வட்டியில்லாக் கடன்,ஜக்காத் வசூல்,ஃபித்ரா வசூல்,சமூக நலத்திட்டங்கள்,மாணவர்களுக்கு வழிகாட்டுதல்

விமான நிலைய விவரங்கள்

விமான நிலைய வருகை புறப்படு விவரங்கள் http://indiaairport.blogspot.com/

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

ராஜகிரி :மார்க்க கல்வியுடன் உலக கல்வி போதிக்கும் பள்ளிகூடங்கள் – மாயையும், தீர்வும்

ராஜகிரி : மார்க்க கல்வியுடன் உலக கல்வி போதிக்கும் பள்ளிகூடங்கள் – மாயையும், தீர்வும்

பெரும்பாலான பெற்றோர்கள் தவ்ஹீத் ஜமாஅத் மாணவர் அணியிடம் கேட்கும் கேள்வி, மார்க்க கல்வியுடன் உலக கல்வி போதிக்கும் பள்ளி கூடங்கள் எங்கு இருக்கின்றன என்று. சென்னையிலும், பல ஊர்களிலும் உலக கல்வியுடன் இஸ்லாமிய கல்வியையும் சேர்த்து போதிக்கின்றோம் என சொல்லும் சில பள்ளிகள் இருகின்றன, இங்கு இடம் கிடைப்பது மிக மிக கடினம், இடம் கிடைத்தாலும் கல்வி கட்டணம் மிக மிக அதிகம்.
.
சாதாரண மக்கள் இங்கு படிப்பது நடக்காத காரியம். சரி குறைந்த செலவில் மார்க்கம் மற்றும் உலக கல்வி போதிக்கும் இஸ்லாமிய பள்ளி இருக்கின்றதா? என்றால் இல்லை என்பதுதான் உண்மை. இனிமேலும் உருவாவதற்க்கு வாய்புகளும் குறைவுதான். தற்போது உயர்ந்துவரும் நிலத்தின் மதிப்பு, வாடகை, ஆசிரியர் சம்பளம், கரண்ட் பில், வாகன வசதி என பல பிரச்சனைகள் இருப்பதால் இனிமேலும் யாராவது அப்படி ஒருபள்ளிக் கூடம் ஆரம்பித்தாலும் இதை சேவை அடிப்படையில் செய்ய யாரேனும் முன்வந்தாலே தவிரகுறைந்த கட்டணத்தில் பள்ளியை நடத்த இயலாது.

ஏழைகள் என்ன செய்வது? வசதி குறைந்தவர்கள் பிள்ளைகளை எந்த பள்ளியில் சேர்ப்பது என இப்போது பார்ப்போம்.




உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள அரசு பள்ளிகளில் பிள்ளைகளை சேருங்கள் (கட்டணம் மிக மிக குறைவு சில நூரு ரூபாய்கள் தான்). பாடம் எளிதாக இருக்கும்,பள்ளியில் கல்வி கற்கும் நேரமும் குறைவு. எனவே குழைந்தைக்கு அதிக சுமை இருக்காது, படிப்பை தவிர பிற நல்ல விஷயங்களில் (மார்க்க கல்வியை கற்க) கவனம் செலுத்த நேரம் இருக்கும். மீதமுள்ள நேரத்தில் மார்க்க கல்வியை நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு கற்று கொடுங்கள்.

பிள்ளைகளுக்கு இஸ்லாமிய கல்வி போதிக்க பெற்றோர்கள் ஆலிமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்போது அனைத்தும் தமிழில் வந்துவிட்டன, விளகத்திற்க்கு இஸ்லாமிய ஆடியோ வீடியோ உரைகளும் இலவசமாக அல்லது ரூ.20, ரூ.30-யில் கிடைக்கின்றன (இஸ்லாமிய ஆடியோ, வீடியோ உரைகள் இலவசமாக Download செய்ய www.onlinepj.com இணையத்திற்க்கு செல்லுங்கள்) வெரும் அரபியில் குர் ஆன் ஓத கற்றுகொடுப்பது மட்டும் அல்லாமல், குர் ஆனை தாய் மொழியில் (தமிழிலோ, உருதுவிலோ) சொல்லிகொடுங்கள், பெரும்பாலான ஹதீஸ் கிதாபுகள் (புஹாரி, முஸ்லீம்), தமிழில் கிடைக்கின்றன. அதையும் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுங்கள்.

ஆண்கள் வெளி நாடுகளில் இருந்தால் வீட்டில் உள்ள பெண்களை பிள்ளைகளுக்கு இஸ்லாமிய கல்வியை போதிக்க சொல்லுங்கள். இதனால் வீட்டில் உள்ள பெண்களும் இஸ்லாத்தை அறிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கும். உலக கல்வியையும் ஒழுங்காக பிள்ளைகள் படிக்கின்றனரா என கண்காணிக்கலாம்.

உண்மையிலேயே அந்த குறிபிட்ட பள்ளிகள் இஸ்லாமிய கல்வியை போதிக்கின்றனவா?

சென்னையிலும், பல ஊர்களிலும் உலக கல்வியுடன் இஸ்லாமிய கல்வியையும் சேர்த்து போதிக்கின்றோம் என சொல்லும் பெரும்பாலான பள்ளிகளில் போதிக்கப்படும் இஸ்லாம் (குர் ஆன் , ஹதீஸ், ஸஹாபாக்களின் நிலைபாடும் மார்க்கம் என்று சொல்லும்) ஸலபிஇஸத்தை சார்ந்ததாகும், அல்லது ஷிர்க் பித் அத்தை போதிக்கும் சுன்னத் ஜமாத்(?) கொள்கையைச் சார்ந்ததாகும்.

எனவே அவர்கள் போதிக்கும் இஸ்லாமிய கல்வி முழுக்க குர் ஆன் ஹதீஸ் இல்லை என்பதை தெரிந்துகொள்ளுங்கள். தவ்ஹீத்வாதிகளுக்கு இந்த பள்ளி சரிவருமா?

இஸ்லாமிய கல்வி கற்க பள்ளிகளை சார்ந்திருப்பதால் ஏற்படும் தீய்மைகளும், நாமே போதிப்பதால் ஏற்படும் நன்மைகளும்

1. பண விரயம் : உலக கல்வியுடன் சேர்ந்த்து இஸ்லாமிய கல்வியை போதிக்கின்றோம் என சொல்லும் பெரும்பாலான கல்வி நிருவனங்கள் அதிக அளவில் பணம் வசூலிக்கின்றன. ஆனால் உண்மையான இஸ்லாத்தை போதிப்பதில்லை. பெற்றோர்களை ஏமாற்ற மாணவர்களுக்கு சில துஆக்களை சொல்லிக்கொடுத்து, பெற்றோர்களிடன் சொல்லிகாட்டி இஸ்லாமிய கல்விபோதிப்பதாக சொல்கின்றன. நாமே நம் பிள்ளைகளுக்கு இஸ்லாமிய கல்வியை போதித்தால் பெரும் அளவில் பணம் மிச்சமாகும்.

2. பிள்ளைகள் பெற்றோர்களை மதித்து நடக்க : இந்த காலத்தில் பிள்ளைகள் பெற்றோர்களை மதித்து நடப்பதில்லை என குற்றச்சாட்டு பெற்றோர்கள் சொல்கின்றனர். நாமே இஸ்லாமிய கல்வியை நம் பிள்ளைகளுக்கு போதித்தால், நம்பிள்ளைகள் நம் மூலம் இஸ்லாத்தை அறிந்துகொள்வதினால் நம்மீது அன்பும், பாசமும் வைத்து நம்மை மதித்து நடப்பார்கள். பெறோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் தொடர்பு அதிகரிக்கும். பிற்காலத்தில் நம்பிள்ளைகள் நல்ல நிலைக்குவந்தால், இதற்க்கு நம் பெற்றோர்கள்தான் காரணம் என எண்ணி வயதான காலத்தில் நம்மை சிறந்த முறையில் பராமரிப்பார்கள் (இன்ஷா அல்லாஹ்). இல்லையேல் நீங்கள் எனக்கு என்ன செய்தீர்கள் என சொல்லி ஆசிரியரை மதிக்கும் அளவிற்க்கு கூட பிள்ளைகள் பெற்றோரை மதிக்காத நிலை ஏறபட்டு விடலாம்.

குடும்பமே தீய விஷயங்களில் இருந்து விலகி இருக்கலாம் : நாமே பிள்ளைகளுக்கு இஸ்லாமிய கல்வியை போதிப்பதால் டிவி-போன்ற தீமையான விஷயத்தில் இருந்து நாமும் நம் பிள்ளைகளும் விலகி இருக்கலாம் (இன்ஷா அல்லாஹ்). நல்ல விஷயத்தில் நேரத்தை செலவளிப்பதால் வீட்டில் சண்டைபோட நமக்கு நேரம் இருக்காது, எனவே குடும்பத்தில் அமைதி நிலவும் இன்ஷா அல்லாஹ்.

பெற்றோர்களுடைய இஸ்லாமிய அறிவும் வளரும் : பிள்ளைகளுக்கு இஸ்லாத்தை போதிக்க நாம் இஸ்லாத்தை அறிந்துகொள்வது அவசியமாகும், இதனால் நமக்கும் குர் ஆனுக்கும் ஹதீஸுக்கும் உள்ள தொடர்பு அதிகமாகும். நாமும் ஒழுக்கத்துடனும், பண்புடனும் நடந்துகொள்வோம், இஸ்லாமிய தெளிவு இருப்பதினால் கணவன் மனைவி பிரச்சனை ஓரளவிற்க்கு குறையும். இறப்பிற்க்கு பிறகு நம்முடைய வாழ்வும் சுவனத்தில் அமைய வாய்ப்பாகும் இன்ஷா அல்லாஹ்.

வீட்டில் இஸ்லாமிய கல்வி போதிக்க தடுக்கும் காரணிகள்.

1. மார்கத்தை சொல்ல ஆலீமாக இருக்க வேண்டும் என பலர் நினைக்கின்றனர், அப்படி கிடையாது, அந்த காலமெல்லாம் மலை ஏறிவிட்டது. உங்களுக்கு அரபி தெரியாவிட்டாலும், தற்போது தமிழிலேயே குர் ஆன் ஹதீஸ்கள் கிடைக்கின்றன. விளக்கத்திற்க்கு இஸ்லாமிய புத்தகங்களும், இஸ்லாமிய உரைகளும் கிடைக்கின்றன. இவைகளை முறையாக படித்து, பார்த்து வந்தாலே நீங்களும் ஆலீம் ஆகிவிடலாம் ( நமது ஜமாத்தில் பேச்சாளர்களாக உள்ள பலர் ஆலீகள் இல்லை, தங்களுக்கு கிடைக்கும் சிறிய நேரத்தில் குர் ஆன் ஹதீஸை படித்து இன்றைக்கு பல ஊர்களில் சிறப்பான முறையில் இஸ்லாமிய பிரச்சாரம் செய்துகொண்டு இருக்கின்றனர் என்பதை மறந்துவிடாதீர்கள்).

2. அடுத்து டிவி. தற்போது பெரும்பாலும் பெண்கள் டிவியிலேயே மூழ்கிவிடுகின்றனர். நேரம் அனைத்தையும் அதிலேயே செலவிடுகின்றனர், இதனால் பிள்ளைகளை கவனிக்க நேரம் இல்லாமல் போய்விடுகின்றது. வீட்டில் பிரச்சனைகள் தான் அதிகரிகின்றது. டிவிபார்க்கும் நேரத்தில் நம் பிள்ளைகளுக்கு இஸ்லாமிய கல்வியை போதித்தால் பிள்ளைகளும் நன்றாக வளர்வார்கள், உங்களுடைய கணவனின் பணமும் மிச்சமாகும், அந்த பணத்தில் நீங்கள் விரும்பிய நகைகளை வாங்கி அணிந்துகொள்ளலாம்.

திருமணம் ஆகாத வெளி நாட்டில் உள்ள இளைஞர்களே! பெண் பார்க்கும் போது பெண்ணிடம் உங்களுக்கு பிறக்கும் பிள்ளைகளுக்கு இஸ்லாமிய கல்வியை தினமும் போதிப்பார்களா? என உறுதி மொழி வாங்கிகொண்டு திருமணம் முடியுங்கள். இதனால் நீங்கள் கஷ்ட்டபட்டு வெளி நாட்டில் சம்பாதிக்கும் பணம் கல்வி நிருவனம் நடத்தி கொள்ளை அடிக்கும் கல்விக் கொள்ளையர்களிடம் சிக்காமல் இருக்கும். உங்கள் பிள்ளைகளும் ஒழுக்கத்துடன் வளரும், உங்களையும் மதித்து நடப்பார்கள்.

குறிப்பு : இஸ்லாத்தில் உலக கல்வி, மார்க்க கல்வி என பிரிவினை கிடையாது. மக்கள் விளங்கிக் கொள்வதற்காக அவ்வாறு குறிபிடப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

இராஜகிரி பைத்துல்மால் ©2011 rajaghiribaithulmal.blogspot.com. All Rights Reserved. Hosted by Rajaghiribaithulmal is Designed and Developed by rajaghiri.online