ராஜகிரி : பெண்ணைபெற்றவர்களை வறுமையில் தள்ளும் வரதட்சனை
ராஜகிரி பெண்ணைபெற்றவர்களை வறுமையில் தள்ளும் வரதட்சனை
நம் ஊரில் உள்ள சில வெட்டிஆபிசர்கள் ஏற்படுத்திய சில பிரச்சினைகளில் உண்மையிலேயே மிகப்பெரியது "திருமண சடங்குகளில் உள்ள வழமை என்ற போர்வையில் பெண்ணைபெற்றவர்களை வறுமையில் தள்ளும் வரதட்சனையும் ,இன்ன பிற கொசுரு சடங்குகளும்'
சில தெருக்களில் வீடு / நகை / வெளிநாட்டு விசா என்று வரதட்சிணைக்கு "செல்லப்பெயர்" வைத்திருப்பார்கள்.
இப்போது நம் ஊரில் பட்டம் படித்தவர்களுக்கு பஞ்சம் இல்லை.ஆனால் இந்த நடை முறை வாழ்ககையில் எதை தடுக்க வேண்டும் எதை ஆதரிக்கவேண்டும் என்பதை கற்றுக்கொடுக்கவில்லை என்றால் அந்த படிப்பு ஒரு அஃறினைக்கு சூட்டப்படும் பட்டயம்.
படிததவர்கள் பெண் வீட்டில் அவர்கள் படித்த படிப்புக்கு பெண்ணை பெற்றவரை ஏழையாக்குவது எந்த விதத்தில் ஞாயம் என்று தெரியவில்லை
இது போன்ற இஸ்லாத்தில் இல்லாத விசயங்களை அறிமுகப்படுத்துபவர்கள் பெரும்பாலும் ஊரில் உட்கார்ந்து கொண்டு "தான் ஒரு அறிவுஜீவி" / " நான் பார்க்காத தேவைகளா?:" / எனக்கு எல்லாம் தெரியும் என்று பில்ட் அப் கொடுக்கும் "வெட்டி ஆபிசர்கள்". இவர்கள் குடும்பத்தில் உள்ள பிரச்சினையே பெரும் பிரச்சினையாக இருக்கும், ஆனால் இவர்கள் ஏதோ பல விசயங்களை இவர்கள் அறிவை [!] முன்னிறுத்தி ஒரு சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் மாதிரி தீர்த்து வைத்தது போல் பேசுவது கொடுமை.
இந்தமாதிரி ஆட்கள் எல்லாதெருவிலும் இருக்கிறார்கள்.
இதில் சில பெண்களும் சலைத்தவர்கள் அல்ல, இவரகள் பெரும்பாலும் தன்னை பிசியாக வைத்திருக்க, அடிக்கடி விருந்து சாப்பிட இதுபோன்ற வழமைகளை உருவாக்கிவிட்டர்கள்.
நாம் நம் ஊரில் 7 பள்ளிவாசல் உள்ள ஊர் , கல்லூரி, பள்ளிக்கூடம் அதிகம் உள்ள முஸ்லிம் சென்டர் என்று வாய் கிழிய பேசி புண்ணியம் இல்லை , மேற்குறிப்பிட்ட எதுவும் நம்மை திருத்தி ' ராஜகிரியா?...அங்கு வரதட்சிணை பற்றி பேசினாலே அடிக்க வருவார்கள் ..என்று பேசும் அளவுக்கு நம் ஊரை மாற்றி அமைக்க வேண்டும். . இது கொஞசம் எழிதல்ல என்று எனக்கு தெரியும்..ஆனால் நிச்சயம் முடியாதது அல்ல. அதற்கும் காரணம் இருக்கிறது நம்
தமிழ்நாட்டிலேயே சில கிராமங்கள் சாராயத்தை , வரதட்சினையை, கந்து வட்டியை உள்ளெ நுழைய விடாமல் தடுத்து சாதனை புறிந்திருக்கிறார்கள் [ இதில் பெரும்பாலும் படிக்காத ஊர்பெரியவர்கள் அந்த சாதனைக்கு மத்திய / மாநில அரசு பதக்கம் பெற்றுக்கொள்வதை மீடியாவில் பார்க்கும்போது நம் ஊர் ஞாபகம் வரும்]
நாம் இப்படி "பெண் வீட்டில் பிச்சை எடுப்பது" தவறு என்று சொன்னால் இவர்கள் தரும் பதில் "நீ இன்னைக்கு சொல்லிட்டு நாளைக்கு ப்ளேன் ஏறி போய்டுவேப்பா...ஊருக்கு யாரு பதில் சொல்றது" என்று கேட்பார்கள். தற்சமயம் யாரோ ஊர்மானத்தை காப்பாற்றும் வேலையை இவர்களிடம் கொடுத்த மாதிரி.
சரி இது இப்படியே இருக்கட்டும். இந்த மார்கத்தில் இல்லாத இந்த அவலத்தை நம் ஊரை விட்டு எப்படி அகற்றுவது என்று இங்கு comments அல்லது கட்டுரையாகவோ இதை படிப்பவர்கள் எழுதுங்கள். வருங்காலத்தில் பெண்ணை பெற்ற எத்தனையோ பேர் நிம்மதியாக வாழ நீங்கள் வழி செய்ததாக இருக்கும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக