ராஜகிரி: மார்க்கத்தின் அதிகாரம் அல்லாஹ்வுக்கே
ராஜகிரி: மார்க்கத்தின் அதிகாரம் அல்லாஹ்வுக்கே
அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் யாதொரு காரியத்தை முடிவெடுத்து விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் சுயமாக வேறு அபிப்ராயம் கொள்வதற்கு, விசுவாசியான எந்த ஆணுக்கும், எந்த பெண்ணுக்கும் உரிமையில்லை. (அதில்) அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் எவர் மாறு செய்கிறாரோ அவர், பகிரங்கமான வழிகேடாக திட்டமாக வழி கெட்டுவிட்டார். (அல்குர்ஆன்:33:36)
இந்த ஒரு அத்தியாயம் மட்டுமே போதும், மார்க்கத்தின் உரிமை அல்லாஹ்விற்கே உரியது என்று சொல்வதற்கு. இறைவனுடைய சொல்லையே வாழ்க்கையாக வாழ்ந்து காட்டிய நபி (ஸல்) அவர்களுக்கே மார்க்கத்தின் சட்டங்களை இயற்றும் அதிகாரத்தை அல்லாஹ் கொடுக்கவில்லை என்றால், இன்று மவ்லவிகள், இமாம்கள், ஷெய்குமார்கள் என்று சொல்லக் கூடியவர்களுக்கு குர்ஆன் ஹதீஸ் ஒளியில்லாமல் மார்க்கத்தின் அதிகாரத்தில் கை வைக்க, மார்க்கத்தில் புதிதாக ஒரு விஷயத்தை இபாதத் என்று சொல்லவோ அல்லது மார்க்கத்தில் சொல்லப்பட்ட இபாதத்களை நீக்கவோ, திருத்தம் செய்யவோ என்ன அதிகாரம் இருக்க முடியும்.
நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்படாத அதிகாரம்
“லவ்லாக லமா கலக்துல் அஃப்லாக்” – உம்மைப் படைக்கும் நோக்கமில்லாது இருந்தால் இந்த உலகையே படைத்திருக்க மாட்டேன்”. (ஹதீஸ் குத்ஸி) என இறைவனே நபி பெருமானாரை சிறப்பித்துக் கூறியுள்ளான்.
அப்படி சிறப்பு வாய்ந்த நபிக்கே மார்க்கத்தில் சொந்த கருத்தைக் கூற அனுமதி இல்லை என்னும் பட்சத்தில் நான்கு இமாம்களுக்கு/ மவ்லவிகளுக்கு / ஷெய்குமார்களுக்கு எப்படி அனுமதி/அதிகாரம் இருக்க முடியும். நான்கு இமாம்களுக்கு/ மவ்லவிகளுக்கு/ ஷெகுமார்களுக்கு அனுமதி / அதிகாரம் இல்லை என்று சொன்னால் இமாம்களை கண்ணியக் குறைவாக பேசுகிறோம் என்று சிலர் கூறுகின்றனர். நபி(ஸல்) அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் மார்க்கத்தில் சட்டம் இயற்ற அனுமதி அளிக்கப்படவில்லை என்று சொன்னால் நபி (ஸல்) அவர்களை கண்ணியக் குறைவாக பேசுகிறோம் என்று யாராலும் சொல்ல முடியாது, சொல்லவும் கூடாது. ஏனெனில் அல்லாஹ்வே நபி(ஸல்) அவர்களை தனிப்பட்ட முறையில் தன்னிடம் இருந்து வஹி வராமல் மார்க்க அதிகாரத்தில் முடிவு எடுக்கக் கூடாது என்று கூறியிருக்கிறான்.
இதற்கு சான்றாக நிறைய சம்பவங்கள் இஸ்லாமிய வரலாற்றில் உள்ளது.
சான்று 1:
உஹதுப் போரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பற்கள் உடைக்கப்பட்டு, அதன் காரணமாக அவர்களின் முகத்தில் இரத்தம் வடிந்த போது, நபியின் முகத்தில் இரத்தச் சாயம் பூசியவர்கள் எப்படி வெற்றி பெற இயலும் என்று நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
உடனே பின்வருமாறு அல்லாஹ் வஹியை இறக்கினான்.
“(நபியே!) உமக்கு இது விஷயத்தில் ஒரு சம்பந்தமும் இல்லை. அவன் அவர்களை மன்னித்து விடலாம் அல்லது அவர்களை வேதனைப் படுத்தலாம் – நிச்சயமாக அவர்கள் கொடியோராக இருப்பதின் காரணமாக. வானங்களிலும், பூமியிலும் உள்ளவையெல்லாம் அல்லாஹ்வுக்கே உரியவை. தான் நாடியவர்களை அவன் மன்னிக்கிறான். இன்னும் தான் நாடியவர்களை வேதனைப்படுத்தவும் செய்கிறான் – அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், பெருங்கருணையாளன்” (அல்குர்ஆன்: 3:128-129)
சான்று 2:
ஜஹ்ஷுடைய மகள் ஸைனபுக்கும், ஹாரிஸாவின் மகன் ஸைதுக்கும் நடந்த திருமணம் என்ன காரணத்தாலோ ஓராண்டுக்கு மேல் நீடிக்கவில்லை. அடிக்கடி அவர்களிடையே பிணக்குகள் ஏற்படலாயிற்று. குடும்ப அமைதி குலைந்து போகும் நிலை உருவாயிற்று. இறுதியில் ஸைனபை விவாகரத்து (தலாக்) கூறும் நிலைக்கு ஸைத்(ரலி) ஆளானார். இதுபற்றி திருக்குர்ஆனும் குறிப்பிடுகின்றது.
(நபியே) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர், ''அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்கு செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்'' என்று சொன்னபோது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனதில் மறைத்து வைத்திருந்தீர். ஆனால் அல்லாஹ் அவன் தான் நீர் பயப்படுவதற்குத் தகுதியானவன், (அல்குர்அன் 33:37)
ஸைத் தம் மனைவி ஸைனபை விவகாரத்து (தலாக்) கூற விரும்பியதும், அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் அவர் ஆலோசனைக் கலந்ததும் நபி (ஸல்) அவர்கள் ''தலாக்'' கூற வேண்டாம்" என்று அவருக்குப் போதித்ததும் இந்த வசனத்தில் தெளிவாகக் கூறப்படுகின்றது. அப்படி போதித்த போது, அது தவறு என்று அல்லாஹ் தனது திருமறையில் கூறுவதை மேலே உள்ள வசனம் எடுத்துரைக்கிறது.
சான்று 3:
புஹாரி : பாகம் 6, அத்தியாயம் 68, எண் 5267
ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்
நபி(ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களிடம் (அவர்களின் அறையில் அதிக நேரம்) தங்கியிருந்து தேன் சாப்பிடுவது வழக்கம். எனவே, (இது பிடிக்காமல் நபியவர்களுடைய துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் எங்களுக்குள் 'நபி(ஸல்) அவர்கள் (ஸைனபின் அறைக்குச் சென்றுவிட்டு) நம்மில் யாரிடம் முதலில் வந்தாலும் தங்களிடமிருந்து கருவேலம் பிசினின் துர்வாடை வருகிறதே! பிசின் சாப்பிட்டீர்களா? என்று கூறிட வேண்டும்' என்று கூடிப் பேசி முடிவு செய்து கொண்டோம். எங்களில் ஒருவரிடம் நபி(ஸல்) அவர்கள் வந்தபோது முன்பு பேசிவைத்திருந்தபடி கூறினோம். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , '(அப்படியெல்லாம்) ஒரு குறையும் நடந்திடவில்லை. ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் (அவரின் அறையில்) தேன் அருந்தினேன். (அவ்வளவுதான் சத்தியமாக) இனிமேல் ஒருபோதும் இவ்வாறு செய்யமாட்டேன்' என்று கூறினார்கள். எனவே, 'நபியே! உங்களுடைய துணைவியரின் திருப்தியை எதிர்பார்த்து, அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த ஒன்றை நீங்கள் ஏன் விலக்கிக் கொள்கிறீர்கள்?' என்று தொடங்கி 'நீங்கள் இருவரும் - இதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் (அது உங்களுக்கே நன்று)' என முடியும் (திருக்குர்ஆன் 66:1-4) வசனங்களை அல்லாஹ் அருளினான்.22
சான்று 4:
நபி (ஸல்) அவர்கள், நபிதோழர் பராஉபின் ஆஜிப் (ரலி) அவர்களுக்கு, இரவில் படுக்கப் போகும் பொழுது ஒதும் துஆ ஒன்றை கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள்,...........வ நபிய்யி கல்லதீ அர்ஸல்த.........என்று கற்றுக்கொடுத்ததை, நபித்தோழர் அதை.........வ ரசூலி கல்லதீ.......என்று ஓதிக்காண்பித்த போது, இதைக் கேட்டவுடன் நபி (ஸல்) அவர்கள், இல்லை"வ நபிய்யி கல்லதீ அர்ஸல்த....." என்று ஒதுமாறு கூறினார்கள். (புகாரீ)
[வ நபிய்யி கல்லதீ என்பதை ரசூலி கல்லதீ என்று சொன்னதையே நபி (ஸல்) அவர்கள் அனுமதிக்காமல், அதை கண்டித்து திருத்தி இருக்கிறார்கள்.
நூல்: புகாரி : பாகம் 6, அத்தியாயம் 70, எண் 5391
காலித் இப்னு வலீத்(ரலி) அறிவிக்கிறார்கள்:
நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் (அன்னை) மைமூனா(ரலி) அவர்களின் இல்லத்திற்குச் சென்றேன். அவர்கள் எனக்கும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களுக்கும் சிறிய தாயாராவார்கள். (அன்னை) மைமூனாவிடம் பொரிக்கப்பட்ட உடும்பு ஒன்றைக் கண்டேன். அதை அவர்களின் சகோதரி ஹூஃபைதா பின்த் ஹாரிஸ்(ரலி) நஜ்திலிருந்து கொண்டு வந்திருந்தார்கள். (அன்னை) மைமூனா(ரலி) அந்த உடும்பு இறைச்சியை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் முன் வைத்தார்கள். இறைத்தூதர் அவர்களோ, எந்த உணவாயினும் அதன் பெயர் தமக்குக் கூறப்பட்டு, அதைப் பற்றிய விவரம் சொல்லப்படாத வரை அதன் பக்கம் தம் கையை நீட்டுவது அரிதாகும். (இந்நிலையில்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் கையை அந்த உடும்பின் பக்கம் நீட்ட அங்கிருந்த பெண்களில் ஒருவர் 'நீங்கள் பரிமாறியிருப்பது என்னவென்று இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குத் தெரிவியுங்கள். அது உடும்பு, இறைத்தூதர் அவர்களே!' என்று கூறினார். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உடும்பைவிட்டுத் தம் கையை எடுத்துக்கொண்டார்கள். அப்போது நான் 'உடும்பு தடை செய்யப்பட்டதா? இறைத்தூதர் அவர்களே!' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'இல்லை; ஆயினும், அது என் சமுதாயத்தாரின் பூமியில் இல்லை. எனவே, என் மனம் அதை விரும்பவில்லை' என்று கூறினார்கள். உடனே நான் அதைத் துண்டித்துச் சாப்பிட்டேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
நபி( ஸல்) அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் அல்லாஹ்விடமிருந்து வஹி வராமல் அவருடைய வாழ்க்கையில் முடிவு எடுத்ததை அவர்கள் மார்க்கத்தின் சட்டமாக ஆக்கியது இல்லை என்பதை நம் மேற்கொண்ட ஹதீஸ்கலீன் படி விளங்கலாம்.
மார்க்கத்தின் எச்சரிக்கை:
1. அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாகி வைக்கக்கூடிய இணையாளர்களும் அவர்களுக்கு இருக்கின்றனரா? மேலும் (மறுமையில் விசாரணைக்குப் பிறகு தக்ககூலி கொடுக்கப்படும் எனும் இறைவனின்) வார்த்தை இல்லாதிருப்பின் அவர்களுக்கிடயில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். நிச்சயமாக அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு. (அல் குர்ஆன் 42:21)
2. (நபியே நீர்கூறும்) அல்லாஹ்வுக்கு நீங்கள் உங்கள் மார்க்கத்தை கற்றுக் கொடுக்கிறீர்களா? அல்லாஹ்வோ வானங்களிலுள்ளவற்றையும், பூமியுலுள்ளவற்றையும் நன்கு அறிகிறான். அன்றியும், அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாக இருக்கிறான் (அல்குர்ஆன் 48:16)
3. வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம். நடைமுறையில் சிறந்தது நபி (ஸல்) அவர்களின் நடைமுறை. காரியங்களில் கெட்டது நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இல்லாத) பித்அத்துக்கள், பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடுகள் வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்க்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு மஸ்வூத் (ரலி) ஜாபிர் (ரலி). ஆதாரம்: புகாரீ, நஸயீ, முஸ்லிம்.
4. உங்களிடையே இரண்டை விட்டுச்செல்கிறேன் அவற்றைப் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் நீங்கள் வழி தவறவே மாட்டீர்கள். ஒன்று அல்லாஹ்வின் வேதம், இரண்டு எனது வழிமுறை. (மாலிக் இப்னு அனஸ் (ரலி), நூல் : முஅத்தா)
5. அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிகிறார்கள் நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : புஹாரி :2697
6. அன்னை ஆயிஷா (ரலி) அறிவித்துள்ளார்கள்:- "எவர் எம்மால் ஏவப்படாத அமல்களைச் செய்கின்றாரோ, அவை அல்லாஹ்விடத்தில் மறுக்கப் பட்டவையாகும். அவை நூறு ஷரத்துகளாயினும் சரியே" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ, முஸ்லிம்)
7. எவர் மார்க்கத்தில் புதுமையை ஏற்படுத்துகிறாரோ அல்லது அவ்விதம் ஏற்படுத்துபவருக்கு இடமளிக்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வினதும், மலக்குகளினதும், மனிதர்களினதும் சாபம் உண்டாகிறது என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள். (அலி (ரலி) நூல்: அபூதாவூது, நஸயீ).
மரியாதைக்குறிய இமாம்கள் குர்ஆன், ஹதீஸை இறுதி தீர்வாக கூறுகிறார்கள்.
இமாம் அபூஹனீபா கூறுகிறார்கள்:
ஸஹீஹான ஹதீஸ் கிடைக்கும் போது அதை ஏற்றுக் கொள்வதே என் வழியாகும்
ஆதார நூல்கள்: ரஸ்முல் முஃப்தி, ஈகாலுல் ஹிமம்
"எந்த ஆதார அடிப்படையில் நாம் முடிவெடுத்தோம்?" என்பதை அறியாமல் எங்கள் சொல்லை எடுத்து நடப்பது எவருக்கும் ஹலால் இல்லை.
ஆதார நூல்கள்: அல்இன்திகா, ரஸ்முல் முஃப்தி.
என் ஆதாரத்தை அறியாதவன் என் சொல்லை பயன்படுத்தி ஃபத்வா கொடுப்பது ஹராமாகும்.
ஆதாரம்: மீஜான் அ‰„ஃரானி
நாங்கள் இன்று ஒன்றை கூறிவிட்டு நாளை அதிலிருந்து வாபஸ் வாங்கிக்கொள்ளும் மனிதர்தாம். (எனவே குர்ஆன், ஹதீஸை ஒப்பிட்டு பார்க்காமல் பின்பற்றாதீர்கள்.) ஆதாரம்: அல்மீஜான் „ஃரானி.
அல்லாஹ்வின் வேதத்திற்கும் நபி (ஸல்) அவர்களின் வழி முறைக்கும் மாற்றமாக நான் ஒன்றை சொன்னால் என் சொல்லை ஆதாரமாக எடுக்காமல் விட்டு விடுங்கள். ஆதாரம்: ஈகாழுல் ஹிமம்
இமாம் மாலிக் (ரஹ்) கூறுகிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் சொல்லைத் தவிர வேறு எவரது சொற்களிலும் எடுக்க தக்கவைகளும் உண்டு. விடப்படக் கூடியவைகளும் உண்டு. நபி (ஸல்) அவர்கள் சொல் மட்டுமே முற்றாக ஏற்க வேண்டியவைகளாகும்.
ஆதார நூல்கள்: ஜாமிவு இப்னு அப்துல்பர், உஸூலுல் அஹ்காம்
நான் (சில நேரங்களில்) சரியாகவும், (சில நேரங்களில்) தவறாகவும் முடிவெடுக்கக் கூடிய ஒரு மனிதன் தான். எனது முடிவுகளை நீங்களும் ஆராயுங்கள்! குர்ஆனுக்கும், நபி வழிக்கும் பொறுத்தமானவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். குர்ஆனுக்கும், நபி வழிக்கும் உட்படாதவற்றை விட்டு விடுங்கள்.
ஆதாரங்கள்: ஈகாழுல் ஹிமம், ஜாமிவு இப்னு அப்துல்பர், உஸூலுல் அஹ்காம்
இமாம் ஷாஃபி (ரஹ்) கூறுகிறார்கள்:
எவராக இருப்பினும் அவரை விட்டும் ரசூல் (ஸல்) அவர்களின் வழி முறைகளில் ஏதேனும் தவறிவிடத்தான் செய்யும். நான் ஏதேனும் ஒரு தீர்வை கூறும்போது, அல்லது ஏதேனும் ஒரு அடிப்படையை வகுத்து தரும்போது "அல்லா‹வின் தூதருடைய கூற்றுக்கு மாற்றமாக அது இருந்தால், இறைத் தூதருடைய கூற்றே ஏற்கப்படவேண்டும்". ரசூல் (ஸல்) கூற்றே ஏற்கப் படவேண்டும்". ரசூல் (ஸல்) கூற்றை ஏற்பதே என் கொள்கையாகும். ஆதார நூல்கள்: ஈகாழுல் ஹிமம்
ரசூல் (ஸல்) அவர்களின் வழிமுறை எவருக்கு தெரிகின்றதோ, அதை எவருடைய கருத்துக்காகவும் விடுவது ஹலால் அல்ல என்று இக்கால முஸ்லிம்கள் ஏகோபித்து முடிவு செய்துள்ளார்கள்.
ஆதார நூல்: ஈகாழுல் ஹிமம்
எனது நூலில் நபி (ஸல்) அவர்களின் சுன்னத்துக்கு மாற்றமானதைக் கண்டால், நபி (ஸல்) உடைய சுன்னத்தையே எல்லோரிடமும் எடுத்துச் சொல்லுங்கள்! என் சொல்லை விட்டு விடுங்கள்.
ஆதார நூல்கள்: தம்முல் கலாம், ஈகாழுல் ஹிமம்
ஸஹீஹான ஹதீஸ் கிடைக்கும்போது அதை ஏற்பதே எனது வழியாகும்.
ஆதார நூல்கள்: அல் மˆவு நவவி, மீ…ான் ஸஃரானி.
நான் கூறிய சொற்கள் ஆதாரப்பூர்வமான நபி மொழிக்கு முரண்படும்போது நபியின் வழி முறைகளை ஏற்றுக் கொள்ளுங்கள். என்னை(தக்லீத் கண்மூடி) பின்பற்றாதீர்கள்.
ஆதார நூல்கள்: அல்அதாப், அபூநயீம்.
அஹ்மத் இமாம் கூறுகிறார்கள்:
என்னையே, மாலிக், „ஷாஃபி, அவ்…ாயி, ஃதெªவ்ரி போன்றவர்களையோ "தக்லீத்" கண்மூடி பின்பற்றாதே. மாறாக அவர்கள் எதிலிருந்து புரிந்து கொண்டார்களோ அதிலிருந்து ( குர்ஆன், ஹதீஸிலிருந்து) நீயும் புரிந்துகொள்.
ஆதார நூல்:ஈகழுல் ஹிமம்.
நபி(ஸல்) அவர்களின் ஹதீஸை நிராகரிப்பவர்கள் அழிவின் விளிம்பிலே இருக்கிறார்கள்.
ஆதார நூல்: இப்னு ஸவ்ஸி.
இதுவரை மரியாதைக்குறிய நான்கு இமாம்களும் குர்ஆனையும், ஹதீஸையும் சிந்தித்துச் செயல்படுங்கள் என்று எச்சரித்து விட்டு சென்றுள்ளார்கள். வல்ல நாயன் நம் அனைவரையும் குர்ஆன், ஹதீஸ் வழியில் நடக்க துணை புரிவானாக! ஆமீன்.
நபி(ஸல்) அவர்கள் தங்களின் இறுதி பேருரையை நிகழ்த்தும் போது
"மக்களே! சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்; எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரசாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தை(யும் அவனது தூதரின் வழிமுறையும்) விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074) (முஅத்தா இமாம் மாலிக்/மிஷ்காத்182. ஸஹீஹுத் தர்கீப் 40.)
பிறகு நபி அவர்கள் மக்களை நோக்கி, மறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், ""நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்; (உங்களது தூதுத்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்திற்கு) நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம்'' என்றார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் அவர்கள், தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு, அதை மக்களை நோக்கித் தாழ்த்தி ""இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி!'' என்று முடித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 2334)
இவ்வாறு அவர்கள் கூறிய அதே இடத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கீழ் வருமாறு இறைவசனம் இறங்கியது:""இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்; மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். (அங்கீகரித்துக் கொண்டேன்.)'' (அல்குர்அன் 5:3) (ஸஹீஹூல் புகாரி 4406, 4407, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா, தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு கஸீர், அத்துர்ருல் மன்ஸுர்)
இறைவனின் கூற்றிலும், நபி (ஸல்) அவர்களின் கூற்றிலும் மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டது என்று தெளிவாக விளங்கி இருக்கும் போது மனிதனாகிய நமக்கு இறைவனுடைய மார்க்கத்தில் கூட்டவோ, குறைக்கவோ, மாற்றம் செய்யவோ உரிமை இல்லை என்ற முடிவுக்கு வரலாம். இவ்வாறு தெளிவுபடுத்தப்பட்ட பிறகும் மார்க்கத்தில் புதிதாக உருவாகும் இபாதத்களை பின்பற்றாமல் இறைவனின் திருப்பொருத்தத்தை அடைய வல்ல இறைவன் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக.
நன்றி : 1. www.islamkalvi.com
2. www.readislam.net
3. www.abumuhai.blogspot.com
4. www.adiraixpress.blogspot.com
ஹாஜா மைதீன் (இப்னு அஷ்ரஃப்)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக