வட்டியில்லாக் கடன்,ஜக்காத் வசூல்,ஃபித்ரா வசூல்,சமூக நலத்திட்டங்கள்,மாணவர்களுக்கு வழிகாட்டுதல்

விமான நிலைய விவரங்கள்

விமான நிலைய வருகை புறப்படு விவரங்கள் http://indiaairport.blogspot.com/

ஞாயிறு, 27 ஜூன், 2010

ராஜகிரி :தொலைபேசியும் இஸ்லாமிய பெண்களும்....

ராஜகிரி :தொலைபேசியும் இஸ்லாமிய பெண்களும்....


முஸ்லிம் பெற்றோர்களே, சகோதரர்களே! உங்கள் பெண் குழந்தைகளயும், நம் சகோதரிகளை நாம் பாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்வதும், கயவர் கூட்டத்தின் சதியை முறியடிப்பதும், நமது கடமையாக இருக்கின்றது. இதனை நாம் காலம் தாழ்த்தாமல் உடனே செய்ய வேண்டும் தற்சமயம் அதிக அளவில் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாத ஆடவருடன் ஓடிப்போவதும், மதம் மாறுவதும் நிகழ்ந்து வருகின்றது.



இத‌ற்கான‌ முழுப்பொறுப்பையும் பெற்றோர் ஏற்க‌ வேண்டி இருக்கிற‌து.


இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணிகள்:


1. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை முறையாக கவணிக்க தவறுவது.


2. அளவிற்கு அதிகமாக பணம் கொடுப்பது. வசதி உள்ளது என்பதற்காக மொபைல் போன் போன்ற சாதனங்களை வாங்கி கொடுப்பது.


3. மொபைல் ஃபோனில் தங்கள் பெண் குழந்தைகள் யாருடன் பேசுகின்றார்கள், என்ன எஸ்.எம்.எஸ் வருகின்றது போன்றவற்றை கவணிக்காமல் இருப்பது.

வியாழன், 24 ஜூன், 2010

ராஜகிரி; எச்சரிக்கை இறுதி நாள்(கியாமத்) நெருங்குகிறது!!

ராஜகிரி; எச்சரிக்கை இறுதி நாள்(கியாமத்) நெருங்குகிறது!!

உலக முடிவு நாள் எப்பொழுது சம்பவிக்கும் என்று ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு காலகட்டத்திலும் தனக்குள் கேள்வி எழுப்பி கொண்டே இருந்தான். அதற்கு தீர்வாக மனிதர்களுக்கு இறுதிநாளின் அடையாளங்களை நினைவுபடுத்துகிறோம்.

பொறுப்புடனும், பொறுமையுடனும் படித்து மரணத்தைப் பற்றியும், மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையைப் பற்றியும் பயந்து, சிந்தித்து உலக இறுதி நாளின் நெருக்கத்தில் நாம் இருக்கிறோம் என்பதை நினைவில் நிறுத்தி இறைவனுக்கு மட்டுமே கட்டுப்பட்டு நடப்போமாக என்று எங்களையும், உங்களையும் கேட்டுக்கொண்டு ஆரம்பம் செய்கிறோம்.



இந்த உலகம் நிரந்தனமானது அல்ல. பிறந்ததெல்லாம் இறந்தே ஆகவேண்டும் என்ற நியதியுடைய இவ்வுலகத்தின் அழிவை பற்றி விஞ்ஞானிகள் கூறும் பொழுது:- “உலகின் அழிவு துவங்கிவிட்டது.

நாம் ஒரு மாய நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்றோம். மனித இனம் என்ற சுவடே இல்லாமல் அழிந்தொழியும். பூமியானது தூள்தூளாகி அனைத்து மூலக்கூறுகளும், அணுக்களும் தூசியாகி விண்வெளியில் பறக்கும்” என்று விஞ்ஞானிகள் விஞ்ஞான வளர்ச்சியின் உச்சாணியில் இருந்து கொண்டு ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார்கள்.

புதன், 23 ஜூன், 2010

ராஜகிரி : தரிசனம் செய்யப்படும் இடங்கள்?

ராஜகிரி : தரிசனம் செய்யப்படும் இடங்கள்?


ஸிரியா, இராக், எகிப்து இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும், இவையல்லாத இன்னும் பல நாடுகளிலும் நாம் காணுகின்ற, கட்டப்பட்ட கப்றுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் எதனையும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை. கப்றின் மீது கட்டிடம் கட்டுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளது பின்வருமாறு அமைந்துள்ளது.

‘கப்றின் மீது சாந்து சுண்ணாம்பு பூசுவதையும், அதன் மீது அமர்வதையும், அதன் மீது கட்டிடம் கட்டுவதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்’ ஆதாரம்: முஸ்லிம்

மேற்காட்டிய ஹதீஸில் வந்த ‘தஜ்ஸீஸ்’ என்ற அரபு வார்த்தைக்கு சாந்து அல்லது சுண்ணாம்புகளின் கொழுப்புக்களைப் பூசுதல் என்று பொருள்படும்.

இமாம் திர்மிதி (ரஹ்) அவர்களின் ரிவாயத் ஒன்றில் ‘கப்றின் மீது எழுதப்படுவதையும் நபியவர்கள் தடை செய்துள்ளார்கள்’ என்று பதியப்பட்டுள்ளது. எழுதப்படுவது என்றால் அல்குர்ஆன் வசனம், ஹதீஸ் வாக்கியம், பாடல்கள், கப்றில் அடங்கியவரின் பெயர் போன்றவைகளாகும்.

சனி, 19 ஜூன், 2010

ராஜகிரி : ஜூலை 10 -ல் மிஹ்ரஜ் இரவு

ராஜகிரி : ஜூலை 10 -ல் மிஹ்ரஜ் இரவு

ரஜப் மாத முதல் பிறை ஜூன் 13 ஆம் தேதி தமிழகமெங்கும் தென்படாததால், ஜூன் 14 ஆம் தேதி மாலை ரஜப் மாத முதல் பிறையாக கணக்கிட்டு, ஜூலை 10 ஆம் தேதி மாலை மிஹ்ரஜ் இரவு என தஞ்சாவூர் மாவட்ட அரசு டவுன் காஜி டி. சையத் காதர் ஜூûஸன் புகாரி ஆலிம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




வியாழன், 17 ஜூன், 2010

ராஜகிரி மின்வெட்டை எதிர்த்துச் சாலை மறியல் - தடியடி பொய் வழக்குகள் - உண்மை அறியும் குழு அறிக்கை!

ராஜகிரி மின்வெட்டை எதிர்த்துச் சாலை மறியல் - தடியடி பொய் வழக்குகள் - உண்மை அறியும் குழு அறிக்கை!


தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் தஞ்சையிலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது ராஜகிரி கிராமம். இச்சாலையோர கிராமத்தில் வசிப்பவர்களில் பெரும்பாலோனார் (சுமார் 85 சதவீதம்) முஸ்லிம்கள். சுமார் 10 சதவீதம் தலித்கள். கடைதெருவிலுள்ள கடைகளிலும் பெரும்பாலானவை முஸ்லிம்களுடையவை.


இன்று தமிழகம் முழுவதிலும் கடும் மின்வெட்டு உள்ளதை அறிவோம். நகரங்களில் அறிவிக்கப்பட்ட மின்வெட்டு சுமார் இரண்டு முதல் மூன்று மணிநேரமும், அவ்வப்போது அறிவிக்கப்படாத மின்வெட்டுக்களும் செயல்படுத்தப்படுகின்றன. கிராமப்புறங்களில் மேலும் அதிக அளவில் மின் வெட்டுக்கள் உள்ளன. கிராமப்புறங்களை பொறுத்தமட்டில் எந்த நேரத்தில்; மின் வெட்டு மேற்கொள்ளப்படும் எனத் தெரியாத அளவிற்கு நிலைமைகள் உள்ளன.


ராஜகிரி கிராமத்தில் சென்ற மாத இறுதி வாரத்தில் நாள்தோறும் கிட்டத்தட்ட 10மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட பகல் முழுவதும், பல நேரங்களில், இரவுகளிங்கூட மின்வெட்டு இருந்துள்ளது. அருகிலுள்ள வங்காரம்பேட்டை முதலான கிராமங்களில் மின்சாரம் இருந்தபோதிலும்கூட ராஜகிரியில் மின்வெட்டு மேற்கொள்ளப்பட்ட நிலை அங்குள்ள மக்களுக்கு ஆத்திரத்தை வரவழைத்தது பலமுறை அவர்கள் மின்வாரிய அதிகாரிகளை உள்ளுர் அளவிலும் வட்ட, மாவட்ட அளவிலும் நேரிலும், தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு பேசிய போது யாரும் பொறுப்பாக பதில் சொல்லவில்லை. கிராமப்புறம் என்றால் அப்படித்தான் இருக்கும் “மேலதிகாரியிடம் வேண்டுமானால் சொல்லிப்பாருங்கள்” முதலான பதில்களையே தஞ்சையிலுள்ள உயர் அதிகாரி (ளுஊநு)வரை கூறியுள்ளார்கள். அருகிலுள்ள மற்ற கிராமங்களைக் காட்டிலும் தமது கிராமம் பெரிதும் பாதிக்கப்படுகிறது என ராஜகிரி மக்கள் கருதுவது குறித்து அவர்கள் யாரும் விளக்கம் அளிக்கவோ, அல்லது அது குறித்து கரிசனம் காட்டவோ, குறைகளை களையவோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

திங்கள், 7 ஜூன், 2010

ராஜகிரி : வட்டி சமுதாயத்தின் சாபக்கேடு!

ராஜகிரி : வட்டி சமுதாயத்தின் சாபக்கேடு!



முன்னுரை: சமீபத்தில் எத்தனையோ நாடுகள் பொருளாதாரத்தில் மாபெரும் வீழ்ச்சியைக் கண்டன. அவற்றுக்கு மூலகாரணம் வட்டியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கையேயாகும்.

உலகின் மிகப்பிரபல்யமான சர்வதேச வர்த்தக நிறுவனங்கள் சின்னஞ்சிறிய அதிர்வுகளைக்கூட தாக்குப்பிடிக்க முடியாமல் முழுவதும் முடங்கிப்போயின, இதற்கு காரணம் வட்டி அடிப்படையிலான வர்த்தகமேயாகும். பல குடும்பங்கள் அழிந்து போனதற்கும் வட்டியே முதற்க் காரணமாகும். இஸ்லாம் வட்டியை முற்றாக தடை செய்கிறது. அவற்றை தெரிந்து கொண்டு நமது வாழ்வில் கடைபிடிப்பது அவசியமாகும்.

1. வட்டி என்றால் என்ன?

அசலுக்கு அதிகமாக வாங்கும் தொகையே வட்டி எனப்படும். இதை கீழ்காணும் குர்ஆன் வசனம் விளக்குகிறது. '...ஆயினும் நீங்கள் (வட்டி வாங்கியதைப் பற்றி) மனம் திருந்தி மீண்டு விட்டால், உங்கள் பொருளின் அசல் தொகை உங்களுக்கு உண்டு...' (அல்குர்ஆன் 2:279)

இரட்டித்து அதிகரிப்பது வட்டியின் குணம். இதை அல்லாஹ் தனது திருமறையில் சொல்கிறான்.


'ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்...' (அல்குர்ஆன் 3:130) 

செவ்வாய், 1 ஜூன், 2010

ராஜகிரி: ஏகஇறைவனின் திருப்பெயரால்....தீவுத்திடலை நோக்கி அணி அணியாய்..

ராஜகிரி:  ஏகஇறைவனின் திருப்பெயரால்....


தீவுத்திடலை நோக்கி அணி அணியாய்..


இந்திய மண்ணை நேசித்து இந்தியாவுடன் தங்கிக் கொண்ட முஸ்லீம்கள் இந்திய அரசாங்கத்தால் கை விடப்பட்டக் காரணத்தால் பொருளாதாரத்தில் நலிவடைந்து வாழ்வதற்கு வழி தெரியாமல் அதிகமானோர் தங்களை கூலி வேலைகளில் ஈடுபடுத்திக் கொண்டு தங்களின் பிள்ளைகளையும் (வறுமையின் காரணத்தால் கல்வியைக் கொடுக்க முடியாமல்) பிஞ்சு வயதிலேயே கூலி வேலைகளில் ஈடுபடுத்தினர்.


வீடு வாசல்கள், நில புலன்கள், ஆபரணங்கள் போன்றவற்றில் சிறிதை வைத்திருந்தவர்கள் அவற்றை விற்று அரபு நாடுகளுக்கு தங்களுடைய பிள்ளைகளை பயணம் அனுப்பி வைத்தனர். அதற்கும் வசதி பெறாதவர்கள் இஸ்லாம் தடை செய்த வட்டிக்குப் பணம் வாங்கியேனும் பயணம் அனுப்பி வைத்தனர்.


அவ்வாறு சென்றவர்களில் ( வறுமையின் காரணத்தால் படிக்க முடியாதவர்கள் பிரபல கம்பெனிகளில் உயர் பொறுப்புகளில் அமர முடியாமல் ) அங்கும் குறைவான சம்பளத்தில் இதே கூலி வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இன்னும் ஒப்பந்தப் படிவத்தில் குறிப்பிடப்பட்ட வேலையும், சம்பளமும் கொடுக்காமல் குறைவான சம்பளம் கொடுத்து, தங்குமிட வசதியும் முறையாக செய்து கொடுக்காமல் அலைக்கழிக்கப்பட்டனர்.

இராஜகிரி பைத்துல்மால் ©2011 rajaghiribaithulmal.blogspot.com. All Rights Reserved. Hosted by Rajaghiribaithulmal is Designed and Developed by rajaghiri.online