வட்டியில்லாக் கடன்,ஜக்காத் வசூல்,ஃபித்ரா வசூல்,சமூக நலத்திட்டங்கள்,மாணவர்களுக்கு வழிகாட்டுதல்

விமான நிலைய விவரங்கள்

விமான நிலைய வருகை புறப்படு விவரங்கள் http://indiaairport.blogspot.com/

வியாழன், 15 அக்டோபர், 2009

ஹஜ் பயண அனுபவங்கள்:

ஹஜ்ஜுக்கு ஸ்பெஷல் பாஸ்போர்ட் என்று இருந்த நிலைமை மாறி, தற்சமயம், பொது பாஸ்போர்ட் என்று கொண்டு வந்து விட்டதால், முன்கூட்டியே பாஸ்போர்ட் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.

சூட்கேஸ்களின் எடை 25 கிலோவுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், கஸ்டம்ஸில் பிரச்சினை வரும்.

ஹேண்ட் லக்கேஜ் 10 கிலோ அளவிற்குள் இருந்தாலும், அளவு பெரியதாக இருந்தால், ப்ளைட்டில் நம்முடன் வைக்க அனுமதிக்க மாட்டார்கள். அதனால், இதில் கவனம் தேவை.

ஹேண்ட் லக்கேஜுக்கு ஸ்கூல் பேக் போல் முதுகில் மாட்டும் பை எடுத்துக் கொண்டால், அதிக தூரம் நடக்கும் போது சவுகரியமாக இருக்கும்.

நம்முடைய லக்கேஜுக்கு ஒரே கலரிலான ரிப்பன்கள் கட்டி, பெயர் மற்றும், நம்முடைய நம்பர் எழுத வேண்டும்.


பெண்களுக்கு நைட்டி ஏற்ற ஆடை. உள்ளே போட உள்பாவாடைக்குப் பதில் சுடிதார் பேண்ட் போல தைத்துக் கொண்டால், ரூமில் அந்நிய ஆண்கள் இருக்கும் போது, கஷ்டமில்லாமல் இருக்கும்.

நைட்டியில், மேல் பாக்கிட் வைத்துத் தைத்துக் கொண்டு, அதில், ஒட்டும் ஸ்டிராப் வைத்துத் தைத்துக் கொண்டால், பணம் பாதுகாப்பாக இருக்கும். அதோடு, புர்காவில் கீழே இரு புறமும் பெரிதாக பாக்கிட் வைத்துத் தைத்துக் கொண்டால், செல்போன், சிறிய முஸல்லா போன்றவை வைக்க ஏதுவாக இருக்கும்.

தலைமுடிக்கு வைக்க, ரிப்பன் ஒன்றிரண்டு எடுத்துச் சென்றால், இஹ்ராமில் முடி உதிராமல் கட்டிக் கொள்ளலாம்.

சைக்கிள் பூட்டு அல்லது சங்கிலி பூட்டு ஒன்று எடுத்து செல்வது, ஹரமிலும், மினாவிலும் மிக உபயோகமாக இருக்கும்.

போகும் போது, உறவுகள் ஏர்ப்போர்ட்டுக்கு வந்தாலும், ஒரிரு நிமிடமே பார்க்க முடியும். அதனால், ஹஜ் கமிட்டியோடு அனுப்பிவிட்டால், வீண் அலைச்சல் இல்லை.

பெட்ஷீட், ஜமுக்காளம் கொண்டு செல்ல தேவையில்லை. நான் கொண்டு சென்றதை மடிப்பு கலையாமல் திருப்பி கொண்டு வந்து விட்டேன்.

தற்சமயம் ஸ்கேன் வசதி வந்துவிட்டதால், கஸ்டம்ஸில் நம்ம பேக் பிரிக்கப்படுவதில்லை. சந்தேகத்துக்குரிய பொருள் இருந்தால் மட்டும் பிரிப்பார்கள்

மினாவில் நமக்கு ஆளுக்கொரு புது பெட்ஷீட், தலையணை தருவார்கள். அது நமக்கு சொந்தம். எடுத்து வராவிட்டால், டிஸ்போஸ் செய்து விடுவார்கள்.

நம்பர் லாக்(பூட்டு) எடுத்துச் சென்றால், மிகவும் உபயோகமாக இருக்கும். மினாவில் நம் உடைமைகளை, அங்கிருக்கும் இரும்பு தூணில் சங்கிலி பூட்டு, நம்பர் லாக் உதவியால் நான் பூட்டிக் கொண்டேன்.
பெண்கள் எக்ஸ்ட்ரா புர்கா ஒன்று எடுத்துச் செல்ல வேண்டும்.

மார்க்கிங் பேனா எடுத்துச் செல்வது அவசியம்.

கறி மற்றும் காய்கறிகளை, பொது பிரிஜ்ஜில் வைப்பதால், பாலிதீன்பையில் மேல் மார்க்கிங் பேனாவால் நம் பெயர் எழுதி வைத்து விட்டால், அநாவசிய குழப்பங்களைத் தவிர்க்கலாம்.

மக்காவில், டாக்ஸிக்கு, தனி நபர் தலை கணக்கு தான். அதாவது 10 ரியால் என்று கேட்டால், தலைக்கு பத்து ரியால் என்று பொருள்.

ரஷ்ஷான ஹஜ்ஜுடைய நேரத்தில், முடிந்தவரை எங்கு சென்றாலும் குழுவாக ( 6 அல்லது 8 பேர்) சென்றால், சுலபமாக டாக்ஸி கிடைக்கும். அதோடு, காசும் நியாயமாகக் கேட்பார்கள்.

ஒருவர், இருவர் என்றால் யாரும் இல்லாத டாக்ஸியில் ஏறாமல் இருப்பது நல்லது.

மினா சென்றவுடன் அங்கு கேட்டு, எப்படியாவது அச்சடிக்கப்பட்ட, மினாவின் மேப் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். மிகவும் உபயோகப்படும்.

ரூம் டு மினா, மினா டு அரபா, அரபா டு முஜ்தலிஃபா கண்டிப்பாக எல்லோருக்கும் பஸ் வசதி கிடைக்கும். அடுத்தவர் சொல்வதைக் கேட்டு அடித்துப் பிடித்து ஏற வேண்டியது இல்லை. ஆனால், சொன்ன நேரத்துக்குப் போகாவிட்டால், பஸ்ஸை தவற விட நேரும்.



சுமஜ்லா

1 கருத்துகள்:

அபு நிஹான் சொன்னது…

மாஷா அல்லாஹ். என்ன ஒரு துள்ளியமான விளக்கம். இது ஹாஜிகளுக்கு மிக பயனுள்ள தகவல். சகோதரி சுமஜ்லாவுக்கு ராஜகிரி பைத்துல்மால் சார்பாக நன்றி.

அன்புடன்

அபு நிஹான்

இராஜகிரி பைத்துல்மால் ©2011 rajaghiribaithulmal.blogspot.com. All Rights Reserved. Hosted by Rajaghiribaithulmal is Designed and Developed by rajaghiri.online