வட்டியில்லாக் கடன்,ஜக்காத் வசூல்,ஃபித்ரா வசூல்,சமூக நலத்திட்டங்கள்,மாணவர்களுக்கு வழிகாட்டுதல்

விமான நிலைய விவரங்கள்

விமான நிலைய வருகை புறப்படு விவரங்கள் http://indiaairport.blogspot.com/

சனி, 31 அக்டோபர், 2009

ஹஜ்ஜுப் பயணம்

ராஜகிரி: 
தேரிருவேலி மவ்லவி J.S.S. அலி பாதுஷா மன்பயீ பாஜில் ரஷாதி
050 547 1543 )

  இஸ்லாமிய சகோதரர்களே ! இஸ்லாத்தில் ஐந்தாம் கடமையான ஹஜ்ஜாகிறது அருள் நிறைந்த நன்மைகள் பொதிந்த உண்மையான ஒரு கடமையாகும். முறையுடன் ஹஜ்ஜுடைய ஒழுக்கங்களையும் அதன் சட்ட திட்டங்களையும் பயபக்தியுடன் பேணி ஹஜ்ஜு செய்கி றவர் அன்று பிறந்த பாலகனைப் போன்று பாவங்கள் நீங்கியவராகவும் ஒளிமயமான ஈமான் நிறைந்த இதயத்தைப் பெற்றவராகவும் ஆகி விடுகின்றார்.

  அல்லாஹுத் தஆலாவின் திரு வீட்டை ஹஜ்ஜு செய்தல் என்பது பேரின்பக் காதலைச் சேர்ந்த ஒரு வணக்கமாகும். இறைவனை இபாதத் செய்தல், அவனை வணங்குதல் என்பதை மூன்று விதமாக பிரித்துச் சொல்ல முடியும். முதல் வகை, உடல் ரீதியான வணக்கம் தொழுகை, நோன்பைப் போன்று, இரண்டாவது வகை, பொருள் மட்டும் சேர்ந்த வணக்கம் ஸதகா, ஜக்காத்தைப் போன்று, மூன்றாவது வகை உடலும் பொருளும் சேர்ந்த வணக்கம் அதுதான் புனித ஹஜ். இம்மூன்று வகை வணக்கங்களுக்கும் அல்லாஹ் அளப்பரிய நன்மைகளையும் நற்கூலி யையும் வழங்குகிறான் என்றாலும் இஸ்லாத்தில் ஐந்தாம் கடமையான புனித ஹஜ் என்பது உள்ளத்தை தூய்மையாக்கி தான் சம்பாதித்த பொருளைக் கொண்டு தான் பிறந்த மண், தன் மனைவி, தன் குடும்பம் ஆகியோரை பிரிந்து யா அல்லாஹ் இதோ! நான் வருகை தந்துள்ளேன், யா அல்லாஹ் இதோ! நான் வருகை தந்துள்ளேன் நான் வருகை தந்துள்ளேன், உனக்கு யாதொரு இனையுமில்லை, இதோ நான் வருகை தந்துள்ளேன் நிச்சயமாக புகழனைத்தும் பாக்கியமனைத் தும் உனக்கே! உனக்கு யாதோர் இனையுமில்லை என்று தல்பியா வுடன் அல்லாஹ்வின் திரு வீட்டை சந்திக்கின்ற மனிதருக்கு கருணையுள்ள இறைவன் வழங்குகின்ற கூலி அளப்பரியது அவன் கூலி வழங்குவதில் அருளான அருளாளன்.



  அல்லாஹ்விற்காக அவனின் திரு வீட்டை ஹஜ்ஜு செய்தல் என்பது பேரின்பக் காதலைச்சேர்ந்த ஒரு வணக்கமாகும். என்ற காரணத்தினால் தான் அல்லாஹ் திருமறையில் இவ்வாறு குறிப்பிடுகின்றான். அல்லாஹ்விற்காக அவன் திரு வீட்டை ஹஜ்ஜுசெய்தல் மனிதர்களின் மீது - அதன் பக்கம் போக்குவரத்திற்குச் சக்தி பெற்றவருக்கு கடமை யாகும். (3:97) என்று உறுதிபடக் குறிப்பிடுகின்றான். எனவே ஹஜ்ஜு கடமையானவர்கள் அதனை பிற்படுத்துவது கூடாது என்பதை தெளி வாக விளங்க முடிகின்றது. இவ்விஷயத்தில் நம்முடைய சகோதரர்கள் சோம்பல் உடையவர்களாகவே இருக்கின்றார்கள். அவ்வாறில்லாமல் ஹஜ் கடமையானவர்கள் தாமதிக்காமல் தங்களின் இக்கடமையை உடனடியாக நிறைவேற்றி விடுவது அவசியமாகும். ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் ஹஜ்ஜு கடமையானவர் போக்குவரத்து வாகனத்தை தயார் செய்வது இரண்டு ஜிகாது களில் ஒன்றாகும் (புஹாரி) என்று கூறுகிறார்கள்.

  ஒரு முஸ்லிமின் (ஆண்,பெண்) மீது ஹஜ்ஜு கடமையாவதற்கு எட்டு நிபந்தனைகள் இருக்க வேண்டும். 1. முஸ்லிமாக இருக்க வேண்டும்  2. பருவமடைந்தவராக இருக்க வேண்டும் 3. அறிவுள்ளவராக இருக்க வேண்டும் (பைத்தியக்காரர் மீது கடமையில்லை) 4. சுதந்திரமான வனாக இருக்க வேண்டும் (அடிமையின் மீது கடமையில்லை)        5. பொருள் வசதியுடையவராக இருக்க வேண்டும் 6. ஹஜ்ஜுடைய காலமாக இருக்க வேண்டும் 7. உடல் நலம் ஆரோக்கியமானவராக இருக்க வேண்டும் 8. வழியில் பயமில்லாமல் இருக்க வேண்டும் மேல் குறிப்பிட்டுள்ள எட்டும் சரியாக இருந்தால் தான் ஹஜ்ஜு கடமை யாகும்.

  ஹஜ்ஜு கடமையானபின் அல்லாவின் மீது பரிபூரண நம்பிக்கை வைத்துப் புறப்படத் தயாராக வேண்டும். எண்ணத்தைத் தூய்மை யாக்கிக் கொள்ள வேண்டும். எண்ணத்தைத் தூய்மையாக்குதல் என்பதின் நோக்கம் இந்தப் பிரயாணத்தில் அல்லாஹ்வுடைய திருப் பொருத்தத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். வெறும் பிரயாண நோக்கமோ! அல்லது உல்லாச பயண நோக்கமோ! அல்லது ஹாஜி என்று பெயர் வாங்க வேண்டும் என்ற நோக்கமோ மனதில் கடுகளவு கூட இருக்கக் கூடாது. ஏனென்றால் செயல்களுக் குரிய நன்மைகள் வழங்கப்படுவது எண்ணங்களைக் கொண்டுதான்  (நிய்யத்) என்று கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் மொழிந்துள்ளார் கள் (புஹாரி)

  எனவே யார் ஹஜ்ஜை தன் மீது கடமையாக்கிக் கொண்டார்களோ அவர்கள் எண்ணங்களை தூய்மையாக்கி தக்வா எனும் இறை பக்தி யோடு பிரயாணம் மேற்கொள்ள வேண்டும் அல்லாஹ் இப்பிரயாணத் தைப் பற்றி இவ்வாறு கூறுகின்றான்

  ஹஜ்ஜுக்குத் தேவையான பொருள்களை சித்தப்படுத்திக் கொள்ளுங் கள். நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் கைரானது, நன்மையானது தக்வா எனும் பயபக்தியேயாகும். (2:197) அல்லாஹ் நம் அனைவர்களுக்கும் ஹஜ்ஜுக்குச் செல்லும் பாக்கியத் தையும், தூய்மையான எண்ணம், தக்வா எனும் இறையச்சத்தையும் தந்து நாம் செய்யக் கூடிய அனைத்து அமல்களையும் ஏற்றுக் கொண்டு நம் அனைவர்களின் மீதும் அருள் புரிவானாக                     

ஆமீன் ! ஆமீன் ! யாரப்பல் ஆலமீன் 

வஸ்ஸலாம் 

0 கருத்துகள்:

இராஜகிரி பைத்துல்மால் ©2011 rajaghiribaithulmal.blogspot.com. All Rights Reserved. Hosted by Rajaghiribaithulmal is Designed and Developed by rajaghiri.online