வட்டியில்லாக் கடன்,ஜக்காத் வசூல்,ஃபித்ரா வசூல்,சமூக நலத்திட்டங்கள்,மாணவர்களுக்கு வழிகாட்டுதல்

விமான நிலைய விவரங்கள்

விமான நிலைய வருகை புறப்படு விவரங்கள் http://indiaairport.blogspot.com/

திங்கள், 21 மார்ச், 2011

ஹஜ் 2011-ற்கான விண்ணப்பப் படிவங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 30-4-2011 .

ஹஜ் புனிதப் பயணம் செல்வதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று தமிழ்நாடு ஹஜ் குழு தெரிவித்துள்ளது.

www.hajcommittee.com 

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது


தமிழ் நாட்டில் வசிக்கும் முஸ்லிம் பெருமக்களில், ஹஜ்-2011-ல் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்களை மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு வரவேற்கிறது.

ஹஜ் 2011-ற்கான விண்ணப்பப் படிவங்கள்

சென்னை-34, புதிய எண்.13 (பழைய எண்.7), மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில், ரோஸி டவர், மூன்றாம் தளத்தில் தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து 16-3-2011 முதல் பெற்றுக் கொள்ளலாம்
அல்லது விண்ணப்பங்களை http://www.hajcommittee.com/ 
என்ற இணையதளம் மூலமாகவும் அச்சு எடுத்துக் கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.



செவ்வாய், 8 மார்ச், 2011

மதரஸாக்கள் மாற வேண்டும்

மதரஸாக்கள் மாற வேண்டும்


இன்று மதரஸாக்கள் என்பது கோழைகளாகவும், உலகத்தை பற்றியும், உலக அறிவின் அவசியத்தை பற்றியும் தெரியாத மாணவர்களாகவே உருவாகாக்குகின்றன. குர்ஆனியகலை, ஹதீஸ்களின் கலைகள், ஃபிக்ஹ் சட்டங்கள்,அரபி இலக்கணம் போன்ற விசயங்களை மட்டுமே கற்றுக் கொடுப்பது தான் எங்களின் பணி.அதை முடித்து விட்டு அவர்கள் வெளியில் வந்தால் ஏதாவது ஒரு பள்ளியில் இமாமாக இருப்பார். அல்லது ஏதாவது ஒரு மதரஸாவில் ஆசிரியராக இருப்பார். அத்தோடு தன் வாழ்க்கை முடிந்து விட்டது. என்று தன் வாழ்க்கையை அமைத்து கொள்கின்றனர்.

மதரஸா வாழ்க்கை என்பது ஒரு பொன்னான வாழ்க்கை.மதரஸா என்பது ஒரு பல்கலைக்கழகம் அளவுக்கு உள்ள ஓர் கல்விக் கூடம். அங்கு கல்வி கற்றுக் கொடுக்கும் காலங்களில் சிறப்பான கல்வியைக் கொடுத்து சீரிய புத்தி கூர்மை உள்ளவர்களாக அவர்களை மாற்றி அவர்கள் வெளியில் வரும் போது சமுதாயத்தை வழி நடத்தும் தளபதிகளாக அவர்கள் வர வேண்டும்.

சமூகம்,சமூகத்தைச் சார்ந்த அனைத்து பிரச்சினைகளையும் கையில் எடுத்து நல்லதொரு தீர்வு காணும் நீதிபதிகளாக அவர்கள் வரவேண்டும். ஆனால் இன்று ஆலிம்களை பள்ளி தலைவரும்,அவர் கற்று கொடுக்கும் மதரஸாவின் தலைவரும் தான் வழி நடத்தக் கூடியவர்களாக உள்ளனர். ஆனால் கிறிஸ்துவ சமுதாயத்தில் அவர்களின் ஃபாஸ்டருக்கு கட்டுபட்டு நடந்து அவர்களின் சமுதாயத்தில் பல விசயங்கள் சாதிக்கப்படுகின்றன.

இராஜகிரி பைத்துல்மால் ©2011 rajaghiribaithulmal.blogspot.com. All Rights Reserved. Hosted by Rajaghiribaithulmal is Designed and Developed by rajaghiri.online