் ஜகாத் என்று தான் கூறப்பட்டுள்ளது. இது ரமளான் மாதத்தில் ஜகாத்தைத் திரட்டுவதையே குறிக்கிறது. ஃபித்ராவை குறிக்கவில்லை” என்று சிலர் வாதிடுகின்றனர். இந்த வாதம் தவறாகும்.

ஜகாத் என்பது ஆண்டு தோறும் ரமளானில் மட்டும் திரட்டப்படும் நிதி அல்ல. அன்றாடம் திரட்டப்பட்டுக் கொண்டே இருக்கும். ஆனால் ‘ரமளான் ஜகாத்’ என்ற சொல் ஃபித்ராவை மட்டும் தான் குறிக்கும்.

இதை நாம் சுயமாகக் கூறவில்லை. பின்வரும் ஹதீஸிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.

ரமளான் ஸகாத்தை அடிமை, சுதந் திரமானவன், ஆண், பெண் அனைவர் மீதும் ஒரு ஸாவு பேரிச்சம் பழம் அல்லது ஒரு ஸாவு கோதுமை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள் என்ற ஹதீஸ் நஸாயீ 2453, 2455 ஆகிய எண்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

”ஒவ்வொருவருக்கும் ஒரு ஸாவு என்று ரமளான் ஜகாத்தை ஏற்படுத் தினார்கள்” என்பது ஃபித்ராவைத் தான் குறிக்கும். ஜகாத்தைக் குறிக்காது. ஜகாத் என்பது ஆளுக்கு ஆள் வேறுபடும். அனைவருக்கும் ஒரு ஸாவு என்று ஜகாத் வசூலிக்கப்படாது.

எனவே அபூஹுரைரா (ரலி) சம்பந்தப் பட்ட ஹதீஸ் ஃபித்ராவையே குறிக்கிறது.

எனவே நோன்புப் பெருநாள் தர்மம் மக்களிடம் திரட்டப்பட்டது என்பதற்கும் இது ஆதாரமாக அமைந்திருக்கிறது.

திரட்டும் பணியை பெருநாளைக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே ஆரம்பிக்கலாம் என்பதற்கும் இது ஆதரமாக அமைந்துள்ளது.

ஃபித்ரா தர்மத்துக்காக திரட்டப்பட்ட பொருட்கள் குறைந்தபட்சம் மூன்று நாட்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களின் பொறுப்பில் இருந்துள்ளது. மூன்று நாட்களும் ஷைத்தான் (அல்லது கெட்ட மனிதன்) வந்து அதை அள்ளியிருக் கிறான் என்பதிலிருந்து பெருநாளைக்கு சில நாட்களுக்கு முன்பாகவே ஃபித்ரா வைத் திரட்டலாம் என்பது தெரிகிறது.

நபித் தோழர்கள் நோன்புப் பெரு நாளைக்கு ஒருநாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன் ஃபித்ராவைக் கொடுத்து வந்தனர் என்று புகாரி 1551லிவது ஹதீஸ் கூறுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போதே நடந்ததை இது குறிக்கும் என்றால் இது மற்றொரு ஆதாரமாக அமையும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பின்னர் நபித் தோழர்கள் இவ்வாறு கொடுத்து வந்தார்கள் என்பது இதன் கருத்தாக இருந்தால் அபூஹுரைரா (ரலி) அவர் களின் அறிவிப்பை உறுதி செய்வதாக இது அமையும்.

எனவே, நோன்புப் பெருநாளைக்குச் சில நாட்களுக்கு முன்பே ஃபித்ராவைத் திரட்டலாம் என்பதில் சந்தேகம் இல்லை. பெருநாள் தொழுகை ஆரம்பமாகும் வரை அதன் கடைசி நேரம் உள்ளது.

ஒரு ஊரில் திரட்டி வேறு ஊரில் கொடுத்தல்


ஒரு ஊரில் திரட்டப்படும் ஃபித்ரா தர்மத்தை வேறு ஊர்களுக்கு வழங்கக் கூடாது என்று சிலர் கூறுகின்றனர். இதற்கு நேரடியாக எந்த ஆதாரமும் அவர்களிடம் இல்லை.

ஜகாத்தை அவர்களின் செல்வந்தர்களிடமிருந்து பெற்று அவர்களில் உள்ள ஏழைகளுக்கு விநியோகிக்க வேண்டும் என்று கூறி முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யமன் பகுதிக்கு அனுப்பினார்கள். (புகாரி 1395, 1496, 4347)

”அவர்களில் செல்வந்தர்களிடம் திரட்டி அவர்களில் ஏழைகளுக்கு வழங்க வேண்டும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் எந்தப் பகுதியில் திரட்டப்பட்டதோ அங்கு தான் விநியோகிக்க வேண்டும் என்று இவர்கள் வாதிடு கின்றனர்.

இது நோன்புப் பெருநாள் தர்மத்தைப் பற்றிய ஹதீஸ் அல்ல. ஜகாத் பற்றிய ஹதீஸாகும் என்பதை முதலில் நாம் கவனிக்க வேண்டும்.

அவர்களில் ஏழைகள், அவர்களில் செல்வந்தர்கள் என்பது அந்த ஊரைச் சேர்ந்த ஏழைகள், அந்த ஊரைச் சேர்ந்த செல்வந்தர்கள் என்ற பொருளில் பயன் படுத்தப்பட்டதா?

முஸ்லிம்களில் உள்ள செல்வந்தர்கள், முஸ்லிம்களில் உள்ள ஏழைகள் என்ற பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளதா? இரண்டுக்கும் இடம் தரக் கூடிய வகையில் இது அமைந்துள்ளது.

இரண்டாவது கருத்தில் தான் இது பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைப் பின்வரும் ஹதீஸ் உறுதி செய்கிறது.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பனூ சுலைம் கோத்திரத்தினரிடம் ஜகாத்தைத் திரட்ட ஒருவரை நியமனம் செய்தார்கள். அவர் வந்ததும் அவரிடம் கணக்குக் கேட்டார்கள். ”இது உங்களுக்கு உரியது; இது எனக்கு அன்பளிப்பாக கிடைத்தது” என்று அவர் கூறினார்… (புகாரி 6979)

பனூ சுலைம் கூட்டத்தார் மதீனாவைச் சேர்ந்தவர்கள் அல்லர். வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் வசூலித்த ஜகாத்தை அந்த நபித்தோழர் நபிகள் நாயகத்திடம் மதீனாவுக்குக் கொண்டு வந்திருக்கிறார். ஒரு இடத்தில் வசூலித்து இன்னொரு இடத்தில் விநியோகிக்கலாம் என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.

எனவே, ஜகாத்தாக இருந்தாலும் ஃபித்ராவாக இருந்தாலும் ஒரு இடத்தில் திரட்டி இன்னொரு இடத்தில் விநியோகிக்கலாம்.

மேலும் ஏழைகளுக்கு உணவாக பயன்படுவதற்காகவே ஃபித்ரா என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய காரணமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

வசதிபடைத்தவர்கள் அதிகமாக வாழும் பகுதியில் திரட்டி ஏழைகள் அதிகம் வாழும் பகுதியில் விநியோகம் செய்வதில் எந்தத் தவறும் இல்லை. பொருள் வசதி படைத்த நாடுகளில் வசிப்போர் ஏழைகள் வசிக்கும் பகுதிக்கு அனுப்பினால் தான் ஃபித்ராவின் இரண்டு நன்மைகளையும் பெற முடியும்.

நன்றி: ஒன்லைன் பீ.ஜே.கொம்

வெள்ளி, 11 செப்டம்பர், 2009

இஃதிகாஃப் எனும் இறைதியானம்‏

இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தங்கி (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள் - இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும். அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள். (அல்குர்ஆன் 2:187)


இஃதிகாஃப் எனும் பள்ளிவாசலில் தங்கி இருந்து இறைவணக்கத்தில் ஈடுபடுவது நபி (ஸல்) அவர்களின் சிறப்புமிக்க வழிகாட்டலாகும். ரமளான் மாதம் ரமளான் அல்லாத மாதங்களிலும் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருக்கலாம். நபி (ஸல்) அவர்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்திக்காட்டிய இஃதிகாஃப் எனும் இறைவணக்கம் பற்றிய தெளிவான அறிதலோ ஆர்வமோ மக்களிடையே இல்லை என்று சொல்லுமளவுக்கு மிகக் குறைந்த முஸ்லிம்களே இவ்வணக்கத்தைக் கடைபிடிக்கின்றனர்.

நபி (ஸல்) அவர்களும், நபியவர்களின் குடும்பத்தினரும், நபித்தோழர்களும் ஆர்வமுடன் தொடந்து கடைப்பிடித்த இஃதிகாஃப் - பள்ளியில் தங்கும் சிறப்பான ''சுன்னத்'' மக்களிடையே மறக்கப்பட்டுள்ளது. நினைவூட்டலுக்காக இஃதிகாஃப் பற்றிய நபிவழிகள் சில இங்கு,


நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமலானிலும் பத்து நாட்களே இஃதிகாஃப இருப்பார்கள். அவர்கள் மரணித்த ஆண்டில் இருபது நாள்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். (அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) அவர்கள். நூல்: புகாரி, 2044)



நபி(ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப்பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்; 'ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!" எனக் கூறுவார்கள். (அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) அவர்கள். நூல்: புகாரி, 2020)



"நபி(ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்!" (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) அவர்கள். நூல்: புகாரி, 2025)



"நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்; அவர்களுக்குப் பின், அவர்களின் மனைவியர் இஃதிகாஃப் இருந்தனர்!" (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) அவர்கள் நூல்: புகாரி, 2026)

நபி(ஸல்) அவர்கள் ரமளானில் நடுப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். ஓர் ஆண்டு அவர்கள் இஃதிகாஃப் இருந்து இருபத்தொன்றாவது இரவை அடைந்ததும். அந்த இரவின் காலையில்தான் இஃதிகாஃபிலிருந்து வெளியேறுவார்கள். 'யார் என்னுடன் இஃதிகாஃப் இருந்தார்களோ அவர்கள் கடைசிப் பத்து நாள்களிலும் இஃதிகாஃப் இருக்கட்டும்! இந்த (லைலத்துல் கத்ர்) இரவு எனக்கு (கனவில்) காட்டப்பட்டது; பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது! (அந்தக் கனவில்) காலை நேரத்தில் ஈரமான மண்ணில் நான் ஸஜ்தா செய்யக் கண்டேன். எனவே, அதைக் கடைசிப் பத்து நாள்களில் தேடுங்கள். (அந்த நாள்களின்) ஒவ்வொரு ஒற்றைப் படை இரவிலும் அதைத் தேடுங்கள்!' எனக் கூறினார்கள். அன்றிரவு மழை பொழிந்தது. அன்றைய பள்ளிவாயில் (ஈச்சை ஓலைக்) கூரை வேயப்பட்டதாக இருந்தது. எனவே, பள்ளிவாயில் ஒழுகியது. இருபத்தொன்றாம் நாள் ஸுப்ஹுத் தொழுகையில் நபி(ஸல்) அவர்களின் நெற்றியிலே ஈரமான களிமண் படிந்திருந்ததை என்னுடைய இரண்டு கண்களும் பார்த்தன. (அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அவர்கள் நூல்: புகாரி, 2027)

நபி(ஸல்) அவர்கள் பள்ளியிலிருந்து தம் தலையை நீட்டுவார்கள்; நான் அதை வாருவேன், இஃதிகாஃப் இருக்கும்போது தேவையிருந்தால் தவிர வீட்டிற்குள் வரமாட்டார்கள். (அறிவிப்பவர் ஆயிஷா(ரலி) அவர்கள். நூல்: புகாரி, 2029)

நபி(ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். நான் அவர்களுக்காக (பள்ளியில்) ஒரு கூடாரத்தை அமைப்பேன். ஸுப்ஹுத் தொழுதுவிட்டு அதற்குள் நுழைந்து விடுவார்கள். ஹஃப்ஸா(ரலி) என்னிடம் தமக்கொரு கூடாரம் அமைக்க அனுமதி கேட்டார். அவருக்கு நான் அனுமதி கொடுத்தேன். அவர் ஒரு கூடாரத்தை அமைத்தார். இதை ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) பார்த்தபோது அவர் மற்றொரு கூடாரத்தை அமைத்தார். நபி(ஸல்) அவர்கள் காலையில் எழுந்தபோது பள்ளியினுள் பல கூடாரங்களைக் கண்டு, 'இவை என்ன?' என்று கேட்டார்கள். அவர்களுக்கு விவரம் கூறப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், 'இதன் மூலம் நீங்கள் நன்மையைத்தான் நாடுகிறீர்களா?' என்று கேட்டுவிட்டு, அந்த மாதம் இஃதிகாஃப் இருப்பதைவிட்டுவிட்டார்கள். பிறகு ஷவ்வால் மாதம் பத்து நாள்கள் இஃதிகாஃப் இருந்தார்கள்.(அறிவிப்பவர் ஆயிஷா(ரலி) அவர்கள். நூல்: புகாரி, 2033)

இஸ்லாமிற்கு முந்தைய அறியாமைக் காலத்திலும் இஃதிகாஃப் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன!

"இறைத்தூதர் அவர்களே! மஸ்ஜிதுல் ஹராமில் ஓர் இரவு இஃதிகாப் இருப்பதாக அறியாமைக் காலத்தில் நான் நேர்ச்சை செய்திருந்தேன்!" என்று உமர்(ரலி) கூறினார். அவரிடம் நபி(ஸல்) அவர்கள் 'உம் நேர்ச்சையை நிறைவேற்றும்" என்றார்கள். உமர்(ரலி) ஓர் இரவு இஃதிகாஃப் இருந்தார். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) அவர்கள். நூல்: புகாரி, 2042)

மறைக்கப்பட்ட இந்நபிவழியை முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் வாழ்நாளில் ஒருமுறையேனும் நிறைவேற்றிட இறைவன் அருள் புரிவானாக!

ஆக்கம் : இப்னு ஹனீஃப்


நன்றி : சத்தியமார்க்கம்.காம்

தொகுப்பு : அபு நிஹான்


அன்புடன்


ஹாஜா மைதீன் அஷ்ரப் அலி

துபாய், ஐக்கிய அரபு அமீரகம்

ஞாயிறு, 6 செப்டம்பர், 2009

செல்போனா? கவனம் நம் குழந்தைகள்!

       விஞ்ஞான வளர்ச்சியின் இக்கால அற்புத கண்டுபிடிப்பில் ஒன்று தான் செல்போன். எல்லா விஞ்ஞான கண்டுபிடிப்புகளிலும் உள்ளது போன்று, இக்கருவியிலும் நன்மையும் தீமையும் உள்ளது. நல்ல முறையில் பயன்படுத்தினால், செல்போனும் நமக்கு நன்மையே!


ஆனால், வளர்ச்சியின் வேகத்துக்கு ஏற்ப, சந்தைகளில் அறிமுகமாகும் புதுப் புது ரக செல்போன்களால் வளரும் இளம் தலைமுறையினரிடையே குற்றச் செயல்களும் தவறான பழக்க வழக்கங்களும் அதிகரித்து வருகின்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் உள்ள பெண்களின் மொபைல் போன்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியதாக போலீசார் இரண்டு மாணவர்களை கைது செய்த சம்பவம் நடந்தது.

மாணவர்களை போலீசார் விசாரித்ததில் பெண்களின் மொபைல் எண்களை தெரிந்து கொண்டு முதலில் மிஸ்டு கால் கொடுப்பதும் அதற்கு எதிர்முனையில் பதில் வந்தபின் நைசாக பேசி தன்வயப்படுத்தி அதன் பின்னர் மிரட்டத் துவங்குவதும் தெரியவந்தது.

நாடு முழுவதும் தற்போது இந்தச் செல்போன்களால் பெண் குழந்தைகளுக்குப் பல்வேறு ஆபத்துகள் சூழ்ந்துள்ளதை மறுப்பதற்கில்லை. மேற்கூறியது ஒரு உதாரணம் மட்டுமே. இது போன்று எண்ணற்ற குற்றச்செயல்கள் இன்று செல்போன்களின் துணை கொண்டு நடைபெறுகின்றன. பெண்களுக்கு இதுபோன்ற மொபைல் போன் மிரட்டல் பரவலாக இருந்தாலும் பல பெண்கள் வெளியே சொல்வதற்கு பயந்து விட்டில் பூச்சிகள் போல் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பும் கும்பலிடம் சிக்கி சின்னாபின்னமாகின்றனர். இதனைப் பெரும்பாலும் பெற்றோர்களோ, குழந்தைகளின் பாதுகாவலர்களோ அறிவதில்லை என்பது தான் மிகப் பெரும் பரிதாபம்!

நம் குழந்தைகளை இது போன்ற ஆபத்துகளிலிருந்து காத்துக் கொள்வதற்கான வழி என்ன? சமீபத்தில் ஒரு தினசரியில் இதற்கான தீர்வைக் குறித்து மனநல டாக்டர் பெரியார் லெனின் அவர்களிடம் கேட்டபோது அவர் கீழ்கண்டவாறு பதில் கூறியிருந்தார்:



"சமூகத்துக்கு எதிரான மனோபவாம் கொண்ட சிறுவர்கள், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர். சட்டத்தை மதிக்காமல் ஒருவகையான சுபாவத்துடன் செயல்படும் இவர்கள், வருங்காலத்தில் பெரும் குற்ற செயல்களிலும் ஈடுபட வாய்ப்புகள் உள்ளன. இதுபோன்ற நபர்களிடம் சிக்காமல் இருக்க பெண்கள் கண்டிப்பாக தெரியாத மிஸ்டு கால்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது. பொதுவாக பள்ளி மாணவிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ்2 வரையிலான மாணவிகளை, பெற்றோர்கள் நன்கு கவனித்து கொள்ள வேண்டும். மாணவிகள் வீட்டில் அரவணைப்பு மற்றும் ஆறுதலுக்கு யாரும் இல்லை என கூறி எளிதில் இதுபோன்ற சமூக விரோதிகளின் வலையில் சிக்கிவிடுவர்.



பெற்றோர் மாணவிகளுக்கு மொபைல் போன் வழங்க கூடாது. வீட்டில் பெற்றோர் ஒழுக்கத்துடன் இருந்தால் பிள்ளைகளும் அதை பின்பற்றுவர். தவறாக வரும் எஸ்.எம்.எஸ்., களுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது. தொடர்ந்து யாரேனும் மிரட்டினால் தைரியமாக போலீசாரிடமோ, மனநல டாக்டர்களையோ அணுகினால் வெளியே தெரியாமல் மிரட்டுபவர்களை எச்சரிக்க வாய்ப்பு உண்டு. பொதுவாக மிரட்டுபவர்கள் பயந்து கொண்டு பதில் தருபவர்களைத்தான் மீண்டும் மீண்டும் மிரட்டுவர். எனவே, பெண்கள் தங்களை காத்துக்கொள்ள வெளிநபர்களின் தவறான அணுகுமுறையை ஆரம்பத்திலேயே தவிர்க்க வேண்டும்".

மனநல மருத்துவர் கூறிய ஆலோசனைகளில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான மூன்று விஷயங்கள் உள்ளன.


1. பெற்றோர் மாணவிகளுக்கு மொபைல் போன் வழங்க கூடாது.

2. வீட்டில் பெற்றோர் ஒழுக்கத்துடன் இருந்தால் பிள்ளைகளும் அதை பின்பற்றுவர்.

3. தவறாக வரும் எஸ்.எம்.எஸ்., களுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது.

தேவையின்றி பெண் குழந்தைகளுக்கு மொபைல் போன்களை வாங்கித் தருவதைத் தவிர்ப்பதன் மூலம் செல்போன் மூலமாக வரும் அனைத்து ஆபத்துகளிலிருந்தும் நம் பெண் குழந்தைகளைக் காத்துக் கொள்ள இயலும்.


குழந்தைகளின் குணம் என்பது, தம் பெற்றோர்களின் பழக்க, வழக்கங்களை ஒத்து வளர்வதாகும். பெற்றோர் சிறந்த ஒழுக்கங்களைக் கடைபிடிக்கும் பட்சத்தில் பெரும்பாலும் அவர்களின் குழந்தைகளும் நல்ல பழக்க, வழக்கம் உடையவர்களாகவே இருப்பர்.

அவசர, அவசியம் கருதி செல்போன் வைத்திருக்கும் குழந்தைகளிடம் அதனை எப்படிப் பயன்படுத்துவது என்பதையும் அனாவசிய மிஸ்டு கால், எஸ்.எம்.எஸ் களைத் தவிர்ப்பது குறித்தும் அவர்களுக்கு அறிவுறுத்தியிருக்க வேண்டும். இவற்றின் மூலம் பெரும்பாலான ஆபத்துகளிலிருந்து தம் குழந்தைகளைப் பெற்றோர் பாதுகாத்துக் கொள்ள இயலும்.

குழந்தைகளை வளர்ப்பது என்பதும் அவர்களுக்கு நல்ல விஷயங்களைக் கற்பித்தல் என்பதும் இஸ்லாத்தில் மிக முக்கிய செயலாக ஊக்கிவிக்கப்பட்டவைகளாகும்.

உங்கள் பிள்ளைகளை சிறந்த முறையில் நடத்துங்கள். அவர்களது பழக்கவழக்கங்களை செம்மைப்படுத்துங்கள். ஏனெனில் உங்கள் குழந்தைகள் உங்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டவர்களாகும். (இப்னு மாஜா)

எந்தவொரு பிள்ளைக்கும் அவரது பெற்றோர் அழகிய நல்லொழுக்கத்தைவிட எதனையும் சிறப்பாக கொடுத்து விட முடியாது. (புகாரி)

மேலே குறிப்பிட்ட இரு ஹதீஸ்களும் குழந்தை வளர்ப்பு பற்றி தெளிவாக கூறுகிறது.

1. வெளியூரில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு, விடுதியில் போன் வசதி இல்லாமல் போனால்,

2. வெளியூருக்குச் செல்லும் ஆண் குழந்தைகளுக்கு அவசரத்துக்கு உதவ

இதைப் போன்ற தருணங்களில் அவசியம் நிமித்தமாக மொபைல் போனை பிள்ளைகளுக்குத் தரலாம். அதுவும் வயது வந்த குழந்தைகளுக்கு மட்டுமே தர வேண்டும்.


எந்த ஒரு தருணத்திலும் நாம் தான் மொபைல் போன் வாங்கி கொடுத்து விட்டோமே என்று தம்முடைய வேலைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் தந்து குழந்தைகளைக் கவனிக்காமல் விட்டு விடலாகாது. அவர்களின் மொபைலில் என்ன எஸ். எம். எஸ் வருகிறது?, பதிவாகியுள்ள தொலைபேசி எண்கள் யாருடையவை? போன்றவற்றை அடிக்கடி கவனித்துக் கொள்ள வேண்டும். சம்பந்தம் இல்லாத பெயர்களில் அவர்களின் மொபைலில் அழைப்புகள் பதியப் பட்டிருந்தால், தயங்காமல் தம் பிள்ளைகளிடம் அது யார் என்று கேட்டு விடவேண்டும். செல்போனினால் வரும் பிரச்சனைகளை வெளிப்படையாக தயங்காமல் தம் பிள்ளைகளிடம் பெற்றோர்கள் எடுத்து கூறி அவர்களை எச்சரிக்கை செய்ய வேண்டும்.

முக்கியமாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் அதிகமாக நேரம் ஒதுக்கி, அவர்களின் விஷயங்களில் பெற்றொருக்கு இருக்கும் ஆர்வத்தையும் கவனத்தையும் அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகும். இவ்வாறு செய்தால் அவர்கள் தனியாக இருக்கும் வாய்ப்பை தடுப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களைத் தீய எண்ணங்களின் பக்கம் செல்லாமலும் தடுக்க முடியும்.

சில பெற்றோர்கள் தம் வீடுகளில் குழந்தைகளுக்குத் தனியாக அறை ஒதுக்கி அவர்கள் படிப்பதற்கு வசதி செய்து கொடுக்கின்றனர். இதில் தவறில்லை. ஆனால், அவர்களுக்கு உரிய வசதிகளைச் செய்துக் கொடுத்து விட்டு, இனி எல்லாம் அவர்கள் கையில் என, மேற்கொண்டு அவர்களின் நடவடிக்கைகளைக் கவனிக்காமல் விட்டு விடுவது மிகப் பெரிய தவறாகும். இவ்வாறு அதிகப்படியான வசதிகளைத் தங்கள் குழந்தைகளின் படிப்பிற்காக செய்து கொடுக்கும் பெற்றோர்கள், அவர்களின் நடவடிக்கைகளைச் சீராக கண்காணித்து வர வேண்டியது கடமை என்பதைப் பெற்றோர் உணர வேண்டும்.

சில வீடுகளில் தொலைகாட்சி சீரியல்கள் பெரியோர்களை மட்டுமன்றிக் குழந்தைகளையும் சீரழிக்கின்றது. படைத்தவனை உணராத முஸ்லிமல்லாதவர்கள் தான் வீணான தொலைகாட்சி மெகா சீரியல்களில் கட்டுண்டுக் கிடக்கின்றனர் என்றால், படைத்தவனுக்கு அஞ்சும் முஸ்லிம்களும் அவர்களுக்கு எவ்வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என்ற ரீதியில் வீணான மெகா சீரியல்களுக்கு அடிமையாகி கிடக்கின்றனர். இரவு நீண்ட நேரம் தொலைகாட்சியில் மூழ்கி கிடந்து விட்டு, காலையில் ஸுபுஹு தொழுகையைச் சர்வசாதாரணமாக விடும் முஸ்லிம் வீடுகள் ஏராளம்.

"சுபுஹு தொழுகையும் இஷா தொழுகையும் நயவஞ்சகர்களுக்கு மிகக் கடுமையாக இருக்கும்" என்பது நபிமொழி!


இவர்கள் தாங்கள் கண் விழிப்பதோடு குழந்தைகளையும் கண் விழிக்க செய்கிறார்கள். இதில், சீரியல் முடிந்தவுடன் அதைப் பற்றி டிஸ்கசன் வேறு சில வீடுகளில் நடக்கிறது. அவன் அப்படி செய்திருக்கலாம், இவள் ஏன் இப்படி செய்தா, அவன் அந்த வேலையில் சேர்ந்திருக்க கூடாது என்று தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். இந்த சீரியல்களை பார்த்து தான் பெண் குழந்தைகள் அதிகம் பேர் கெட்டுப் போகிறார்கள்.

புது சினிமா வந்து விட்டால் அதை உடனே வாங்கி வீட்டில் ஆண், மற்றும் பெண் குழந்தைகளோடு பார்க்கிறார்கள். அதில் முகத்தைச் சுழிக்கக் கூடிய வசனம் வந்தாலும், அன்னிய ஆணும் பெண்ணும் கட்டிப் புரண்டு கூத்தடிக்கும் பாடல் காட்சிகள் வந்தாலும் அவற்றைக் குறித்து எவ்வித வெட்க உணர்வும் இன்றி, தாய், தந்தை, குழந்தைகள் என குடும்ப சகிதமாக நாணம் கெட்டுப் போய் பார்த்து ரசிக்கின்றனர்.

"வெட்கம் ஈமானில் பாதியாகும்" என்று திருத்தூதர்(ஸல்) அவர்கள் கூறிய பொன்மொழிகள் அங்கு காற்றில் பறப்பதைக் குறித்து இவர்களுக்கு எவ்வித உணர்வும் இல்லை.

பெற்றோர்கள் இவ்விதம் செயல்பட்டால், குழந்தைகள் பெற்றோரின் வழியிலேயே வெட்க உணர்வின்றி வளர்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

இந்த சீரியல்களும், சினிமாக்களும் அதில் செய்யும் புது புது உத்திகளும் பிள்ளைகளின் மனதை எளிதில் கவர்ந்து கெடுத்து விடுகிறது. அதில் செல்போன்களை வைத்து என்னென்னவெல்லாம் செய்யலாம் என்று எல்லா தீய செயல்களையும் காண்பித்து விடுகின்றனர். இவற்றைக் காணும் குழந்தைகள், அதனைப் போன்றே செய்வதற்குத் தலைபடுகின்றனர். சினிமாவில் வரும் நடிகர்கள் போன்று தன்னுடைய உடைகளை மாற்றி கொள்வது, அவர்களைப் போன்று அலங்காரம் செய்து கொள்வது மற்றும் அவர்களைப் போன்று தங்களுடைய நடவடிக்கைகளை மாற்றி கொள்வது என்று இன்றைய ஆண், பெண் பிள்ளைகள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இத்தகைய சீரழிவுகளிலிருந்து தம் பிள்ளைகளைக் காப்பதற்கு, முதலில் பெற்றோர் தம்மை மாற்றிக் கொள்ள தயாராவதே ஒரே வழி!


மற்றொரு முக்கியமான விஷயம், பிள்ளைகளின் நண்பர்களை பற்றிப் பெற்றோர்கள் முழுமையாக அறிந்து வைத்திருப்பதாகும்.

ஆண் பிள்ளைகள் வெளியே சென்று இரவு நீண்ட நேரம் சுற்றி விட்டு வந்தால், அது எவ்வளவு தலைபோகும் விஷயமாக இருந்தாலும் அவர்களைக் கண்டிக்க வேண்டும். இரவு வெகு நேரம் வரை இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் விஷயங்களில் முன்னரே தங்களை அழைத்து விவரம் தெரிவிக்கும் பழக்கத்தை அவர்களைக் கண்டிப்பதன் மூலமாக வளர்த்து விடவேண்டும்.

சினிமா போன்ற வீண், ஆபாச சீரழிவு காரியங்களுக்கு வெளியே செல்வதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

மார்க்க விஷயத்தில் கண்டிப்புடன் நடந்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக தொழுகை விஷயத்தில் கண்டிப்பு அவசியம். குழந்தைகளுக்கு உலக கல்வியை வளர்ப்பதில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அந்த அளவிற்கு மார்க்க அறிவை வளர்ப்பதற்கும் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளைக் கண்டிக்கும் விஷயத்திலும் அவர்களுக்கு நல்ல விஷயங்களைப் போதிக்கும் விஷயத்திலும் பெற்றோர்கள் என்னவெல்லாம் செய்கின்றார்களோ அவற்றை அவர்கள் முதலில் தம்மிடம் சரியாக வளர்த்துக் கொள்வது மிக மிக முக்கியமானது. தான் சரியாக இல்லாமல், தங்கள் குழந்தைகள் மட்டும் இப்படி இப்படி இருக்க வேண்டும் என்று கண்டிக்கும் பெற்றோர்கள் மிகப் பெரிய தவறைச் செய்கின்றனர். தொழுகயை அந்த நேரத்தில் தொழுதல், செல்போன்களில் அதிக நேரம் செலவிடாதிருத்தல், கேமரா மற்றும் லேட்டஸ்ட் மாடல் போன்கள் (மெமரி கார்டு) உபயோகிப்பதை தடுத்தல், சினிமா மற்றும் சீரியல்கள் பார்ப்பதை முற்றிலும் தவிர்த்தல், உபரியான வணக்கங்களில் அதிக கவனம் செலுத்துதல் ஆகியவற்றைத் தாம் முதலில் கடைபிடிப்பதோடு அவற்றின் முக்கியத்துவம் குறித்து பிள்ளைகளுக்கு எடுத்துச் சொன்னாலே அவர்கள் அதனைப் புரிந்து செயல்படுத்த முன்வருவர்.

ஒவ்வொரு பெற்றோரும் தம் குழந்தைகள் கெட்ட பழக்கம் உள்ளவர்களாக இருக்கக் கூடாது என்றும் நல்லொழுக்கம் உடையவர்களாக வளர வேண்டும் என்றே நினைக்கின்றனர். அதற்கான முதல் படியாக அனைத்து நல்லொழுக்கங்களையும் தம்மிடமிருந்து செயல்படுத்திக் காண்பிப்பதோடு, அதற்காக செய்யும் முயற்சியில் செல்போன்களுக்கு முதலிடம் கொடுப்போம்.

- அபு நிஹான்

துபாய், ஐக்கிய அரபு அமீரகம்

சனி, 5 செப்டம்பர், 2009

நான் தான் “திருக்குர்ஆன்” பேசுகிறேன்

               என் இனிய இஸ்லாமிய சொந்தங்களே, உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவிட வேண்டுமென்பது தான் எனது ஆவல் ! அதற்காகத்தான் நானும் உங்களுக்காக இறைவனிட மிருந்து இறக்கி அருளப்பட்டிருக்கிறேன். நான் சுவர்க்கத்தின் லவ்ஹூல் மஹ்பூல் என்னும் ஏட்டில் வசித்து வருபவன். இவ்வுலகில் நான் முதன் முதலில் ஆரத்தழுவி கட்டி அணைத்து முத்தமிட்டது நமதருமை நாயகம் (ஸல்) அவர்களைத்தான் ! மனிதர்கள் எல்லோருமே என்னைத்தான் முத்தமிடுவீர்கள். ஆனால் நானோ எம்பெருமானாரை முத்தமிட்டவன்.


            என்னை சுமப்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பட்ட ஆரம்ப கட்ட சிரமத்தை நானும் எனது இறைவனுமே நன்கு அறிவோம். அதனை சாதாரண மனிதர்களாகிய நீங்கள் உணர்ந்து கொள்ள மாட்டீர்கள் ! இத்தனை நெருக்கடிக்குள்ளும் என்னை சுமந்து எனது பெருமைகளை உணர்ந்து எனது சகவாசம் உலகம் அழியும் வரைக்கும் வாழக்கூடிய தனது உம்மத்தினர் அனைவருக்கும் வேண்டும் என்பதற் காகத்தான் ஆரம்பத்தில் என்னை மாட்டுத் தோலிலும், மரக்கட்டை களிலும் பதிய வைத்து என்னை ஓர் பொக்கிஷமாக உங்களிடம் ஒப்படைத்துள்ளார்கள் நாயகம் (ஸல்) அவர்கள். ஆனால் நீங்களோ, எனது சகவாசத்தை விரும்பாமல் ஷைத்தானின் சகவாசத்தை விரும்பக்கூடியவர்களாக மாறி விட்டீர்கள். “கூடா நட்பு கேடாய் முடியும்” என்ற பழமொழி மறந்து விட்டதோ?

            என்னை மறக்க ஆரம்பித்ததும் எவ்வளவு இழிவுகளையும் சோதனை களையும் சந்தித்து வருகிறீர்கள். எனது சிறப்பைப் பற்றி ஒரே வரியில் சொல்வதென்றால் ”ஹுதன்லில் முத்தக்கீன்”இறையச்சமுடையவர் களுக்கு நேர்வழி காட்டக்கூடியவனாயிருக்கிறேன். யார் என்னை நம்பி பின்பற்றினாலும் நிச்சயம் நான் அவர்களை ஈருலகிலும் நல்லோர் களாய் வாழச் செய்வேன் என்பதை அளவு கடந்த உறுதியுடன் என்னால் கூற முடியும்.

            இன்று யார் யாருக்கோ பின்னால் போய்க்கொண்டிருக்கும் மனிதர்களே ! அவர்களெல்லாம் நாளை மறுமையில் உங்களுக்கு துணை நிற்பவர்கள் என நினைத்தால் ஏமாந்து தான் போவீர்கள். ஒரு காலத்தில் வீடு தோறும் புனிதமானவனாக மதிக்கப்பட்டு உயர்ந்த ரக ஆடைகளை கொண்டு என்னை மூடி வீட்டின் உயர்வான இடத்தில் எனக்கென்று தனியொரு இடம் அமைத்து அதில் வைத்து அழகு பார்த்த நீங்கள் இன்று உங்கள் வீட்டு குழந்தைகளின் பள்ளிக்கூட புத்தகங்களோடும், அறுவருக்கத்தக்க புகைப்படங்களை சுமந்து வரும் நாலாந்தர புத்தகங்களோடும், மார்க்கத்தின் பெயரால் மனிதர்கள் தம் மனம் போன போக்கில் கண்டதையும் எழுதிவரும் மற்ற நூல்களுடனும் சேர்த்தே என்னையும் வைத்து விட்டீர்களே ! இது நியாயமா?

               டி.வி. என்ற இப்லீஸின் நாசகார கவர்ச்சி பெட்டிகள் வருவதற்கு முன்பெல்லாம் வீடுதோறும் குடும்ப பெண்கள் அதிகாலையே எழுந்து சுபுஹு தொழுகையை முடித்து விட்டு என்னை கரத்தில் ஏந்தி கம கமக்கும் சந்தன ஊதுபத்தியின் புகையில் எனது வசனங்களை ஓதும் போது வெளியாகும் அந்த இனிமையான ஓசை தென்றல் காற்றோடு கலக்கும் ரம்மியம் தானே, அன்றைய மக்களின் சங்கீதமாய் இருந்தது. ஆனால் இன்றோ நள்ளிரவு வரை டி.வி.யில் தொடர் (சீரியல்) களை பார்த்து விட்டு உறங்குவதால் பள்ளியில் கூறப்படும் அதிகாலை பாங்கின் ஓசைக்கு எதிர் ஓசையாய் உனது குறட்டை சத்தம் வெளி யாவது இறைவனின் கோபத்திற்குரியதல்லவா? ஓ ….. ஜெய்னம்பு பீவியே … படைத்தவனையே மறந்து விட்ட நீ என்னையா கையில் எடுத்து ஓதி விடப் போகிறாய் ?

             எனதருமை தெரியாத மனிதர்களே ! என்னைப்பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை கேளுங்கள்;- “திருக்குர்ஆனிலிருந்து சிறிதளவு கூட தம் உள்ளத்தில் மனனம் இல்லாதவர் பாழடைந்த வீடு போன்றவர் ஆவார்.”

(அறிவிப்பாளர்: ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), நூல்: திர்மிதி)

பார்த்தாயா? நான் இல்லாத இதயம் பாழடைந்த வீட்டைப் போன்ற தாகி விடுகிறது.

               என்னைப் பார்த்தால் அதற்கு ஒரு கூலி, ஓதினால், பிறர் ஓத கேட்டால், மனனம் செய்தால் என ஒவ்வொன்றுக்கும் தனிதனி அந்தஸ்தில் இறைவனின் நற்கூலிகள் உங்களுக்கு கிடைக்கும் என்பதை மறந்து விட்டீர்களா? வருடம் முழுவதும் என்னை நினைத்து வாழ்ந்த நீங்கள், இன்றோ வருடத்தில் ஒரு மாதம் ரமலானில் மட்டுமே நினைக்க கூடிய பச்சோந்திகளாய் மாறி விட்டீர்கள்.


            ஒவ்வொரு நாளும் குளித்து சீவி சிங்காரித்து சுத்தம் செய்து கொள்ளும் நன்றி கெட்ட மனிதனே ! என்னை மட்டும் உன் வீட்டு பரணி மேல் தூசியடைய வைத்து விட்டு ரமலான் வரும் போது மட்டும் சுத்தம் செய்து கையிலெடுப்பது ஓரவஞ்சனையில்லையா? உன் போன்ற சந்தர்ப்ப வாத வேடதாரிகளை நாளை மறுமையில் எனது இறைவனுக்கு முன்பாக தோலுரித்துக் காட்டுவேன். என்பதை நினைவில் வைத்துக் கொள் !

              ஒரு நேரத்தில் (ஒளு) சுத்தமில்லாமல் என் அருகில் வருவதற்கே பயந்து நடுங்கிய மனிதன் இன்று குளிப்பு கடமையான நிலையிலும் கூட என்னை சர்வ சாதாரணமாக தொடுவதற்கு துணிந்து விட்ட கன்றாவியை கண்டு சகித்துக் கொள்ள முடியவில்லை. ”லாய மஸ்ஸுஹு இல்லல் முதஹ்ஹரூன்” ( தூயவர்களைத் தவிர மற்றெவரும் அதை தொட மாட்டார்கள் ) என்ற இறை வசனத்தை அவமரியாதை செய்கின்ற பாவத்தை எந்தப் பாவிப்பயல் வழிகாட்டி கொடுத்தானோ? அவன் ஈருலகிலும் நாசமடைவது திண்ணம் !

                   தமிழக முஸ்லிம்களாகிய நீங்கள் தான் என் சிறப்பை உணராமல் என்னை உதாசீனப்படுத்தி வருகிறீர்கள். ஆனால் ஒரு வகையில் மலேசியா நாட்டு முஸ்லிம்களை நினைத்து நான் பெருமிதம் கொள்கிறேன். ஆமாம் அவர்கள்தான் ஆண், பெண் என்ற பாகுபாடில் லாமல் என்னை தலையில் வைத்து கொண்டாடி வருகிறார்கள். மலேசியாவின் கோலா கங்ஸார் என்ற ஊரில் நடக்கின்ற திருமணங் களின் போது திருமணத்திற்கு முதல் நாள் இரவு ஒரு நிகழ்ச்சி நடக்கும்.

             பெண் வீட்டில் மணமகன் வீட்டார் உட்பட உறவினர் அனைவரும் கூடி இருப்பார்கள். அச்சம், மடம், நாணம் என்று அந்த காலத்தில் சொல்வார்களே, அத்தனையும் ஒருங்கே பொதிந்த நிலையில் மணப் பெண் வந்து சபையில் அமர்வாள். பிறகு அவளுக்கு முன்பாக வைக்கப் பட்டிருக்கும் திருக்குர்ஆனாகிய என்னை புரட்டி தஜ்வீத் என்ற விதி முறைப்படி எனது வசனங்களை அட்சரம் பிசகாமல் ஓதி முடிப்பாள். பின்னர் எல்லோருக்கும் இனிப்பு வழங்குவார்கள். அதை விட ஓதப் பட்ட தித்திக்கும் எனது வசனத்தை கேட்ட மன நிறைவோடு வந்தவர் கள் வீடு திரும்புவார்கள்.

             மணமகளுடைய அழகைவிட, கற்ற அறிவைவிட, பெற்றிருக்கும் செல்வத்தைவிட எனது வசனங்களை பிழையின்றி ஓதுவதில் தான் மணப்பெண்ணின் சிறப்பு இருக்கிறது என்று மலேசியா முஸ்லிம்கள் கருதுகிறார்கள். திருக்குர்ஆனை ஓதுவதில் தான் அந்த எதிர்காலத்தாய், குலவிளக்கு, குடும்பத் தலைவியின் பூரணத்துவம் இருக்கிறது என மலாய் மக்கள் முழு நம்பிக்கையுடன் வாழ்கிறார்கள்.

            எனதருமை தமிழ் முஸ்லிம் சமுதாயமே, பார்த்தாயா? மலாய் முஸ்லிம்களும் நானும் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறோமென்று ! பெண் பார்க்கும் படலத்தில் கூட அங்கு என்னைத் தான் முன்னிலைப் படுத்துகிறது மலாய் முஸ்லிம் சமுதாயம். அந்நாட்டில் தான் என்னை ஓதுவதை பெண்களுக்கு ஒரு முக்கியமான அம்சமாக ஆக்கி வைத்திருக்கிறார்கள். அங்கு வாழும் தாய்க் குலத்தினரின் முணு முணுப்பும், குழந்தைகளின் தாலாட்டும் கூட எனது வசனங்களாக இருப்பதினாலேயே அகில உலக கிராஅத் போட்டியில்கூட மலாய் மக்கள் அரபுகளை விட சிறப்பாக ஓதி உயர்வான பரிசுகளை பெற்று விடுகிறார்கள்.

              ஆனால் நீயோ சினிமா பாடல்களை பாடி உன் குழந்தைகளை தூங்க வைக்கிறாய் ! உன் பிள்ளை கண் விழித்து பாடுவதும் சினிமா பாடல் களாகவே ஆகிவிட்டது. உனது முணு முணுப்பிலும் கூட சினிமா, டி.வி. தொடர் பற்றியேத் தான் போய்க்கொண்டிருக்கிறது. அதனால் தான் உனது வாழ்க்கையும் ஒரு டிராமா போல் முடிந்து விடுகிறது ! எல்லாம் அந்த இப்லீஸ் படுத்தும் பாடுதான் !

               இவ்வருட ரமலான் வரைக்கும் நான் உங்களது போலித்தனமான பக்திக்குரிய செல்லப் பிள்ளையாக் இருப்பேன். பின்னர் வழக்கம் போல பரணி மீது படுத்துவிடுவேன். அடுத்த வருட நோன்புவரை ! அறிவுள்ள வர்களுக்கு மட்டும் உறுதியாக ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். யார் என்னை தங்களது நெஞ்சத்தில் வைத்து பாதுகாக்கிறார்களோ? அவர் களின் மரணத்திற்குப்பின் மண்ணறை வாழ்க்கையின் போது வேதனையை விட்டும் கொடிய விஷமுள்ள பாம்பு, தேள் போன்ற ஜந்துகளின் தீங்குகளை விட்டும் அவர்களை நான் பாதுகாப்பேன். நாளை மறுமையிலும் இறைவனிடம் பரிந்துரை செய்வேன்.

              என்னை சுமந்து வாழும் இதயங்கள் மட்டுமே ஈருலகிலும் ஒளி மயமாக இருக்கும். என்னைப் பற்றி இவ்வளவு கூறிய பிறகும் தினந் தோறும் நீ என்னை உன் இதயத்தில் சுமக்க மறுத்தால் நஷ்டம் எனக்கல்ல, உனக்குத்தான் என்பதை நினைவில் வைத்துக்கொள் !

ஆக்கம்;- மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி

புதன், 2 செப்டம்பர், 2009

நோன்பு மிகச்சிறந்த இயற்கை மருத்துவம்

        மனிதனின் நலத்திற்கும் வளத்திற்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்வன இஸ்லாமியக் கொள்கைகள். அனைத்தையுமறிந்த அல்லாஹ் வினால் வழங்கப்பட்ட இறை கொள்கைகள். குறுகிய இவ்வுலக வாழ்விற்கும் முடிவற்ற மறுமை வாழ்விற்கும் உதவுவதாக அமைக்கப் பட்டுள்ளன.

       மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த வாழ்வாக இவ்வுலக வாழ்வும் எக்கண்ணும் கண்டிராத, எச்செவியும் கேட்டிராத இன்ப வாழ்வாக மறுமை வாழ்வும் ஒவ்வொரு மனிதனுக்கும் அமைந்திடல் வேண்டும். இக்குறிக்கோளை அடைய விழைவதே மனிதனின் கடமை யாகும். இதற்கு உதவும் ஒரே நெறி அல் – இஸ்லாம் மட்டுமே. ஏனெனில் மனிதன் பின்பற்றுவதற்கு எளிதாகவும் ஏற்றம் மிகுந்ததாக வும் அதன் கொள்கைகள் மிளிர்கின்றன. முரண்பாடற்ற தன்மையைக் கொண்டவையாகத் திகழ்கின்றன.




இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையான ஐம்பெருங்கடமைகள் – கலிமா, தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் – மனிதகுலத்தின் ஒருமைப் பாடு, சமத்துவம், சகோதரத்துவம், உலக அமைதி, பொருளாதாரப் பங்கீடு ஆகியவற்றின் திறவுகோலாக உள்ளன.



’இறைவன் ஒருவனே, அவனே வணங்குவதற்குரியவன்’ என ஏற்கும் பொழுது பிறப்பு, தோல், நிறம், பேசும் மொழி, வாழுமிடம் ஆகிய வற்றால் தோற்றுவிக்கப்படும் வேற்றுமைகள் மறைந்து விடுகின்றன. ஐவேளை கூட்டுத்தொழுகை, உயர்வு, தாழ்வு, செல்வந்தர், வறியவர் என்ற வேறுபாட்டை நீக்கி விடுகிறது. ரமளான் நோன்பு பசியை உணர வைத்து, சக மனிதர்களின் சிரமத்தை உணர்த்தி விடுகிறது. ஸகாத் என்ற ஏழைவரி (வருமானத்தில் ஆகுமான செலவு போக மீதமுள்ள பணத்தில் ) செல்வம் ஓரிடத்தில் தங்காமல் பகிர்ந்து கொள்ளும் நிலையைத் தோற்றுவிக்கிறது. ஹஜ் மனித சகோதரத்துவத்தையும், சமத்துவத்தையும், அமைதியையும் உலகுக்கு எடுத்துக்காட்டி விடுகிறது.



மறுமை வாழ்வு, நீதித் திருநாள், கேள்வி கணக்கு சுவனம் என்பன பற்றி மனிதனுக்கு அறிவுறுத்தி நல்வழிப்படுத்துவதற்கு உதவுவதாக திருமறையும், திருநபி (ஸல்) அவர்களின் வாழ்வும் வாக்கும் அமைந் துள்ளன. இவற்றில் மூன்றாவது கடமையான ரமளான் நோன்பு பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.



ரமளான் என்ற சொல் கரித்தல், சுட்டெரித்தல் என்ற பொருள் கொண்டது. விறகை தீ எரிப்பது போல நோன்பு பாவங்களை எரித்து விடுகிறது என்பதால் நோன்பு கடமையாக்கப்பட்ட இஸ்லாமிய ஆண்டின் ஒன்பதாவது மாதம் ரமளான் என்றழைக்கப்படுகிறது. இம் மாதத்தை அல்லாஹ்வின் மாதம், பொறுமையின் மாதம், ஈகையின் மாதம் என நபி (ஸல்) அவர்கள் புகழ்ந்து கூறியுள்ளார்கள்.



முந்திய சமுதாயத்தவர்களுக்கு விதிக்கப்பட்டது போல, நபி (ஸல்) அவர்களின் சமுதாயத்தினருக்கு நோன்பு விதிக்கப்பட்டு, ரமளான் மாதம் பகற்பொழுதில் நோன்பு நோற்பதைக் கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பரிசுத்தவான்களாகலாம் (2:183,185) என வான்மறை விளக்குகிறது.



நபிமார்களுக்கு வழங்கப்பட்ட ’ஸுஹுபுகள்’ என்ற வேதக்கட்டளை களும், தவ்ராத், ஸபூர், இன்ஜீல், திருக்குர்ஆன் ஆகிய நான்கு வேதங் களும் வழங்கப்பட்ட புனித மாதமாக ரமளான் அமைந்துள்ளது. மனிதர் களுக்கு நேர்வழியைக் காட்டி நன்மை, தீமைகளைப் பிரித்தறிவிக்கும் திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதமாக ரமளான் இருப்பதால், அம்மாதத்தை கடமையான நோன்பு நோற்கும் காலமாக அல்லாஹ் அறிவித்துள்ளான். (2:185) ஹிஜ்ரி 2ம் வருடம் முதல் ரமளான் நோன்பு கட்டாயக் கடமையாக்கப்பட்டது.



உணவு, தண்ணீர், உடல் இச்சை ஆகியவற்றை பகற்காலங்களில் தவிர்ப்பது என்பது மட்டும் நோன்பின் நோக்கமல்ல. நோன்பு நோற்றிருக்கும் போது பொய், புறம் பேசுவது, தீய பார்வை, தீயன கேட்டல், தீய உணர்வுகள் ஆகியவற்றை விலக்கி வைப்பதும் கட்டாய மாகும். இதனைத் தவிர்க்காமல் உணவையும் பானத்தையும் விட்டிருப் பதால் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தேவையுமில்லை என நபி (ஸல்) அவர்களி கூறியுள்ளார்கள்.

ஒரு மாத நோன்பு, உடற்கழிவுகளை நீக்கி, இரைப்பை, குடல் முதலியனவற்றைப் புதுப்பிக்கிறது. அவற்றின் பணிகள் சிறக்க உதவு கின்றன. உடல் பருமன் குறைவதற்கு வழியேற்பட்டு இரத்தக்கொதிப்பு, இதய நோய்கள் போன்றவை தாக்காமல் உடல் காக்கப்படுகிறது,


உணர்வுகள் கட்டுப்படுத்தப்பட்டு மிருக உணர்வுகள் களைந்தெறியப் படுகின்றன. உணவு, பானம், உறக்கம் ஆகியவற்றில் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் தோற்றுவிக்கிறது. நோன்பு நோற்பவரின் உள்ளத்தில் உயர்ந்த இறையுணர்வைத் தூண்டுகிறது. அல்லாஹ்வின் அன்பைப் பெற்றுத் தருகிறது.



வீண்பேச்சு, பொய், புறங்கூறல், சண்டை – சச்சரவு, காமப் பார்வை முதலியனவற்றைத் தடுத்து, ஒழுக்க உணர்வுகளைப் பரிணமிக்க செய்வதால் நோன்பு ஒரு கேடயம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ’பசித்திருத்தல் ஓர் அருமருந்து’ (லங்கனம் பரம ஒளஷதம்) என்பது முதுமொழி.



தனித்திருப்பதும் பசித்திருப்பதும் விழித்திருப்பதும் ஆன்மீக உயர் வுக்கு வழிகாட்ட வல்லன. பிராணிகள் நோயுற்றால் இறை தின்ன மறுத்து விடுகின்றன. விரைவாக நலம் பெற அது உதவுகிறது. மனிதனுக்கும் அது பொருந்தும். ஏனெனில் வயிறு ஒரு கெட்ட பாத்திரம். உடல் நோய்களுக்கு அதுவே காரணமாகி விடுகிறது.



‘வயிறு நலமுடன் பேணப்பட்டால் உடல் நலமும் பேணப்படுகிறது’ என்பது நபிமொழியாகும்.(பைஹகீ) “ நம்பிக்கையாளர் ஒரு வயிற்றில் உண்ணுகிறார். இறைமறுப்பாளர் ஏழு வயிற்றில் உண்ணுகிறார்” என்பதும் நபிமொழி (திர்மிதீ) அதாவது அளவுக்கதிகமாக உண்ணுகிறார் என்பது கருத்து.



“உண்ணும்பொழுது வயிற்றில் மூன்றில் ஒரு பகுதி உணவுக்கும். மற்றொரு பகுதி தண்ணீருக்கும், இன்னொரு பகுதி காலியாகவும் இருக்கட்டும்” என்பது நபிமொழியாகும் (திர்மிதீ) அதுவே உணவின் அளவாகும்.



“உண்ணுங்கள், பருகுங்கள், மிதமிஞ்சி விடாதீர்கள் (குர்ஆன் 7:31) என்ற மாமறையின் வழியைப் பின்பற்றி வாழ்ந்த வழிகாட்டிகளான பெரு நபித்தோழர்கள் நோயற்றவர்களாக வாழ்ந்திருந்தனர் என வரலாறு பதித்திருக்கிறது. அளவின்றி உணவுண்டு, உடல் பருத்து விடுவதே பெரும்பாலான நோய்களுக்குக் காரணமாகி விடுகிறது


எனவே பசித்திருப்பதும் பசித்த பின்பே உண்ணுவதும் நலம் தரும் செயற்களாகும். ஏனெனில் நோன்பு என்ற நற்செயல் உடலுக்கு மிகுந்த நலனை வழங்குகிறது.



“நோயுற்றவரிடமிருந்து உணவை நீக்கி விடுங்கள். இப்பொழுது பட்டினி கிடப்பது நோயுற்றவர் அல்ல; அவருடைய நோயே” என அமெரிக்க மருத்துவர் டியூவே கூறுகிறார்.


மற்றொரு அமெரிக்க மருத்துவர் டாக்டர் எல்ஸன் எம். ஹாஸ் என்பவர் கூறுகிறார் (நோய்த் தடுப்பு மையத்தின் இயக்குநர்)



“நோன்பு மிகச்சிறந்த இயற்கை மருத்துவம். மிகத் தொன்மையான உலகளாவிய நோய் நிவாரணி. 15 வருடங்களுக்கு முன்பு நான் நோயுற்ற பொழுது உணவைத் தவிர்த்திருந்ததே என் உடல் நலம் தேற உதவியது எனக் கண்டுபிடித்தேன். புதிய சக்தி உடலில் பாய்வதை உணர்ந்தேன். உடலியக்கத்தில் ஓர் உத்வேகம் பளிச்சிடுவதையும் உணர்ந்து கொண்டேன். நலம் தரும் நோன்பு பல நோய்களைத் தடுக்கிறது” மேலும் கூறுகிறார்.



“அமெரிக்கார்களின் பெரும்பாலான நோய்களுக்குக் காரணம் உணவுக் கட்டுப்பாடு இல்லாததேயாகும். நோன்பு என்பதே அவர்களுக்குத் தெரியாத ஒன்றாகும். உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, சர்க்கரை நோய் முதலியன தோன்றுவதற்கு உணவுக் கட்டுப்பாடின்மையே காரணமாகும். நோன்பு இவற்றைத் தடுக்கும் கருவியாக உள்ளது.”



“நோன்பு உடல் கழிவுகளை நீக்க உதவுகிறது. தசைகளுக்கு வலுவூட்டுகிறது. உடலியக்கத்தை சமநிலைப்படுத்துகிறது.”


“பல மணிநேரம் பசித்திருப்பதன் மூலம் உடற் செல்கள் புத்துணர்வு பெறுகின்றன. சிதைவுகள் சீர் செய்யப்படுகின்றன. ஆகவே தான் மனித குலம் தோன்றியதிலிருந்து ஏதாவதொரு வகையில் நோன்பு நோற்பது பின்பற்றப்பட்டு வந்துள்ளது.”



அனைத்தையும் அறிந்த அல்லாஹ், ரமளான் மாதத்தில் ஒரு மாத காலம் நோன்பு நோற்பதைக் கடமையாக்கி, நம் உடல் நலம் பேண உதவி செய்துள்ளான் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். நற்செயல்களுக்கு நன்மை வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பாளிக்கு அல்லாஹ்வே நன்மை வழங்குகிறான். “நோன்பு எனக்காக நோற்கப் படுகிறது அதற்கு நானே கூலி வழங்குகிறேன்” என அல்லாஹ் கூறுகிறான் ‘ரய்யான்’ என்ற தனி சுவனமே நோன்பாளிகளுக்கு மட்டும் காத்திருக்கிறது.


உடல் நலத்தை வழங்கி, நீண்ட ஆயுளையும் தந்து, அல்லாஹ்வின் அன்பைப் பெற்றுத் தரும் ரமளான் நோன்பு அல்லாஹ் நமக்கு வழங்கி யுள்ள மிகப்பெரும் நற்பேறே !



“ரமளான் மாதத்தை கண்ணியப்படுத்திக் கொண்டிருக்கும் வரை என் சமூகத்தார் இழிவுபடுத்தப்பட மாட்டார்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறிய சொற்களை நினைவில் கொள்வோம்

நன்றி : சிந்தனை சரம்

இராஜகிரி பைத்துல்மால் ©2011 rajaghiribaithulmal.blogspot.com. All Rights Reserved. Hosted by Rajaghiribaithulmal is Designed and Developed by rajaghiri.online