வட்டியில்லாக் கடன்,ஜக்காத் வசூல்,ஃபித்ரா வசூல்,சமூக நலத்திட்டங்கள்,மாணவர்களுக்கு வழிகாட்டுதல்

விமான நிலைய விவரங்கள்

விமான நிலைய வருகை புறப்படு விவரங்கள் http://indiaairport.blogspot.com/

சனி, 31 அக்டோபர், 2009

ஹஜ்ஜுப் பயணம்

ராஜகிரி: 
தேரிருவேலி மவ்லவி J.S.S. அலி பாதுஷா மன்பயீ பாஜில் ரஷாதி
050 547 1543 )

  இஸ்லாமிய சகோதரர்களே ! இஸ்லாத்தில் ஐந்தாம் கடமையான ஹஜ்ஜாகிறது அருள் நிறைந்த நன்மைகள் பொதிந்த உண்மையான ஒரு கடமையாகும். முறையுடன் ஹஜ்ஜுடைய ஒழுக்கங்களையும் அதன் சட்ட திட்டங்களையும் பயபக்தியுடன் பேணி ஹஜ்ஜு செய்கி றவர் அன்று பிறந்த பாலகனைப் போன்று பாவங்கள் நீங்கியவராகவும் ஒளிமயமான ஈமான் நிறைந்த இதயத்தைப் பெற்றவராகவும் ஆகி விடுகின்றார்.

  அல்லாஹுத் தஆலாவின் திரு வீட்டை ஹஜ்ஜு செய்தல் என்பது பேரின்பக் காதலைச் சேர்ந்த ஒரு வணக்கமாகும். இறைவனை இபாதத் செய்தல், அவனை வணங்குதல் என்பதை மூன்று விதமாக பிரித்துச் சொல்ல முடியும். முதல் வகை, உடல் ரீதியான வணக்கம் தொழுகை, நோன்பைப் போன்று, இரண்டாவது வகை, பொருள் மட்டும் சேர்ந்த வணக்கம் ஸதகா, ஜக்காத்தைப் போன்று, மூன்றாவது வகை உடலும் பொருளும் சேர்ந்த வணக்கம் அதுதான் புனித ஹஜ். இம்மூன்று வகை வணக்கங்களுக்கும் அல்லாஹ் அளப்பரிய நன்மைகளையும் நற்கூலி யையும் வழங்குகிறான் என்றாலும் இஸ்லாத்தில் ஐந்தாம் கடமையான புனித ஹஜ் என்பது உள்ளத்தை தூய்மையாக்கி தான் சம்பாதித்த பொருளைக் கொண்டு தான் பிறந்த மண், தன் மனைவி, தன் குடும்பம் ஆகியோரை பிரிந்து யா அல்லாஹ் இதோ! நான் வருகை தந்துள்ளேன், யா அல்லாஹ் இதோ! நான் வருகை தந்துள்ளேன் நான் வருகை தந்துள்ளேன், உனக்கு யாதொரு இனையுமில்லை, இதோ நான் வருகை தந்துள்ளேன் நிச்சயமாக புகழனைத்தும் பாக்கியமனைத் தும் உனக்கே! உனக்கு யாதோர் இனையுமில்லை என்று தல்பியா வுடன் அல்லாஹ்வின் திரு வீட்டை சந்திக்கின்ற மனிதருக்கு கருணையுள்ள இறைவன் வழங்குகின்ற கூலி அளப்பரியது அவன் கூலி வழங்குவதில் அருளான அருளாளன்.


புதன், 28 அக்டோபர், 2009

ஆரோக்கியத்துடன் ஹஜ் செய்வோம் !

உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் ஹஜ் பயணத்திற்காகத் தயாராகி வருகிறார்கள்.


   பல்வேறு தயாரிப்புகள் – பணம், உடை, உணவுப் பொருட்கள் எனப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

  எப்படி தவாஃப் செய்ய வேண்டும், எவ்வாறு இஹ்ராம் உடை அணிவது, மினாவிலும் அரஃபாவிலும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பன போன்ற கேள்விகளுக்கு விளக்கக் கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

  ஆனால் –

  மிக முக்கியமான ஒரு விஷயத்தை மட்டும் ஹஜ் பயணம் மேற் கொள்பவர்கள் மறந்து விடுகின்றனர்.

  அது – உடல்நலம்!

  ஹஜ்ஜின் போது ஹாஜிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகும் ஒரு விஷயம் ‘உடல்நலம்’ குறித்ததாகும்.

  ஏனெனில் –


செவ்வாய், 27 அக்டோபர், 2009

பிரளயத்தின் விளைவும் பெரும் அழிவும்

பிரளயத்தின் விளைவும் பெரும் அழிவும்
( கம்பம் மவ்லானா பீர்முஹம்மது பாகவியின் – வெள்ளிச்சரம் )



வெள்ளப் பிரளயம் ஏற்பட்டிருந்த போது நபி நூஹ் அவர்கள் தமது மகனை எச்சரித்தார்கள். உனது நீச்சலும் மலையும் காப்பாற்றும் என எண்ணாதே என இரக்கத்துடன் எச்சரித்தார்கள். அவனோ வியக்கும் வண்ணம் நீந்தி வந்து கொண்டிருந்தான். இதற்குள்ளாக இருவருக்கு மிடையே ஒரு பேரலை எழுந்து குறுக்கிட்டு விட்டது. ஆபத்தும் அழிவும் தன் கண்முன்னே தெரிந்தும் அகந்தை பேசிய அவனை, அப்படியே அமுக்கி முழ்க வைத்து அழித்து விட்டது. மகனின் மரணம் நபி நூஹின் மனதைப் பெரிதும் பாதித்து விட்டது. அடக்கிக் கொண்டார். வெள்ளம் சூழ்ந்தது. இந்த வெள்ளப் பிரளயம் உலகம் முழுவதும் ஏற்பட்டிருந்தது.

ஒரு மாபெரும் வெள்ளப்பிரளயம் உலகை உலுக்கிய செய்தியை முந்தைய வேதங்களும் உலகின் தொன்மை  யான வரலாற்று நூல்களும் கூறு கின்றன. இவ்வுலகின் இறுதி வேதமாம் இறைமறை அல்குர்ஆனில் இது குறித்துத் தெளிவாகக் கூறப்பட்டிருக்கின்றது. இம்மண்ணகத்தில் இறைவனுக்கெதிரான அனைத்துச் சக்திகளும் அழிக்கப்பட்டிருந்தன. உண்மைக்கு எதிரான அனைவரும் மூழ்கடிக்கப்பட்டு முற்றிலும் துடைத் தொழிக்கப் பட்டிருந்தனர்.

  மீண்டும் இறைக்கட்டளை பிறந்தது! “பூமியே! உனது நீர் முழுவதை யும் விழுங்கி விடு! வானமே! நீர் பொழிவதை நிறுத்திக் கொள்!” நீர் வற்றத் துவங்கியது. வானம் வறண்டு போனது. பயணப்பட்டுக் கொண்டிருந்த கப்பல் அமைதியடைந்தது. “ஜூதி” எனும் மலையில் நிலை கொண்டது. நீர்மயம் மறைந்து நிலம் தெரிந்தது. “அக்கிரமம் புரிந்த மக்கள் அழிக்கப்பட்டு விட்டனர்!” எனும் செய்தி அறைகூவலாக ஒழித்தது. நபி நூஹின் மனம் பாசமகளை எண்ணிப் பரிதவித்தது. இறைவா! எனது குடும்பத்தினரையும் காப்பாற்றுவதாக வாக்குறுதி தந்தாயே! என் மகனும் என் குடும்பத்தைச் சார்ந்தவனல்லவா? எனப் பிரார்த்தித்தார்கள்.

திங்கள், 19 அக்டோபர், 2009

ஹஜ் செய்வது எப்படி?


அஸ்ஸலாமு அலைக்கும்
அன்புச் சகோதர சகோதரிகளே,

நீங்களும் உங்கள் குடும்பத்தவர்களும் ஹஜ்ஜிற்க்கு தயாராகி விட்டீர்களா? வல்ல அல்லாஹ் அனைவருடைய ஹஜ்ஜையும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக ஆக்கி அருள்வானாக!!

இந்த மெயிலை இவ்வருடம் ஹஜ் செய்ய நாடியவர்களுக்கு அனுப்பி வையுங்கள்.
 சிங்கப்பூர் ஷெய்க் ஷாகுல் ஹமீது பின் ஹுசைன் அவர்களின் சிறப்பான விளக்கவுரையுடன் ஹஜ்,உம்ரா & ஜியாரத் செயுறை வழிகாட்டி வீடியோ உங்களுக்காக் பிரத்யோகமாக தமிழ் முஸ்லிம் டியூபில் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்.



ஹஜ்ஜில் செய்ய வேண்டிய கிரியைகளை தனித்தனி ஒளிப்பேழைகளாக கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்.


ஹஜ்ஜின்  முக்கிய தளங்களை தனித்தனி ஒளிப்பேழைகளாக கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்.

ஹஜ்ஜில் செய்ய வேண்டிய கடமைகள் பற்றி ஷெய்க் அப்துல்லா ஜமாலி அவர்களின் மதுக்கூர் சொற்பொழிவு கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்.

ஹஜ் செய்வது எப்படி? முஃப்தி ஒமர் ஷெரிப் காஸிமி அவர்களின் விளக்கவுரை கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்.

Please forward this mail to your friends and relatives planning to perform Haj.May Allah accept it  & make their Haj easy.
Tamil Muslim Tube exclusively presenting  complete Haj guide for you , your friends and relatives explained by Sheikh Shahul Hameed bin Hussein of Singapore in following  links .


Short clips for each Haj activity available in following links.


Important Haj places video’s available in following links.


Haj guide by Sheik.Abdulla Jamali at Mathukkur Public meeting,


How to do Haj by Mufti Omar Sheriff Kasimi

வியாழன், 15 அக்டோபர், 2009

ஹஜ் பயண அனுபவங்கள்:

ஹஜ்ஜுக்கு ஸ்பெஷல் பாஸ்போர்ட் என்று இருந்த நிலைமை மாறி, தற்சமயம், பொது பாஸ்போர்ட் என்று கொண்டு வந்து விட்டதால், முன்கூட்டியே பாஸ்போர்ட் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.

சூட்கேஸ்களின் எடை 25 கிலோவுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், கஸ்டம்ஸில் பிரச்சினை வரும்.

ஹேண்ட் லக்கேஜ் 10 கிலோ அளவிற்குள் இருந்தாலும், அளவு பெரியதாக இருந்தால், ப்ளைட்டில் நம்முடன் வைக்க அனுமதிக்க மாட்டார்கள். அதனால், இதில் கவனம் தேவை.

ஹேண்ட் லக்கேஜுக்கு ஸ்கூல் பேக் போல் முதுகில் மாட்டும் பை எடுத்துக் கொண்டால், அதிக தூரம் நடக்கும் போது சவுகரியமாக இருக்கும்.

நம்முடைய லக்கேஜுக்கு ஒரே கலரிலான ரிப்பன்கள் கட்டி, பெயர் மற்றும், நம்முடைய நம்பர் எழுத வேண்டும்.

ஹாஜிகள் ஜோடு


செவ்வாய், 13 அக்டோபர், 2009

ஹிஜாப்‏

இஸ்லாம் என்பது மனிதகுலம் முழுமைக்கும் இறைவனால் இறக்கிவைக்கப்பட்டது. விருப்பு, வெறுப்புக்கு அப்பாற்பட்டது. . ''அப்படிதானேயொழிய இப்படியும் என்ற பேச்சுக்கே இடமில்லை. அது முழுமையாக்கப்பட்டுவிட்டது. வாதப்பிரதி வாதங்களுக்கு அப்பாற்பட்டது. ஆகையால், பர்தா பெண்களின் சுதந்திரத்தைப் பறிக்கின்றதோ இல்லையோ ஆணையிடப்பட்டுவிட்டது. அணிந்தே தீர வேண்டியது கடமை. உடைகளைப் பொருத்தவரை ஆண்கள் எளிமையான மற்றும் வெண்மையான ஆடைகளை அணிய அறிவுறுத்தப்பட்டனர். மேலும் கைகளில் மணிக்கட்டு வரையும் கால்களில் கணுக்கால் வரையிலும் ஆடை அணிய அறிவுறுத்தப்பட்டனர். பட்டாடைகள் அணிவது ஆண்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ளது. பெண்களைப் பொருத்த வரையில் அவர்கள் உடல் முழுவதையும் மறைக்கும் படி ஆடை அணிய அறிவுறுத்தப்பட்டனர். ஆனால் முகத்தை மறைப்பது கட்டாயமாக்கப்படவில்லை. ஏக இறைவன் இந்த பர்தா பெண்களுக்கு சுதந்திரத்தை அளிக்கின்றது என்று கூறுகின்றான்.

செவ்வாய், 6 அக்டோபர், 2009

ஹிந்துக்களின் வேதாகமத்தில் சொல்லப்படும், கடைசி அவதாரமான கல்கி

ஹிந்துக்களின் வேதாகமத்தில் சொல்லப்படும், கடைசி அவதாரமான கல்கி, இறைதூதர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாவார்.


இதை நான் சொல்லவில்லை, சமீபத்தில் ஹிந்தி மொழியில் வெளிவந்த புத்தகத்தின் சாராம்சமாகும். இந்த நூல் வெளியானபின், இந்தியாவே ஒரு கலங்கு கலங்கி விட்டது என்றால் மிகையல்ல. இதை ஒரு இஸ்லாமியர் எழுதியிருந்தால், அவர் இந்நேரம் சிறையிலடைக்கப்பட்டிருப்பதோடு, அந்த புத்தகத்தையும் தடை செய்திருப்பார்கள்.


ஆனால், கல்கி அவதாரத்தைப் பற்றிய இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு, பிரபஞ்ச இறைத்தூதின் வழிகாட்டி” என்னும் இந்த புத்தகம், வங்காளத்தில் இருந்து 







வெளிவந்ததாகும். இது அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் ஒரு முக்கிய அத்தாட்சியாக இருக்கிறது. இதை எழுதியது, தலைசிறந்த ஆய்வாளரான பண்டிட் வைத் ப்ரகாஷ் என்னும், ஒரு பிராமண சமஸ்கிருத பண்டிட்டாவார்.

பண்டிட் வைத் ப்ரகாஷ, பன்னெடுங்கால கடின ஆராய்ச்சி மற்றும் அயரா உழைப்பில் உருவான இப்புத்தகத்தை, இதே போல ஆய்வு செய்யும் எட்டு கல்விமான்களிடம் சமர்ப்பித்து இருக்கிறார். அவர்களும், முழுக்க இப்புத்தகத்தை படித்துணர்ந்து, பலமான ஆதாரங்களினால், இப்புத்தகத்தின் தகவல், முழுக்க முழுக்க உண்மை தான் என்று சான்றளித்துள்ளனர்.

இந்தியாவின் தலைச்சிறந்த வேதங்கள், குறிப்பிடும் தூதரும் வழிகாட்டியுமான கல்கி அவதாரம், மக்காவில் பிறந்த முஹம்மது என்னும் மாமனிதரே ஆவார். ஆதனால், ஹிந்துக்கள், இனியும் கல்கி அவதாரத்துக்காக காத்திராமல், ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு, இவ்வுலகில் உதித்து, இறைத்தூதை எத்தி வைத்து, வாழ்வின் இறுதிவரை இறைபணியாற்றிய இறைவனின் கடைசி தூதரை ஏற்று இஸ்லாத்தைத் தழுவ வேண்டும். இவரது ஆராய்ச்சியின் இறையாண்மையை நிரூபிக்க, பண்டிட், தம் வேதத்திலிருந்து தக்க சான்றுகளை முன்வைக்கிறார்.

1.வேதங்கள், கல்கி அவதாரம் தான், பகவானின் இறுதித் தூதர் என்கிறது. இது, கடைசி தூதர், முஹம்மதுடைய விஷயத்தில் மட்டுமே சரியாக இருக்க முடியும்.

2.ஹிந்து வேதங்களின் முன்னறிவிப்பின் படி, கல்கி நீரினால் சூழப்பட்ட ஒரு இடத்தில் தான் அவதாரம் எடுப்பார். அது தான் 
ஜஸீரத்துல் அரப்’ என்று சொல்லக் கூடிய கடலால் சூழப்பட்ட அரேபிய தீபகற்பமாகும்.

3.ஹிந்து புனித நூல்களில், கல்கி அவதாரத்தின் தந்தையை, விஷ்னு பகத் என்றும் தாயை சொமானிப் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சமஸ்கிருதத்தில் விஷ்னு என்றால், இறைவன், அதாவது அல்லாஹ் என்று பொருள். அதோடு, பகத் என்றால் அடிமை என்று அர்த்தம்.

ஆக, விஷ்னு பகத் என்பது, அல்லாஹ்வின் அடிமை அதாவது அரபியில், அப்துல்லாஹ் என்னும் பதத்தைத் தருகிறது. சொமானிப் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு, சாந்தமான அமைதி என்று பொருள். அரபியில் ஆமினா என்ற வார்த்தைக்கும் இதே அர்த்தம் தான். ஆக, இறுதித் தூதர் முஹம்மதின் பெற்றோர் அப்துல்லாஹ் மற்றும் ஆமினா என்பது, உறுதிப்படுகிறது.

4.அதோடு, கல்கி அவதாரம், ஆலிவ் மற்றும் பேரித்தங்கனிகளை உண்டு வாழ்வார் என்றும், வார்த்தை தவறாத நேர்மையாளராக இருப்பார் என்றும் ஹிந்துக்களின் புத்தகங்களில் உள்ளது. ஆக, இது முஹம்மதின் விஷயத்தில் உண்மையாகிறது என்பதாக பண்டிட் ப்ரகாஷ் எழுதுகிறார்.

5.கல்கி அவதாரம் உயர்ந்த மதிப்பு மிக்க குலத்தில் பிறப்பார் என்று வேதங்கள் சொல்கின்றன. இதுவும், மிக உயரிய, மதிப்புமிக்க குறைஷி குலத்தில் பிறந்ததால், முஹம்மதுடைய விஷயத்தில் சரியாகிறது.

6.கல்கி அவதாரத்துக்கு, ஒரு குகையில் இறைவனின் ஏவலர் மூலமாக ஞானம் கிடைக்கும் என்பதாக வந்துள்ளது. ஆக, மக்காவிலேயே, அல்லாஹ்வின் தூதர் ஜிப்ரீல் மூலமாக ஹீரா குகையில் ஞானம் பெற்றது முஹம்மது ஒருவர் தான்.

7.மேலும், கல்கி அவதாரத்துக்கு காற்றின் வேகத்தில் பறக்கும் குதிரை வழங்கப்படுமென்றும், அதன் மூலம் அவர், இவ்வுலகத்தையும், ஏழு வானத்தையும் சுற்றி வருவார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மிஃராஜ்’ இரவில், புராக்’ வாகனத்தில் தூதர் முஹம்மது பயணமானது, இதைத்தானே சொல்கிறது?

8.அதோடு, கல்கி அவதாரத்துக்கு இறைவனின் உதவி பெருமளவில் இருக்கும் எனவும், இறைவனால் வலுவூட்டப்படுவார் எனவும் புத்தகங்களில் வந்துள்ளது. முஹம்மதுக்கு, பத்ரு போர்க்களத்தில், இறைவனின் உதவி நேரடியாக தன் ஏவலர்கள் மூலம் இறங்கியது நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான்.

9.மேலும் சில விஷயங்கள் வேதங்களில் குறிப்பிடப்படுகின்றன. அதாவது, கல்கி அவதாரம், குதிரையேற்றத்திலும், அம்பெய்துவதிலும், வாள் பயிற்சியிலும் சிறந்து விளங்குவார். இந்த இடத்தில், பண்டிட் வைத் ப்ரகாஷ் என்ன சொல்கிறார் என்பது, அதி முக்கியமான, கவனத்தில் கொள்ளத் தக்க விஷயமாகும். அதாவது, குதிரை, வாள் மற்றும் ஈட்டிகளின் காலம் வெகு நாட்களுக்கு முன்பே போய் விட்டது, தற்போது, நவீன ஆயுதங்களான, துப்பாக்கிகள், பீரங்கிகள், ஏவுகணைகள் என போர்முறை முற்றிலும் மாறி விட்டது. அதனால், வாளுடனும் வில்லுடனும் போராடக்கூடிய கல்கி இனிமேல் அவதாரமெடுப்பார் என்று இனியும் நம்பிக்கொண்டிருப்பது அர்த்தமற்றது. உண்மையில், வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்கி அவதாரம் என்பது, புனித குர்ஆன் வழங்கப்பட்ட தூதர் முஹம்மதேயன்றி வேறில்லை என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.

பேராசிரியர் பண்டிட் வைத் ப்ரகாஷ் எழுதியதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது மீர் அப்துல் மஜீத்.

தமிழ் மொழி பெயர்ப்பு:சகோதரி ஸுஹைநா (சுமஜ்லா)

சனி, 3 அக்டோபர், 2009

பெண்கள் வேலைக்கு செல்லலாமா..?

பெண்கள் வேலைக்கு செல்லலாமா..? என்ற கேள்விக்கு "இதுதான' இஸ்லாம்" இணையதளத்தில் அளித்த பதிலை இங்கு வெளியிடுகிறோம்.

இந்த நூற்றாண்டு பொருளாதார நூற்றாண்டாகவே கழியும். பொருளாதாரம் பற்றிய சிந்தனை அது பற்றிய பயம் மிகைத்து காணப்படும் காலத்தில் நாம் வாழ்கிறோம். பெண்கள் வீட்டோடு இருந்தால் போதும் என்று கடந்தக் காலத்தில் நினைத்தவர்கள் பேசியவர்கள் எல்லாம் இன்று தனது நிலையை மாற்றிக் கொண்டு குடும்பத்திற்கு உழைக்க எனது இரண்டு கைகள் மட்டும் போதாது குறைந்த பட்சம் மனைவியின் ஒரு கையாவது வேண்டும் என்று 
கேட்கும் அளவிற்கு நிலைமை மாறியுள்ளது.

உழைப்பதற்கு ஆண்களும் செலவு செய்வதற்கு பெண்களும் என்பது கடந்த காலங்களில், விஞ்ஞான, கல்வி, பொருளாதார வளர்ச்சிப் பெறாத காலகட்டங்களில் வேண்டுமானால் சரியாக இருக்கலாம். இன்றைய நிலையில் அது சாத்தியமில்லை என்பதை பெண்கள் வேலைக்கு செல்லலாமா..? போன்ற விவாதங்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.


வரவு எட்டணா, செலவு பத்தணா போன்ற கிண்டலான குத்தல் மொழிகள் ஒருகாலத்தில் வரவுக்கு மீறிய ஆடம்பர வாழ்க்கையை சுட்டிக்காட்ட பயன்படுத்தப்பட்டது. ஆனால் இன்று அதே வார்த்தை யதார்த்தத்தைச் சொல்கிறது.
என்னதான் பட்ஜட் போட்டு குடும்பத்தை நகர்த்த வேண்டும் என்று நினைத்தாலும் 'துண்டு' விழும் நிலை தவிர்க்க முடியாமலே போய்விடுகிறது. (நாம் இந்தியர்கள்!)
இந்நிலையில் கணவன் மட்டுமே உழைக்க வேண்டும் என்று முடிவு செய்தால் அந்த சுமையை எல்லா ஆண்களாலும் சுமக்க முடியுமா? என்பது கேள்விக்குறியே.. எனவே பொருளாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மனைவிகள் (தாங்களாக விரும்பி) உழைக்க முன் வந்தால் அதைத் தடுக்கும் உரிமையை இஸ்லாம் யாருக்கும் வழங்கவில்லை.


மனைவியை இறைவன் விளைநிலத்திற்கு ஒப்பாக்கியுள்ளான். (பார்க்க அல் குர்ஆன் 2:222) விளை நிலம் என்பதே ஒரு பொருளாதார குறியீடாகும். 'உங்கள் விளை நிலம்' என்று கணவர்களை நோக்கி சொல்லப்பட்டுள்ளதால் மனைவிகள் முறையான வழியில் உழைக்க விரும்பினால் கணவர்கள் அனுமதிக்கலாம் என்பதை விளங்கலாம்.


பெண்கள் உழைக்க - வேலை செய்யத் தடையில்லை என்றாலும் வேலை, அது செய்யப்படும் இடம் இவற்றைப் பொருத்து இஸ்லாம் சில விதிகளை முன்வைக்கிறது.


எந்த ஆணுடனும் தனித்திருந்து வேலை செய்யக் கூடாது. உதாரணமாக 'செகரட்டரி' போன்ற பணிகள். இது போன்ற வேலைகள் அந்நிய ஆணுடன் (இது முதலாளியாகவோ அல்லது மேனேஜராகவோ அல்லது உயர் அதிகாரிகளாகவோ இருக்கலாம்) தனித்திருக்கும் பொழுதுகளை உருவாக்கி கொடுக்கும். ஆண் என்றைக்கும் ஆணாகத்தான் இருப்பான். சில்மிஷ பேச்சுகள், ஏடாகூடமான பார்வைகள் என்பதிலிருந்து எந்த ஆண்களையும் விதிவிலக்காக காட்ட முடியாது. பார்வை - பேச்சு என்று துவங்கி பெண்மையை கறைப்படுத்தும் சந்தர்பத்தை அவசியம் உருவாக்கி விடும். (இது போன்ற வேலைகளுக்கு பெண்களை நாடும் எவரும் தங்கள் மனைவிகளையோ தங்கள் சகோதரிகளையோ தேர்ந்தெடுப்பதில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்)


ஆணுடன் தனிமையில் இருக்கும் சூழ்நிலையை உருவாக்கும் எந்த வேலையையும் (அது என்னதான் பொருளாதாரத்தை கொட்டிக் கொடுக்கக் கூடிய வேலையாக இருந்தாலும் சரி) அந்த வேலையை எந்த பெண்ணும் ஒப்புக் கொள்ளவேக் கூடாது. இதை இஸ்லாம் இப்படி எச்சரிக்கிறது:


"அந்நிய ஆணும் - பெண்ணும் தனித்திருக்கும் போது (அவ்விருவருக்கும் பொது எதிரியான) ஷைத்தான் மூன்றாவதாக இருக்கிறான் என்பது நபிமொழி. (திர்மிதி)


ஆணுடன் தனிமையில் இருப்பதை தவிர்த்து பொதுவான வேலைகளை பெண்கள் தேர்ந்தெடுக்கலாம். மருத்துவப் பணி, ஆசிரியைப் பணி, ஓவியப்பணி, விவசாயம், தையற்கலை, விமானப் பணிப்பெண்கள், விற்பனையாளர்கள் போன்ற வேலைகளில் தங்களுக்குத் தகுதியானவற்றை பெண்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பொதுவான எந்த வேலையைத் தேர்ந்தெடுத்தாலும் அந்த வேலையில் பிற ஆண்களை சந்திக்கும் சூழ்நிலை இருந்தால் தாங்கள் அணியும் உடைகளில் பெண்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சேலையும் அது சார்ந்தவையும் கவர்ச்சிகரமான உடை என்பதால் அவற்றை அவசியம் தவிர்க்க வேண்டும். சுடிதார் - கமீஸ் போன்ற உடலை முழுவதும் மறைக்கும் உடையணிந்து தலைமுந்தானையுடன் வேலை செய்யலாம். சேலை உடுத்த வேண்டி வந்தால் மேலதிகமாக புர்கா அவசியமாகி விடும்.


பெண்கள் வெளியில் சென்று பொருளாதாரத்தைத் திரட்டுவதை இஸ்லாம் அவர்கள் மீது கடமையாக்கவில்லை. இதற்கு காரணம் 'பெண் அதற்கு தகுதியானவளல்ல என்று இஸ்லாம் நினைப்பதாக சிலர் விளங்கிக் கொண்டு இஸ்லாத்தின் பெண்ணுரிமையை விமர்சிகக்கத் துவங்கி விடுகிறார்கள்.' இது மனித இயல்பை உணராத அவசரக்காரர்களின் முடிவாகும்.


பெண் இயல்பிலேயே குடும்பப் பணிகளை செய்ய வேண்டிய பொறுப்பைப் பெற்றுள்ளாள். பலர் பணியாற்றும் ஒரு ஆபிஸுக்கு நிகரானப் பணிகள் ஒவ்வொரு நாளும் குடும்பத்தில் நடக்கின்றன. இதில் பெரும் பங்காற்றுவது அந்த குடும்பப் பெண்கள் தான். காலையில் எழுந்து அடுப்பங்கரையில் துவங்கும் வேலை கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடித்து இரவு பத்து மணிவரை நீடிக்கின்றன. குழந்தைகள் சிறப்பாக உருவாகும் இடம் இதுதான். சுகாதாரமான உணவு, தூய்மையான உடை என்று ஆரோக்யமான வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைவது குடும்பம் தான். இவற்றை செய்து முடிக்க தகுதியுள்ளவர்கள் குடும்பப் பெண்கள் தான். இதற்காக அவர்கள் தினமும் ஒதுக்க வேண்டிய நேரம் அதிகமானதாகும். இத்துனைப் பொறுப்புணர்வுகளும் தட்டிக் கழிக்க முடியாத பணிகளும் நிறைந்த பெண்களை வேலைக்கு அனுப்புவதென்பது அவர்கள் தலையில் கூடுதல் சுமையை ஏற்றி வைக்கும் முயற்சியாகும்.


ஆபிஸில் அல்லது மற்ற வேலைகளை செய்யும் எந்த ஆணும் குடும்பத்திற்கென்று எந்த வேலையும் செய்வதில்லை. (சிலர் விதிவிலக்காக இருக்கலாம்) வேலை முடித்து வீடு திரும்பும் ஆணுக்கு அவன் எதிர்பார்ப்பவை (உடனடியாக சிலருக்கு டீ தேவைப்படும், சிலர் உடனடியாக சாப்பிடும் எண்ணத்தில் வருவார்கள், சிலர் வெண்ணீரில் குளிக்க வேண்டும் என்று வருவார்கள்.இப்படி பல அவசரங்களில் வீடு நுழையும் ஆண்களே அதிகம்) கிடைக்கவில்லை என்றால் எரிச்சலடையக் கூடிய, கோபப்படக் கூடிய மனநிலையைப் பெறுவார்கள். அதே நேரம் வெளியில் வேலை செய்து விட்டு வீடு திரும்பும் பெண்களின் நிலை என்ன? அவர்களால் யார் மீதும் கோபப்பட முடியாது. அவசர, அவசரமாக குடும்ப வேலையில் இறங்க வேண்டும்.


ஆணோடு ஒப்பிடும் போது பெண் உடல் ரீதியாக பலவீனமானவள். குடும்பத்தை பராமரிக்கும் அளவிற்கே உடல் பலத்தையும் மனநிலையையும் பெற்றிருக்கும் பெண்களை "வேலைக்குப் போ"  என்று வற்புறுத்துவது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாததாகும். இத்தகைய நிலைக்கு தள்ளப்படும் பெண்கள் வெகு விரைவில் மன அழுத்தத்தையும் உடல் பலவீனத்தையும் பெற்று விடுகிறார்கள்.


மட்டுமின்றி இதையும் கடந்து வக்கிரபுத்தியுள்ள ஆண்களால் அவர்கள் அவதிப்படுவதாகும். பாலியல் பார்வை - பேச்சு - சீண்டல் என்று மன நோயாளிகளிடம் அவர்கள் தினம் தினம் படும் அவஸ்த்தைகள் சொல்லி மாளாது. இத்துனையும் சகித்துக் கொண்டே அவள் வருமானத்தை பெறமுடியும். அதுவும் ஆண் பெறும் வருமானத்தை விட வெகு குறைவாக.


பெண்களில் உடல் மற்றும் மனநிலை பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் 'அவர்களால் சுயமாக எந்த வருமானத்தையும் ஈட்டவே முடியாதா..? என்ற கேள்வி இங்கு பிறக்கின்றது.
நிச்சயமாக ஈட்ட முடியும்.


பிறரிடம் சம்பளத்திற்கு வேலை செய்வதை விட தாமே சுய தொழில் தொடங்குவதுதான் பெண்களைப் பொருத்தவரை சரியாகும்.


வீடுகளில் துவங்கப்படும் சிறு தொழில்கள், பெண்களாக ஒன்று கூடி செய்யக் கூடிய பல்வேறு தொழில்கள் என்று சுய தொழில்களில் பெண்கள் ஆர்வம் காட்டும் போது பல சிக்கல்களை அவர்களால் தவிர்த்து விட முடியும். சுய தொழிலால் முன்னுக்கு வந்த, வந்துக் கொண்டிருக்கின்ற சாதனைப் பெண்கள் தமிழக்கத்தில் மட்டும் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்களை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு அதே வழியில் பெண்கள் சம்பாதிக்க முயலலாம்.


சம்பாதிப்பதற்காக எந்த வழியை ஒரு முஸ்லிம் பெண் தேர்ந்தெடுத்தாலும் அது அவளது குடும்ப பொறுப்பை தட்டிக் கழிப்பதாக மட்டும் அமைந்து விடக் கூடாது. குழந்தையை சீரிய முறையில் உருவாக்க வேண்டிய பொறுப்பிலிருந்து விடுபட எந்த முஸ்லிம் பெண்ணுக்கும் அனுமதியில்லை என்பதை மட்டும் எந்த ஆணும் மறந்து விடக் கூடாது.

--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

இராஜகிரி பைத்துல்மால் ©2011 rajaghiribaithulmal.blogspot.com. All Rights Reserved. Hosted by Rajaghiribaithulmal is Designed and Developed by rajaghiri.online