வட்டியில்லாக் கடன்,ஜக்காத் வசூல்,ஃபித்ரா வசூல்,சமூக நலத்திட்டங்கள்,மாணவர்களுக்கு வழிகாட்டுதல்

விமான நிலைய விவரங்கள்

விமான நிலைய வருகை புறப்படு விவரங்கள் http://indiaairport.blogspot.com/

திங்கள், 6 செப்டம்பர், 2010

பெருநாள் – உணர்வது எப்போது?


Eid in Dubai
கடிதத்திலும் கார்டிலும் பெருநாள் வாழ்த்து - 1980
டெலிபோனில் பெருநாள் வாழ்த்து - 1990
செல்போனில் பெருநாள் வாழ்த்து - 1999
ஆன்லைனில் பெருநாள் வாழ்த்து - 2007
நேரில் வாழ்த்துவது எப்போது?
இதை நீ உணர்வது எப்போது?


சொந்தங்கள் இருந்தாலும் நீ அனாதை தான்
ஒவ்வொரு பெருநாளின் போதும்
இதை நீ உணர்வது எப்போது?

பெருநாள் தொழுகை முடிந்தவுடன்
துக்கம் நெஞ்சை அடைக்க
மனதில் அழுகையையும், முகத்தில் சிரிப்பையும் காட்டுகிறாய்
இதை நீ உணர்வது எப்போது?

வீட்டிற்கு போனில் சிரித்து பேசிவிட்டு
கழிவரையில் போய் அழுகிறாய்
இதை நீ உணர்வது எப்போது?

Eid with Family
உயர்ந்த ஆடைகள் உடுத்தியும்

உயர்ந்த உணவுகள் உண்டும்
கடைநிலை ஊழியன்
தன் சொந்தங்களோடு கொண்டாடும் பெருநாளைக்கு
ஒரு போதும் உன்னுடைய பெருநாள் ஈடாகாது?
இதை நீ உணர்வது எப்போது?

ஊருக்கு சென்றால் வருமானத்தில் குறை
இங்கு இருந்தால் வாழ்க்கையிலே குறை
கிடைத்ததோ 3.5% சதவிகிதம்
சாதித்ததா சமுதாயம்?
சாதிக்க புறப்படு இனி தாமதிக்காமல்
உன்னுடைய பெருநாள் ஒவ்வொன்றும்
இனி உன் குடும்பத்தோடு என்ற முழக்கத்தோடு! 

தோழமையுடன்
அபு நிஹான்

0 கருத்துகள்:

இராஜகிரி பைத்துல்மால் ©2011 rajaghiribaithulmal.blogspot.com. All Rights Reserved. Hosted by Rajaghiribaithulmal is Designed and Developed by rajaghiri.online