வட்டியில்லாக் கடன்,ஜக்காத் வசூல்,ஃபித்ரா வசூல்,சமூக நலத்திட்டங்கள்,மாணவர்களுக்கு வழிகாட்டுதல்

விமான நிலைய விவரங்கள்

விமான நிலைய வருகை புறப்படு விவரங்கள் http://indiaairport.blogspot.com/

வியாழன், 28 ஜனவரி, 2010

ராஜகிரி :வேகமாகப் பரவும் இனிய மார்க்கம் இஸ்லாம்


ராஜகிரி :வேகமாகப் பரவும் இனிய மார்க்கம் இஸ்லாம்


மேற்கத்தியக் கலாச்சாரம் முன்வைக்கும் வாழ்க்கை முறையினால் நம்பிக்கை இழந்து போய்14,000த்திற்கும் அதிகமான பிரித்தானியர்கள் இஸ்லாத்தில் இணைந்துள்ளதாக ஆதாரப் பூர்வமான ஆய்வுகள் இப்போது வெளிவந்துள்ளன.
 "
இவ்வாறு இஸ்லாத்தில் இணைந்துள்ளவர்களில் பல பிரபலங்கள் இருப்பது, முஸ்லிம்கள் தீவிரவாதிகள் எனும் பொய்ப் பிரச்சரத்திற்கும் அவதூறுக்கும் ஆளாகி அச்சமுற்ற நிலையில் வாழும் முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் ஊட்டச் சக்தியாகத் திகழ்கிறது" என்று முஸ்லிம் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உண்மையான இஸ்லாத்தை பிரிட்டிஷ் வெள்ளையர்களுக்கு விளக்கிச் சொல்லும் பெரு முயற்சியில் உள்ள பிரிட்டிஷ் முஸ்லிம் கவுன்ஸில், பிரிட்டனின் முன்னாள் சுகாதார அமைச்சரின் மகன் அஹ்மத் டோப்ஸன் என்பாரைத் தமது புதிய குழுவின் தலைவராக நியமித்துள்ளது.

செவ்வாய், 26 ஜனவரி, 2010

அன்றாடம் நம்முடைய அடிப்படை செயல்களின் போது கடைபிடித்து ஓத வேண்டிய துஆ

ராஜகிரி :அன்றாடம் நம்முடைய அடிப்படை செயல்களின் போது கடைபிடித்து ஓத வேண்டிய துஆ

அன்றாடம் நம்முடைய அடிப்படை செயல்களின் போது கடைபிடித்து ஓத வேண்டிய துஆக்களை இங்கே தொகுத்தளித்துள்ளோம். இஸ்லாம் கூறும் வழி நம் ஒவ்வொருவரது வாழ்வையும் அமைத்துக் கொள்ள வல்ல நாயன் அல்லாஹ் அருளவானாக.

1. தூங்கும் போது ஓதும் துஆ:
اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا
அல்லாஹும்ம பி(இ)ஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா
பொருள்: இறைவா! உன் பெயரால் நான் மரணிக்கிறேன்; (தூங்குகிறேன்) உன் பெயரால் உயிர் பெறுகிறேன். (விழிக்கிறேன்) ஆதாரம்: புகாரி 6325, 6324, 6314

2. தூங்கி எழுந்தவுடன் ஓதும் துஆ:
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ
அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா ப(இ)ஃத மா அமா(த்)தனா வ இலைஹின் னுஷுர்
பொருள்: எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.
ஆதாரம்: புகாரி 6312, 6314, 6324, 6325, 7395
3. கழிவறையில் நுழையும் போது ஓதும் துஆ:
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْخُبُثِ وَالْخَبَائِثِ
அல்லாஹும்ம இன்னீ அவூது பி(இ)(க்)க மினல் குபு(இ)ஸி வல் கபா(இ)யிஸி. ஆதாரம்: புகாரி 6322
பொருள் :
இறைவா! ஆண், பெண் ஷைத்தான்களிடமிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
4. கழிவறையிலிருந்து வெளியேறும் போது ஓதும் துஆ:
غُفْرَانَكَ
ஃகுப்(எ)ரான(க்)க
பொருள் : உன்னிடம் மன்னிப்புத் தேடுகிறேன். ஆதாரம்: திர்மிதீ 7
5. வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது ஓதும் துஆ:
بِسْمِ اللَّهِ رَبِّ أَعُوذُ بِكَ مِنْ أَنْ أَزِلَّ أَوْ أَضِلَّ أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ
பி(இ)ஸ்மில்லாஹி ரப்பி(இ) அவூது பி(இ)(க்)க மின் அன் அஸில்ல அவ் அளில்ல அவ் அள்ளம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய
ஆதாரம்: நஸயீ 5391, 5444
அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்.) என் இறைவா! நான் சறுகி விடாமலும், வழி தவறி விடாமலும், அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும், மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

புதன், 20 ஜனவரி, 2010

புர்கா அணிவது பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையா ?‏

புர்கா அணிவது பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையா ?‏

திங்கள், 18 ஜனவரி, 2010

ராஜகிரி :கோபம் தன்னையே அழித்து விடும்‏

ராஜகிரி :கோபம் தன்னையே அழித்து விடும்‏

உண்மையான பலசாலி யாரெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே ஆகும். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) - புகாரி) (Volume 8, Book 73, Number 135)
"ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும்" என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள்...
கோபம் ஏன் ஏற்படுகின்றது?
கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்ச்சிப் பூர்வமான, சுற்றுச்சூழல் சார்ந்த பல விஷயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை  காரணமாக உண்டாகிறது.
·         நாம் சொல்வதை (நம்மைவிட எளியவர்கள் என்று நாம் நினைக்கும்) மற்றவர்கள்  மதிக்காத போது...
·         நம்முடைய பிரச்சனைகளை உரியவர்கள் உடனே நிவர்த்தி செய்யாத போது...
·         நாம் சொல்வது (தவறாகவே இருந்தாலும்) தவறு என்று பலர் முன்னிலையில் விமர்சிக்கப்படும் போது...

செவ்வாய், 12 ஜனவரி, 2010

பின்னடைவால் பிரச்னையா?

ராஜகிரி : பின்னடைவால் பிரச்னையா?


இன்று ஒட்டு மொத்த உலகமுமே பொருளாதாரப் பின்னடைவால் சிக்கித் தவிக்கின்றது. உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள பல்வேறு நிறுவனங்களில் ஆட்குறைப்பு , சம்பளக் குறைப்பு என்று தடாலடியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன.
இதனால் - வேலையை இழந்தவர்களும், சம்பளம் குறைக்கப் பட்டவர்களும் பல்வேறு பொருளாதாரப் பிரச்னைகளுக்கும், மன நலப்பிரச்னைகளுக்கும் ஆளாகிறார்கள்.
சம்பளம் வருகிறதே என்று கடன் வாங்கி சொத்துக்களைச் சேர்த்தவர்கள், கடனை அடைக்க முடியாமல் திணருகிறார்கள். தவணை முறையில் சொத்துக்கள் வாங்கியவர்களுக்கும் இதே நிலை தான்.
வேலை இழந்தவர்கள், வேறு வேலை தேடி அது கிடைக்காமல் போகும் போது அவர்களிடம் தற்கொலை சிந்தனை தலை தூக்குகிறது.
பொருளாதாரப் பின்னடைவால் சிக்கித் தவிப்பவர்களுக்கு - இதோ இஸ்லாமிய ஆலோசனைகள்!

இராஜகிரி பைத்துல்மால் ©2011 rajaghiribaithulmal.blogspot.com. All Rights Reserved. Hosted by Rajaghiribaithulmal is Designed and Developed by rajaghiri.online