ஆடை அணிந்த நிர்வாணிகள்
‘விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்! அது வெட்கக் கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கின்றது.’ (அல்குர்ஆன் 17:32)
இஸ்லாம் கூறும் பெண்களின் ஆடை அணிகலன்கள் தொடர்பாக நோக்குவதற்கு முன்னர் ஏனைய சமுதாயங்களில் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது என்பதை சற்று ஆராய்வோம். கிரேக்கர்கள் பெண்களை வியாபாரப் பொருளாகக்கருத, ரோமானியர்களோ பெண்களை உயிரற்ற ஒரு பொருளாகவே கருதிவந்தனர். மேலும், பிரெஞ்சுக்காரார்கள் கி.பி. 586ல் பெண் மனித இனத்தைச் சார்ந்தவளா? இல்லையா? என முடிவெடுக்க ஒரு ஆய்வு சபையை அமைத்தனர். இவ்வாறாக, பிறசமுதாயங்களில் பெண்கள் மிகவும் இழிநிலைக்கு உட்படுத்தப்பட்டு வந்தனர்.
ஆனால், சத்திய இஸ்லாமிய மார்க்கமோ பெண்களுக்குரிய உரிமையையும் அந்தஸ்த்தையும் வழங்கி சமுதாயத்தில் பெண்கள் தங்களுக்குரிய கௌரவத்தோடு வாழ்வதற்கு வழிவகுத்தது. இது பற்றி அருள்மறையாம் திருமறை குறிப்பிடுகையில்,
‘சிலரை விட மற்றும்சிலரை அழ்ழாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளா தீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அழ்ழாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கின்றான்’ (அல்குர்ஆன் 04:32)
‘குறைவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் பெற்றோரும், உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் ஆண்களுக்கும் பங்கு உண்டு. பெற்றோரும் உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் பெண்களுக்கும் பங்கு உண்டு. அப்பங்கீடு கட்டாயக் கடமை.’ (அல்குர்ஆன் 04:07) என்று கூறுகின்றது. பெண்ணின் பெருமைகளைப் போற்றி, பெண்ணுக்குரிய கண்ணியத்தினை வழங்கிய வாழ்வியல் வழிகாட்டியான இஸ்லாமிய மார்க்கத்தின் ஆடை அணிகலன்கள் தொடர்பான வழிகாட்டலும் மிக உன்னத மானதாகும். ஆடை அணிவதன் நோக்கம் அதன் பயன்கள் தொடர்பாக அருள்மறை இவ்வாறு எடுத்தியம்புகின்றது.
‘ஆதமுடைய மக்களே! உங்கள் வெட்கத் தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம். (இறை) அச்சம் எனும் ஆடையே சிறந்தது. அவர்கள் சிந்திப்பதற்காக இது அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளது.’ (அல்குர்ஆன் 07:26)
இஸ்லாத்தின் எதிரிகள் நமக்கு எதிராக செய்த சதி முயற்சிகளில் ஒன்றுதான் நாகரீக ஆடைகள் (ஆழனநசn னுசநளள) என்ற பெயரில் பெண்களின் உடல் அவயங்கள் தெரியக்கூடிய வகையில் மிக மெல்லிய, இறுக்கமான ஆடைகளை எம் பெண்கள் மத்தியில் அறிமுகப்படுத்தி, அதில் அவர்களை ஆர்வம் கொள்ளச் செய்ததாகும். அவ்வாறான ஆடைகளில் பெரும்பாலான ஆடைகள் தமது வீடுகளில், சக பெண்களுக்கு மத்தியில் கூட அணிய முடியாதவைகளாகும்.
உத்தம நபித்தோழியரின் வாழ்வினை படிப்பினை யாகக் கொண்டு செயற்பட வேண்டிய எம்பெண்கள் சீரழிந்த கலாசாரத்தின் சொந்தக்காரர்களான மேற்கத்தேயர்களையும், ஒழுக்க வாழ்வில் நெறிபிறழ்ந்த சினிமா நடிகையர்களையும் முன்மாதிரியாகக் கொண்டு செயற்படுகின்றார்கள். இவர்களைப் பார்த்து அனுதாபம் கொள்வதா? ஆத்திரப்படுவதா?
model dress front and back view |
மேலும், மாலை நேர பிரத்தியேக வகுப்புக்களுக்குச் செல்லக்கூடிய எமது மாணவிகள் முகத்தை மூடி, மார்க்கம் மறைக்கச் சொன்ன முழங்கையை வெளிப்படுத்துவதுடன்; மிக மெல்லிய, இறுக்கமான ஆடைகளை அணிந்துகொண்டு செல்கின்றனர். அதுமாத்திரமன்றி, நாகரீக ஆடை என்ற பெயரில் தமது கால்பகுதியில் வெட்டு வைத்த ஆடைகளை அணிந்து செல்கின்றனர். இவ்வாறு ஆடை அணிபவர்களைப் பற்றி அழ்ழாஹ்வின் திருத்தூதர்(ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்கையில்:
‘இரண்டு கூட்டத்தினர் நரகத்திற்குச் செல்வார்கள். அவர்களை இதுவரை நான் பார்த்ததில்லை. அவர்களில் ஒருசாரார் மாட்டு வால்களைப் போயன்ற சாட்டைகளைக் கையில் வைத்திருப்பார்கள். அவற்றால் மக்களை அடிப்பார்கள். இன்னொரு சாரார் பெண்கள். அவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். அவர்கள் ஒய்யாரமாக நடப்பார்கள். மற்றவர்களைத் தம் பக்கம் ஈர்ப்பார்கள். அவர்களுடைய தலை ஒட்டகத்தின் திமில் களைப் போன்று இருக்கும். அவர்கள் சொர்க்கத்திற்குச் செல்லமாட்டார்கள். சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகரமாட்டார்கள் என்று அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்-4316)
இந்த நபிமொழியைப் படித்த பின்பாவது மெல்லிய, இறுக்கமான ஆடை அணியக் கூடிய எமது சகோதரிகள் தங்களைத் திருத்திக் கொள்வார்களா? அதுமாத்திரமன்றி, நாகரீகம் (குயளாழைn) என்று மேற்கத்தேய கலாசாரத்தில் மூழ்கிப் போயிருக்கின்ற சகோதரிகள் கீழ்வரும் நபிமொழியையும் சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றார்கள்.
‘யார் பிற சமுதாய கலாசாரத்திற்கு ஒப்பாக நடக்கின்றாரோ அவர் அந்த சமுதாயத்தை சார்ந்தவரே’ என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரழி), நூல்: அபூதாவுத்-4033)
இறுதியாக, ஒழுக்கம் மிக்க ஆடையாக திகழ்வதுடன் மிகச்சிறந்த நாகரீக ஆடையாகவும் விளங்குகின்ற ‘ஹிஜாபை’ பேணுவதன் மூலம் நாம் கொடிய நரக நெருப்பில் இருந்து காப்பாற்றப்பட்டு, அருளாளன் அழ்ழாஹ்வின் திருப்தியைப் பெறுவோமாக!
http://arshathalathary.wordpress.com/2009/06/04/காதலர்-தினம்/
perfect example |
ஹிஜாப் என்பது நம் மக்கள் நினைப்பது போல் கருப்பு துணியால் ஆனது மட்டுமோ அல்லது வெள்ளை துணியால் ஆனது மட்டுமோ அல்ல. மாறாக இஸ்லாம் சொன்ன வழிமுறையில் ஆடை இறுக்கம் இல்லாமலும், ஆடை மெல்லியதாக் இல்லாமலும், உடல் முழுவதும் (தலை உட்பட) மறைத்து இருந்தாலே போதும். அதுவும் ஹிஜாப் தான். உதாராத்திற்கு மேலே சொன்ன விஷயங்களுக்கு கட்டுப்பட்ட சுடிதார் போன்ற ஆடையும் ஹிஜாப் தான்.
தோழமையுடன்
அபு நிஹான்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக