வட்டியில்லாக் கடன்,ஜக்காத் வசூல்,ஃபித்ரா வசூல்,சமூக நலத்திட்டங்கள்,மாணவர்களுக்கு வழிகாட்டுதல்

விமான நிலைய விவரங்கள்

விமான நிலைய வருகை புறப்படு விவரங்கள் http://indiaairport.blogspot.com/

சனி, 13 நவம்பர், 2010

தமிழகத்தில் 17 ம் தேதி பக்ரீத்! தலைமை காஜி அறிவிப்பு

தமிழகத்தில் 17 ம் தேதி பக்ரீத்! தலைமை காஜி அறிவிப்பு

தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை புதன்கிழமை (நவ.17) கொண்டாடப்படும் என்று சென்னை அரசு தலைமை காஜி சலாஹுதீன் அய்யூபி அறிவித்துள்ளார். இதை ஏற்று முஸ்லிம் பெருமக்கள் அனைவரும் இத்திருநாளை புதன்கிழமை கொண்டாட வேண்டும் என்று தமிழ்நாடு ஜமா அதுல் உலாமா சபையின் மாநிலச் செயலாளர் எம்.ஓ.அப்துல் காதிர் தாவூதி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள ஓர் செய்திக்குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார். 

சனி, 23 அக்டோபர், 2010

குர்பானி

குர்பானி
அல்லாஹுத்தஆலாவின் நெருக்கத்தை பெருவதற்காக நபி இப்ராஹீம்(அலை) அவர்கள் காட்டிய வழிமுறையில் கால்நடைகளில் (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில்) ஏதாவது ஒன்றை அறுத்து பலியிடுவதற்கு குர்பானி என்று கூறப்படும்.

இறைவன் நபி இப்ராஹீம்(அலை) அவர்களை சோதிக்க நாடி, அவர்களது பாச மகன் இஸ்மாயீல்(அலை) அவர்களை அறுத்து தியாகம் செய்ய கட்டளையிட்டான். இறைவனின் கட்டளைக்குக் கட்டுப்பட்ட அவ்விருவரைப் பற்றி தனது திருமறைக் குர்ஆனில் ……

“என்னருமை மகனே! நிச்சயமாக நான் உன்னை அறுத்துப் பலியிடுவதாய் மெய்யாகவே கனவில் கண்டேன்; ஆகையால் நீ என்ன கருதுகிறாய்? என்று சிந்திப்பாயாக!” என்று கூறினார். (அதற்கு) ”என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடி செய்யுங்கள். இன்ஷாஅல்லாஹ் பொறுமையாளர்களில் உள்ளவனாக என்னை நீங்கள் காண்பீர்கள்” என்று அவர் கூறினார். (37;102)

இருவரின் துணிவையும் ஏற்றுக்கொண்ட இறைவன், இஸ்மாயீல்(அலை) அவர்களுக்குப் பகரமாக ஒரு ஆட்டை பலியிடச் செய்தான்.

ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

முத்துக்கள்

உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாதது வரை (முழுமையான) ஈமான் கொண்டவராக மாட்டார் என அல்லாஹ்வின் தூதர்முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரழி) நூல் : புஹாரி (11). 

மக்களை அமைதியுடன் செவி தாழ்த்தி கேட்கும்படி செய்வீராக! எனக்கூறிவிட்டு (மக்கள் அமைதியுற்ற பின்னர்) எனக்குப் பிறகு நீங்கள் ஒருவர்;கழுத்தை ஒருவர் வெட்டிக்கொள்ளும் காபிர்களாக மாறிவிட வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜின் உரையில் கூறினார்கள். அறிவிப்பவர் : ஜரீர் (ரழி) நூல்: புஹாரி (121). 

ஒரு கட்டிடத்தின் பகுதி இன்னொரு பகுதியை எப்படிவலுப்படுத்திகொண்டிருக்கிறதோ அது போலவே ஒரு முஃமின் இன்னொரு முஃமின் விஷயத்தில் நடந்து கொள்ள வெண்டும். என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் தங்கள் விரல்களை கோர்த்துக் காட்டினார்கள்.அறிவிப்பவர் : அபூ மூஸா (ரழி) நூல்: புஹாரி (481). 

திங்கள், 13 செப்டம்பர், 2010

ஆடை அணிந்த நிர்வாணிகள்

‘விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்! அது வெட்கக் கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கின்றது.’ (அல்குர்ஆன் 17:32)

இஸ்லாம் கூறும் பெண்களின் ஆடை அணிகலன்கள் தொடர்பாக நோக்குவதற்கு முன்னர் ஏனைய சமுதாயங்களில் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது என்பதை சற்று ஆராய்வோம். கிரேக்கர்கள் பெண்களை வியாபாரப் பொருளாகக்கருத, ரோமானியர்களோ பெண்களை உயிரற்ற ஒரு பொருளாகவே கருதிவந்தனர். மேலும், பிரெஞ்சுக்காரார்கள் கி.பி. 586ல் பெண் மனித இனத்தைச் சார்ந்தவளா? இல்லையா? என முடிவெடுக்க ஒரு ஆய்வு சபையை அமைத்தனர். இவ்வாறாக, பிறசமுதாயங்களில் பெண்கள் மிகவும் இழிநிலைக்கு உட்படுத்தப்பட்டு வந்தனர்.

ஆனால், சத்திய இஸ்லாமிய மார்க்கமோ பெண்களுக்குரிய உரிமையையும் அந்தஸ்த்தையும் வழங்கி சமுதாயத்தில் பெண்கள் தங்களுக்குரிய கௌரவத்தோடு வாழ்வதற்கு வழிவகுத்தது. இது பற்றி அருள்மறையாம் திருமறை குறிப்பிடுகையில்,

‘சிலரை விட மற்றும்சிலரை அழ்ழாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளா தீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அழ்ழாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கின்றான்’ (அல்குர்ஆன் 04:32)

திங்கள், 6 செப்டம்பர், 2010

பெருநாள் – உணர்வது எப்போது?


Eid in Dubai
கடிதத்திலும் கார்டிலும் பெருநாள் வாழ்த்து - 1980
டெலிபோனில் பெருநாள் வாழ்த்து - 1990
செல்போனில் பெருநாள் வாழ்த்து - 1999
ஆன்லைனில் பெருநாள் வாழ்த்து - 2007
நேரில் வாழ்த்துவது எப்போது?
இதை நீ உணர்வது எப்போது?


சொந்தங்கள் இருந்தாலும் நீ அனாதை தான்
ஒவ்வொரு பெருநாளின் போதும்
இதை நீ உணர்வது எப்போது?

பெருநாள் தொழுகை முடிந்தவுடன்
துக்கம் நெஞ்சை அடைக்க
மனதில் அழுகையையும், முகத்தில் சிரிப்பையும் காட்டுகிறாய்
இதை நீ உணர்வது எப்போது?

சனி, 28 ஆகஸ்ட், 2010

கையேந்திகளின் மாதமா ரமலான்? பகுதி - 2

சுயமரியாதை தனிமனித கவுரவத்தின் முதற்படி.

எந்த ஒரு மனிதனாக இருந்தாலும் அவர் தனது சுய கவுரவத்தை இழந்து விடக்கூடாது.

ஆனால் பிச்சை எடுப்பதை தொழிலாக செய்யும் சிலர் அவர்களுடைய மானம் மரியாதைகளைப் பற்றி சிறிதும் கவலைப் படாமல் அடுத்தவர்களிடம் கையேந்துகிறார்கள்.இஸ்லாம் இவர்களுடைய இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறது.

இதே நேரம் அடுத்தவர்களுக்கு தர்மம் செய்பவர்களை தாராளமாக வழங்கும்படியும் சொல்கிறது.

நபி(ஸல்)அவர்கள் என்னிடம் நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக் கொள்ளாதே! அவ்வாறு செய்தால் (இறைவனின் கொடை) உனக்கு (வழங்கப்படாமல்) முடிந்து வைத்துக் கொள்ளப்படும்! எனக் கூறினார்கள். 'அப்தாவின் அறிவிப்பில்இ 'நீ (இவ்வளவுதான் என்று) வரையறுத்து (தர்மம்) செய்யாதே! அல்லாஹ் (உன் மீது பொழியும் அருளை) வரையறுத்து விடுவான் எனக் கூறியதாக அஸ்மா(ரலி) அறிவித்தார்கள். 

நூல் புகாரி 1433.

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

கையேந்திகளின் மாதமா ரமலான் - பகுதி-1

அதிகாலையில் எழுந்து இறைவனை வணங்கி உணவு உண்டு சுபஹ் காலையில் இருந்து மாலை வரை இறைவனுக்காக உண்ணாமலும் பருகாமலும் இருந்து இறையச்சத்தை அதிகப் படுத்த வேண்டிய மாதம் இந்த ரமழான் மாதம். 

முஸ்லீம்கள் என்று சொல்லக் கூடிய சிலர் இந்த மாதத்தை கையேந்திகளின் மாதமாக மாற்றியிருப்பதுதான் மிகவும் கவலைக்குறிய விஷயமாகும். 

மகளுக்கு திருமணம் வரதட்சனை (சீதனம்)கொடுக்க வேண்டும் 

மகனுக்கு நோய் 

தந்தைக்கு முடியவில்லை 

தாய் படுத்த படுக்கையில் உள்ளார் 

சகோதரனுக்கு பேச முடியாது 

சகோதரிக்கு நடக்க முடியாது 

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹராம் மற்றும் மதினாவில் உள்ள மஸ்ஜிதுந் நபவியை இணையதளம் மூலம் நேரடி ஒளிபரப்பு

மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹராம் மற்றும் மதினாவில் உள்ள மஸ்ஜிதுந் நபவியை இணையதளம் மூலம் நேரடி ஒளிபரப்பு
                                                மக்கா
                       
                               mms://38.96.148.74/Quran2
                                       
                                             மதினா
                       
                               mms://38.96.148.74/Sunna2



சனி, 21 ஆகஸ்ட், 2010

இராஜகிரி சமூக நலப் பேரவை இஃப்தார் நிகழ்ச்சி


இராஜகிரி வாழ் அமீரக நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

இராஜகிரி சமூக நலப்பேரவை இஃப்தார் நிகழ்ச்சி நேற்று (20.08.2010, வெள்ளிக் கிழமை) அன்று துபை அல் கிஸஸில் இருக்கும் சகோதரர் யூசுஃப் அவர்களின் இல்லத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. சென்ற வருடம் போல் இந்த வருடமும் நம்மூர் மக்கள் மட்டுமல்லாமல் பண்டாரவாடை, கடலூர், அய்யம்பேட்டை சகோதரர்களும் கலந்து கொண்டது நம் அனைவருக்கும் மிகுந்த உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அளித்தது.

இது போன்ற நிகழ்ச்சிகளால் குடும்பத்தை விட்டு பிரிந்து இயந்திர வாழ்க்கை வாழக்கூடிய நம் சமுதாய சொந்தங்களுக்கு ஒரு புத்துனர்வு ஏற்படும் என்பதும், பார்க்க முடியாத தூரத்தில் இருக்கும் சொந்தங்களை சந்திக்கக்கூடிய வாய்ப்பாக அமைகிறது என்பதும் முற்றிலும் உண்மை.

நோன்பு இஃப்தார் ஏற்பாடுகளையும், வாகன ஏற்பாடுகளையும் இராஜகிரி சமூக நலப்பேரவை சகோதரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே




இராஜகிரி சமூக நலப்பேரவை

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

இஃப்தார் நிகழ்ச்சி ராஜகிரி சமூக நலப்பேரவை

இஃப்தார் நிகழ்ச்சி ராஜகிரி சமூக நலப்பேரவை


அஸ்ஸலாமு அலைக்கும்.

ரமலான் முபாரக்.

இன்ஷா அல்லாஹ் வருகிற 20.08.2010, வெள்ளிக் கிழமை அன்று இராஜகிரி சமூக நலப் பேரவை சார்பாக துபை அல் கிஸஸில் இருக்கும் சகோதரர் யூசுஃப் அவர்களின் அறையில் (ரூமில்) இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

இராஜகிரி வாழ் அமீரக நண்பர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு ராஜகிரி சமூக நலப்பேரவை சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

வாகன ஏற்பாடு:

சரியாக 20.08.2010, வெள்ளிக் கிழமை மாலை 5 மணியளவில் கும்பகோணத்தார் அன்சாரி பாய் சாவி கடையிலிருந்து புறப்படும்.

இங்கணம்

இராஜகிரி சமூக நலப் பேரவை

துபை, ஐக்கிய அரபு அமீரகம்

ரமலான் சிந்தனைகள்

ரமலான் சிந்தனைகள்

இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:


வரவுக்கு மீறி செலவு செய்து, ஆடம்பரமாய் வாழும் நிலையால் பலரும் அவதிப்படுகின்றனர். ஒருமுறை, நபிகள்நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியர் ஒன்று கூடி, ""இறைத்தூதரே! தாங்கள் எங்களுக்குச் செலவுக்காக வழங்கும் பொருள் போதாது. இனிமேல், செலவுத் தொகையை அதிகமாக்கித் தர வேண்டும்,'' என்றனர்.

மனைவியரிடம் அண்ணலார் பேசவில்லை. வீட்டை விட்டு வெளியேறிய அவர்கள், பள்ளிவாசலிலேயே 28 நாட்கள் தங்கிவிட்டார்கள். ஒருநாள், இறைவனின் தூதுவரான ஜிப்ரீல் (அலை) அவர்கள், ஒரு வேத வசனத்துடன் இறங்கி வந்தார்கள்.""நபியே! உங்களுடைய மனைவிகளை நோக்கிக் கூறுங்கள்.

நீங்களெல்லாம் இந்த உலக வாழ்வையும் அதன் அலங்காரத்தையும் மட்டுமே விரும்புவோராயின், வாருங்கள்...உங்களின் வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து நல்ல முறையில் உங்களை விடுவித்துக் கொள்கிறேன். மேலும், நீங்கள் அல்லாஹ்வின் தூதரையும் (தன்னையும்) மறுமையின் வீட்டையும் விரும்புவோராயின்,

 நிச்சயமாக அல்லாஹ் உங்களிலுள்ள நன்மையை நாடுவோர்க்கு மகத்தான கூலியைத் தயாராக்கி வைத்துள்ளான்,'' என்பதே அந்த வசனம். "அதாவது, ஆடம்பர வாழ்வுக்கு ஆசைப்பட்டு, நான் தருவதற்கு மேல் செலவழிக்க நினைப்பவர்கள் என்னை விட்டு பிரிந்து கொள்ளலாம்' என்ற ரீதியில் இந்த வசனம் அமைந்தது.

நாயகம்(ஸல்) அவர்கள் வீட்டுக்குச் சென்றார்கள். தன் மனைவி ஆயிஷா அம்மையாரை அழைத்து, இந்த வசனத்தை ஓதிக்காட்டினார்கள். அந்த அம்மையார், அதை மற்றவர்களிடம் சொல்ல, அல்லாஹ் மூலம் விடுக்கப்பட்ட அந்த எச்சரிக்கையைக் கேட்டு அவர்கள் திடுக்கிட்டனர்.

எல்லோரும், தங்கள் செய்கைக்காக நபிகளாரிடம் மன்னிப்பு கேட்டனர். அடுத்தவர்கள் அணியும் நகை, ஆடை, உபயோகிக்கும் பொருட்களைப் பார்த்துவிட்டு, தனக்கும் அதுபோல் வேண்டும் என எண்ணாமல் இருப்பதைக் கொண்டு வாழ வேண்டும் என்பதை இன்றைய ரம்ஜான் சிந்தனையாகக் கொள்வோம்.

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

ரமழானும் நடைமுறை வாழ்வும் - நேர்காணல்

தலைசிறந்த இஸ்லாமிய அறிஞரும் எழுத்தாளரும் நாவன்மை மிக்க பேச்சாளருமாகிய ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் (நளீமி) அவர்கள் 'ரமழானும் நடைமுறை வாழ்வும்' என்ற தலைப்பில் அல்ஹஸனாத்துக்கு வழங்கிய நேர்காணலை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.


அல்ஹஸனாத்: பல்லின சமூகத்தின் மத்தியில் வாழ்கின்ற சிறுபான்மையினர் என்ற வகையில் எமது ரமழான் கால நடவடிக்கைகளை, ரமழான் மாதத்தை பிற சமூகத்தினர் எவ்வாறு நோக்குகின்றார்கள்?


அஷ்ஷெய்க் அகார்: இந்த நாட்டில் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். முஸ்லிம் சமூகத்தின் நடவடிக்கைகளை அடுத்த சமுதாயங்கள் தூரத்தில் நின்று அவதானித்து வருகின்றன.

எமது ஒவ்வொரு செயற்பாடும் அவர்களது பார்வையில் நேரானதாகவோ எதிர்மறையாகவோ நோக்கப்படுவதையும் எமது ஒவ்வொரு செயற்பாடு பற்றியும் அவர்களிடம் ஒரு கருத்து இருப்பதையும் நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. எமது பள்ளிவாசல்கள், வணக்க முறைகள், தொழுகைகள், சகோதரத்துவ உறவுகள், பழக்கங்கள், திருமண வைபவங்கள், ஜனாஸா நல்லடக்கம், பெண்களின் உடை, நடை, பாவனைகளை அவதானித்து முஸ்லிம்கள் பற்றி ஒரு கருத்தை எடுத்துக் கொள்கின்றார்கள்.

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

அருள்வளம் மிக்க மாதம் ரமளான்

அருள்வளம் மிக்க மாதம் ரமளான்


நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்போது அவன் மகிழ்ச்சியடைகின்றான். தன் இறைவனைச் சந்திக்கும் போது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகின்றான் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1904

ரமளான் மாதத்தை பெருமானார்(ஸல்) அவர்கள் அருள்வளம் மிக்க மாதம் என்று வர்ணித்துக் கூறினார்கள்.

ஒருவருக்கு இவ்வுலகில் ஏராளமான பொருட் செல்வங்கள் கிடைக்கப் பெறுவது அருள்வளம் அல்ல, மாறாக மறுமையின் வெற்றிக்கான வாய்ப்புகள் கிடைப்பதே அருள்வளமாகும். அதற்கான வாய்ப்புகள் ஏராளமாக கிடைப்பது இந்த ரமளான் மாதத்தில் தான்.

மனிதர்கள் செய்யும் நற்செயலுக்கான கூலி பத்திலிருந்து எழுநூறு மடங்காக பல்கிப் பெருகுகின்றன நோன்பைத் தவிற, நோன்பு எனக்குரியது அதற்கு நானே கூலி கொடுக்கிறேன், எனது அடியான் எனக்காக தனது உணவையும், இச்சiயையும் விட்டு விடுகிறான், என்று இறைவன் கூறுவதாக பெருமானார்(ஸல்)அவர்கள்கூறுகின்றார்கள். புகாரி, முஸ்லீம்.

நோன்பு எனக்குரியது என்றும், எனக்காக என் அடியான் உணவையும், ஆசைகளையும் விட்டு விடுவதால் அவனுக்கு நானே கூலி வழங்குகிறேன் என்று அல்லாஹ் கூறுவதால்,

சனி, 14 ஆகஸ்ட், 2010

ஆரோக்கிய நோன்பு

ஆரோக்கிய நோன்பு

அருள்மறை அருளப்பட்ட புனித ரமளான் மாதம், நமது உடலியல் தேவைகளுக்கு ஒரு சுயசோதனைப் பருவமாகும். பதினொரு மாதங்கள் பகற்பொழுதில் உணவு உண்ண அனுமதித்த இறைவன், இந்த ஒரு மாதத்தில் மட்டும் பகற்பொழுதில் உண்ணாமல், பருகாமல், உடல் இச்சைகளுக்கு இடம் கொடாமல் இருக்கச் சொல்கிறான்.

அவ்வாறு கட்டுப்பாட்டுடன் இருக்கும் நாம் சூரியன் மறைந்தபின் 'தடை நீங்கியது' என்று ஒரே மூச்சில் உணவுகளை கபளீகரம் செய்ய முனையாமல் ஆரோக்கியமான முறையில் உடல்நலம் கேடாகாத வகையில் எளிய செய்முறைகள் மூலம் ரமளானை ஆரோக்கியமாகக் களிக்கலாம்.



நாள்முழுவதும் படைத்தவன் இட்ட கட்டளையை மதித்து உண்ணல், பருகல் போன்ற உடலியல் தேவைகளில் இருந்து விலகி இருந்த நாம் சரியான முறையில் நோன்பை முடித்துக் கொள்ளாவிட்டால், நோன்பு மூலம் நாம் கற்க வேண்டிய பயிற்சியைப் பெறவில்லை என்றே பொருளாகும்.

புதன், 11 ஆகஸ்ட், 2010

புது இரத்தம் பாய்ச்சும் புனித ரமளான்

புது இரத்தம் பாய்ச்சும் புனித ரமளான்

ரமளான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப் படுகின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரீ 1899, முஸ்லிம் 1957


இந்த ஹதீஸ் உண்மையில் ஓர் உயிரோட்டமான ஹதீஸாகும்.இது அல்லாஹ்வுடைய தூதரின் சொல் தான் என்று நமது நம்பிக்கையைப் பலப்படுத்தும் ஹதீஸாகும்.


பள்ளிவாசல் தொடர்பில் கொஞ்சம் அலட்சியமாக இருக்கின்ற பழைய முகங்கள்! பள்ளியுடன் தொடர்பில்லாத புதிய முகங்கள்! அத்தனை பேர்களையும் இந்த ரமளான்,பள்ளியில் கொண்டு வந்து சேர்த்து விடுகின்றது.


அராஜக ஷைத்தானின் ஆதிக்கம் ஒரு கட்டுக்குள் வருவதால் தானே கட்டுக்கு அடங்காத கூட்டம் பள்ளிகளில் கூடி களை கட்டுகின்றது; பள்ளி நிரம்பி வழிகின்றது. இந்த மிகப் பெரிய மாற்றத்தை ரமளான் மக்களிடத்தில் கொண்டு வந்து விடுகின்றது.

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

ரமலான் மலர். ..........மவ்லவி இப்ராஹீம் மதனி, ஜித்தா

Ramadan_Malar

திங்கள், 9 ஆகஸ்ட், 2010

ரமலான் பாவங்கள் மன்னிக்கப்படுகின்ற மாதம்.

ஏகஇறைவனின் திருப்பெயரால்....


من صام رمضان اماناً و احتِساباً غُفِر له ما تقدًَم من ذنبه

ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூஹுரைரா(ரலி) அறிவித்தார். புகாரி-முஸ்லீம்

பாவங்கள் மன்னிக்கப்படுகின்ற மாதம்.

மனித இனத்தின் மீது அதிக கருணை கொண்டவன் இறைவன்,

ஒரு மகன் செய்யும் குற்றங்களை மன்னித்து விடும் அவனைப் பெற்றெடுத்த தந்தையை விட, தாயை விட அவனைப் படைத்த இறைவன் மன்னிப்பதில் பலமடங்கு கருணைக் கொண்டவன் என்பதற்கு முதல் மனிதராகிய ஆதம்(அலை)அவர்களின் குற்றத்தை மன்னித்த கருணையாளன் அல்லாஹ்வின் கருணைக்கு நிகரில்லை.

மனித இனத்தை படைக்கப்போகிறேன் என்று இறைவன் வானவர்களிடம் கூறியதும், உன்னைப் போற்றி துதிக்க நாங்கள் இருக்கும் போது இரத்ததை ஓட்டி குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய மனித இனத்தையா படைக்கப் போகிறாய் ? என்ற வார்த்தைகளை வேதனையுடன் வெளிப்படுத்தினார்கள் வானவர்கள். திருக்குர்ஆன் 2:30

நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன் என்று அவர்களிடம் இறைவன் கூறிவிட்டு ஆதம்(அலை) அவர்களை படைத்து அனைத்துப் பொருட்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான்.

அதில் சிலவற்றின் பெயர்களை மட்டும் வானவர்களை அழைத்து இறைவன் கேட்டான். வானவர்களால் அதன் பெயர்களை கூற முடியவில்லை.

ஆதம்(அலை) அவர்களை அழைத்து வானவர்களின் முன்பாக நிருத்தி அவற்றின் பெயர்களை கேட்டான் வானவர்கள் கூற முடியாத பதிலை ஆதம் (அலை) அவர்கள் கூறினார்கள். திருக்குர்ஆன்.2:33

சனி, 7 ஆகஸ்ட், 2010

மனித மாண்பு காக்கும் புனித நோன்பு!

மனித மாண்பு காக்கும் புனித நோன்பு!

உரை மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

புனித ரமழான் எம்மை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது. அருள் மறையாம் திருமறைக் குர்ஆன் அருளப்பட்ட இப்புனித மாதத்தில் மனிதம் சிறப்புப் பெற நோன்பிருக்க வேண்டுமென்பது அல்லாஹ்வின் கட்டளையாகும். “நோன்பு” என்பது அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு உண்ணுதல், பருகுதல், உடலுறவில் ஈடுபடுதல் போன்ற செயல்களை அதிகாலை முதல் மாலை வரை தவிர்த்திருக்கும் ஒரு பயிற்சியாகும்.



நோன்பு மனிதனின் நடத்தைகளைச் சீராக்கி அவனிடம் உருவாகும் மிருக உணர்வுகளை அழித்து மனித மாண்புகளைக் காக்கின்றது.

“நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதற்காக உங்களுக்கு முன்பிருந்தோர் மீது விதியாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது.” (2:83)

மேற்படி வசனம், “நோன்பு” என்பது பக்குவத்தை வளர்க்கும் பயிற்சி என்கின்றது. இன்று உலகை உலுக்கி வரும் அநேக பிரச்சினைகளுக்கு நோன்பு ஒரு தீர்வாக இருப்பதை நுணுக்கமாக ஆராய்ந்தால் அறிய முடியும்.

புதன், 4 ஆகஸ்ட், 2010

ராஜகிரி :3000 வருட ஹிஜ்ரி நாட்காட்டி

ராஜகிரி: 3000 வருட ஹிஜ்ரி நாட்காட்டி (எக்ஸெல் மென்பொருளில் இணைத்து செயல்படுத்த

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்


அன்பான சகோதர சகோதரிகளுக்கு,

3000 வருடத்திற்கான ஹஜ்ரி நாட்காட்டி எக்ஸெல் பக்கத்தில் இணைத்து செயல்படுத்துவதற்கு வசதியாக இம்மென்பொருள் உறுவாக்கப்பட்டுள்ளது.

ஹிஜ்ரி 1431 ரமளான் அன்பளிப்பாக இதை மனித சமுதாயத்திற்கு வழங்குகிறோம்.

இதை எல்லா மொழி பேசும் மக்களும் உபயோப்படுத்தும் வகையில் நீங்கள் உலகத்தில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்.

இதில் குறைபாடுகள் இருந்தால் தெரிவிக்கவும்.

நமது இணையத்தளத்தில் எக்ஸெல் பக்கத்தில் இணைக்கும் முறைகளுடன்

http://lunarcalendar.in/?p=1086

நேரடி தளம்


http://coachexcel.webs.com/downloads.htm

இப்படிக்கு


நிர்வாகி


இந்திய ஹிஜ்ரி கமிட்டி







திங்கள், 2 ஆகஸ்ட், 2010

ராஜகிரி: ரமழானை வரவேற்போம்

ராஜகிரி: ரமழானை வரவேற்போம்


புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம், அவனது அருளும் சாந்தியும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் குடும்பத்தினர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!
நம்மை நோக்கி வந்திருக்கும் இம்மாதம் பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட ஒரு மாதமாகும். இம்மாதத்தில் ஒரு முஸ்லிம் கடைபிடிக்கவேண்டிய அனைத்து ஒழுங்கு முறைகளையும் அல் குர்ஆனும், அஸ்ஸுன்னாவும் தெளிவு படுத்தியுள்ளது.

ரமழான் மாதத்தில் முஸ்லிமான, வயது வந்த, புத்தி சுவாதினமுள்ள, ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் நோன்பு நோற்பது கடமையாகும்.

‘இறைவிசுவாசிகளே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது எப்படி நோன்பு விதியாக்கப்பட்தோ அதே போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது நீங்கள் அதன் மூலம் இறையச்சமுடையவர்கள் ஆகலாம்’ (அல்பகரா 2:183).

ரமழான் மாதத்திற்குரிய பிறையை பார்ப்பதன் மூலமோ பிறை தென்படாத பொழுது ஷஃபானை முப்பதாக கணக்கிடுவதன் மூலமோ நோன்பு நோற்பது கடமையாகும். ‘பிறைப் பார்த்து நோன்பு வையுங்கள், மேக மூட்டம் போன்ற காரணங்களால் பிறை தென்பட வில்லையானால் ஷஃபானை முப்பதாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி).

புதன், 28 ஜூலை, 2010

ராஜகிரி :அல்லாஹ்வையே கூலியாகக் கொண்ட - அருட்கொடை மாதமே வருக!!!

ராஜகிரி :அல்லாஹ்வையே கூலியாகக் கொண்ட - அருட்கொடை மாதமே வருக!!!

நன்மைகளை குவிக்கும் நற்பாக்கியமிகு ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,


பாவங்களை மன்னிக்கும் புன்னியமிகு ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

நற்செயல்களால் சொர்க்கத்தின் வாசலை திறக்கச் செய்யும் சங்கைமிகு ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

நரகத்தின் வாயிலை மூடச்செய்கின்ற அல்லாஹ்வின் அருள்மழைப் பொழியும் அருமைமிகு ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

ஷைத்தானுக்கு விலங்கிட்டு மனிதனை மனிதனாக வாழச்செய்யும் மகத்துவமிக்க ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

க்ஷைத்தானின் தூண்டுதலால் நிலையில்லா உலக வளங்களின் மீது மூழ்கிக் கிடந்தவர்களுக்கு நிரந்தர சுவனத்தின் எல்லை இல்லா இன்பத்தை நிணைவூட்ட ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

செவ்வாய், 27 ஜூலை, 2010

ராஜகிரி: நன்னடத்தையை வலியுறுத்தும் இஸ்லாம்

ராஜகிரி : நன்னடத்தையை வலியுறுத்தும் இஸ்லாம்


புகழ் அனைத்தும் அகிலத்தார்களைப் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்விற்கே உரியது. நிச்சயமாக இஸ்லாமிய மார்க்கம் மனிதர்களின் இம்மை, மறுமை, வாழ்விற்குத் தேவையான எல்லா வற்றையும் சரியான முறையிலும் இலேசான முறையிலும் கற்றுத் தரக்கூடிய மார்க்கம்.

அம்மார்க்கம் பெண்களின் ஆடை விஷயத்தில் எவ்வாறு ஆடை அணிய வேண்டும் என்ற ஒழுக்கமான நன்னடத்தையையும், கண்ணியமான தூய வாழ்க்கைக்கும் வழி காண்பிக்கின்றது. இவ்விஷயத்தில் ஆழமாக சிந்தித்தால் மட்டுமே ஆரோக்கியமான வாழ்வும், முழுமையான ஒழுக்கங்களையும் உள்ளடக்கிய மார்க்கம் இஸ்லாம் என்று தெளிவாக விளங்க முடியும்.

இறைவன் அருள்மறையில் கூறுகிறான். நபியே ! நீர் உன் மனைவி மார்களுக்கும், உம் பெண் மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும் அவர்கள் தங்களின் தலை முன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக: அவர்கள் (கண்ணியமானவர் களென) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும்.


அல்லாஹ் மிக மன்னிப்பவன், மிக்க அன்புடையோன் (அல் அஹ்ஜாப் 59) மேலும் கூறுகிறான். நபியே ! முஃமினான பெண்களிடம் நீர் கூறுவீராக ! அவர்கள் தங்களின் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்களின் வெட்கத்தலங்களைப் பேணிப் பாதுகாத்தும் கொள்ள வேண்டும்

திங்கள், 26 ஜூலை, 2010

ராஜகிரி :உணர்வாய் உன்னை !

ராஜகிரி : உணர்வாய் உன்னை !


சகோதரர் ஜலாலுத்தீன்.

உங்கள் கணக்குகள் கேட்கப்படுமுன் நீங்களே உங்கள் சரிபார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் செயல்கள் எடை போடப்படுமுன் நீங்களே எடை போட்டுப் பாருங்கள். உமர் இப்னு கத்தாப் (ரலி).

இது ஒரு சுய மதிப்பீட்டுப் படிவம். நிகழ்காலத்தில் உங்கள் வாழ்க்கையின் பல பகுதிகளையும் மதிப்பீடு செய்து, உங்கள் திசைகளை மாற்றிக்கொள்வதற்கும், இன்னும் மேன்மைப்படுத்திக் கொள்வதற்கும் உதவும். இன்ஷா அல்லாஹ்..

பகுதி ஒன்று:

அல்லாஹ்வுடன் உங்களுடைய தனிப்பட்ட உறவு:


1. சந்தோஷமான, மகிழ்ச்சியான நேரங்களில் எத்தனை முறை அல்லாஹ்வை நினைவு கூர்ந்து அவனுக்கு நன்றி செலுத்தினீர்கள்?

2. இவ்வாண்டு, நீங்கள் பெற்ற கல்வியினாலும், செயல்பாடுகளினாலும் அல்லாஹ்வைப் பற்றிய ஞானமும் அவனுடன் உங்களுக்குள்ள கடமையுணர்ச்சியும் ஆழமானதா?

3. அல்லாஹ்வுடன் உள்ள தொடர்புகளில் சோம்பேறித்தனமாக இருந்தீர்களா?

4. உங்களுக்கு ஏதாவது தேவை இருந்த சமயம் தவிர, எத்தனை முறை அல்லாஹ்வுடன் துவா மூலம் பேசினீர்கள்?

5. எத்தனை முறை அல்லாஹ்வுடைய வழிகாட்டலை கேட்டிருக்கிறீர்கள்?

புதன், 21 ஜூலை, 2010

ராஜகிரி: முஸ்லிம் சகோதர, சகோதரிகளே!! எச்சரிக்கை – கவனம் – உஷார்.

ராஜகிரி: முஸ்லிம் சகோதர, சகோதரிகளே!! எச்சரிக்கை – கவனம் – உஷார்.

பெண்களின் காதல் சமுதாயத்தின் மானக்கேடு காரணங்களும் எச்சரிக்கையும்



பாதுகாப்பு கோரி காதல் ஜோடி பர்வானா & சுப்ரமணியன் எஸ்.பி., யிடம் மனு.


கடலூர்:(( JULY – 2010) சிதம்பரம் அண்ணாகுளம் கீழக்கரையைச் சேர்ந்தவர் இன்ஜினியர் சுப்ரமணியன்(25). சிதம்பரம் மாரியம்மன் கோவில் தெரு கவுஸ்மொய்தீன் மகள் பர்வானா(19). இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இது பர்வானா பெற்றோருக்கு தெரிய வந்ததால் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.பின்னர் சுப்ரமணியன், பர்வானா இருவரும் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கோரி பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தனர். இதனையடுத்து மனு மீது நடவடிக்கை எடுக்க எஸ்.பி., சிதம்பரம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

முஸ்லிம் பெண், ஹிந்து காதலனுடன் தலைமறைவு.

மதுரை; (ஜூன்.2010) கடந்த மாதம் திருச்செந்தூருக்கு அருகில் உள்ள முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஊரில் ஒரு தீன்குலப்பெண் மதுரையில் ஹாஸ்டலில் தங்கி M.PHIL படித்து வந்தவர். ஹிந்து காதலனுடன். வீட்டுக்கு தெறியாமல் தலைமறைவு. மாற்றுமத ஹாஸ்டல் தோழிகள்தான் காதலுக்கு உதவி புரிந்து, வீட்டை விட்டு வெளியேற திட்டம் வகுத்து. ஜோடிகளை சேர்த்து வைத்துள்ளார்கள். செய்தி அறிந்த பெண்ணின் தாயார் அதிர்ச்சியில் கோமா நிலையில். இருக்கிறார்.

கடந்த சில மாதங்களாக இப்படியான செய்திகள் தொடர்ந்து வருகிறது.

செவ்வாய், 20 ஜூலை, 2010

ராஜகிரி : இஸ்லாமியச் சட்டம் (11) மறுக்கப்படும் மனித உரிமைகள்

ராஜகிரி : இஸ்லாமியச் சட்டம் (11)
நீடூர் A.M.சயீத்
மறுக்கப்படும் மனித உரிமைகள்

மனித உரிமைப் பார்வை என்பது சாதியப் பார்வையுமல்ல வர்க்கப் பார்வையுமல்ல. பாலியல் பார்வையுமல்ல அது ஒரு மனிதப் பார்வை. மனித உள்ளங்கள் காயப்படுகின்ற போது, மனித மாண்பு சிதைக்கப்படும் போது அங்கே இணைந்து குரல் கொடுப்பது இம்மனித பார்வைதான்.


கடமை உணர்வில்லாத உரிமையோ உரிமை உணர்வில்லாத கடமையோ பரிணமிக்க முடியாது. சுதந்திரம் என்பது சமூகத்திடையே உள்ள ஒரு ஒப்பந்தமேயாகும். நமது உரிமையை உபயோகிக்க விரும்புகிற போது மற்றவர் உரிமையையும் மதித்து நமது கடமையை நிறைவேற்ற வேண்டும்.

கண்களுக்கு ஒளி எப்படி அவசியமோ, சுவாசப்பைக்கு காற்று எப்படி தேவையாக இருக்கிறதோ, இதயத்துக்கு அன்பு எப்படி வேண்டப்படுகிறதோ அது போன்று தான் மனித நேயத்துக்கு உரிமை இன்றியமையாததாக இருக்கிறது.

பிறர் உரிமையைப் பறிப்பது எவ்வாறு குற்றமோ அவ்வாறே நம் உரிமை பறிபோவதைப் பார்த்துக் கொண்டு ஒன்றும் செய்யாமல் இருப்பதும் குற்றமாகும். அதனால்தான் "Your Liberty ends, where my nose begins" என்று ஆங்கிலத்திலே ஒரு பொன்மொழியைச் சொல்வார். ஒரு குச்சியைக் கொண்டு நீ எப்படி வேண்டுமானாலும் சுழற்றும் உரிமை உனக்கு உண்டு. ஆனால் அது என் மூக்கின் மேல் பட்டுவிடக்கூடாது என்பது தான் அதன் பொருள்.

வியாழன், 15 ஜூலை, 2010

ராஜகிரி :பாவத்தை போக்குமா பராஅத் இரவு?

ராஜகிரி :பாவத்தை போக்குமா பராஅத் இரவு?
 நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தவர்களுக்கு மத்தியில் ஒவ்வொரு மாதமும் நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத ஏதாவது ஒரு புதுப் புது காரியங்கள் , வழிபாடுகள் நிறைந்து காணப்படுகிறது. அப்படிப்பட்ட நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத காரியங்களில் உள்ளதுதான் ஷஅபான் மாதம் 15 ஆம் பிறை இரவில் மூன்று யாசீன்கள் ஓதுவதும், அன்று இரவில் நின்று வணங்குவதும்., அன்றைய பகற்பொழுதில் நோன்பு வைப்பதும் ஆகும்.


இப்படிப்பட்ட காரியங்களை செய்யக்கூடிய இவர்கள் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு வழிகாட்டியிருக்கிறார்களா? அல்லது இவ்வாறு செய்யுமாறு கட்டளையிட்டிருக்கிறார்களா? என்று சிந்தித்துப் பார்ப்பது கிடையாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ” நம்முடைய மார்க்கத்தில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும்.


அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி (2697)

மற்றொரு ஹதீஸில் வருகிறது

நபி (ஸல்) அவர்கள் : ” என் சமுதயாத்தில் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள். ஏற்க மறுத்தவரைத் தவிர.” என்று கூறினார்கள். மக்கள் ” அல்லாஹ்வின் தூதரே ஏற்க மறுத்தவன் யார்? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ” எனக்கு கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்.எனக்கு மாறு செய்தவர் (சத்தயத்தை) ஏற்க மறுத்தவர் ஆவார்.” என்று பதிலளித்தார்கள்.


அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி) நூல் : புகாரி (7280)

ராஜகிரி : ஷஃ'பான் மாத அமல்களும் ஷப்-ஏ-பராஅத்தும்?

ராஜகிரி : ஷஃ'பான் மாத அமல்களும் ஷப்-ஏ-பராஅத்தும்?

ரமலானை வரவேற்பதற்கான முன்னேற்பாடுகளில், ரமலானுக்கு முந்தைய மாதமான ஷஃ'பானில் செய்ய வேண்டிய அமல்கள் என்ன என்பதைப் பற்றி முஸ்லிம் சமுதாயத்தில் பெரும்பாலானோர், அறியாமையில் இருக்கிறார்கள்.

ஷஃ'பான் எனும் இந்த மாதத்தை, மரணித்துப்போன நம் பெற்றோர்கள் போன்ற நெருங்கிய உறவினர்கள் பெயரால் ஃபாத்திஹா ஓதி, விஷேச அமல்கள், துவாக்கள் செய்து அதன் மூலம் நன்மையை அவர்களுக்குச் சேர்க்கக்கூடிய(?) ஒரு மாதமாகவே இதன் 15ம் நாளை, 'ஷப்-ஏ-பராஅத்' எனும் பெயரில் சில முஸ்லிம்கள் பரவலாகக் கடைபிடித்து வருகிறார்கள்.

இஸ்லாத்தில் கூறப்படாத இத்தகைய அனாச்சாரங்கள் தற்போது ஓரளவு குறைந்துள்ளன என்றாலும், இன்றும் பலர் இதை ஒரு சிறந்த அமலாக, நன்மை தரும் காரியமாகக் கருதி, விதவிதமான சமையல்கள், இனிப்புவகைகள் என்று சமைத்து, பயபக்தியுடன் பரவசத்துடன் குழுமியிருந்து ஃபாத்திஹா ஓதி, மரணித்த தமது உறவினருக்கு நன்மைகளை நாடிப் பிரார்த்திப்பதாகச் செயல்படுத்தி வருகின்றனர்.


இந்த நூதனச் செய்முறைக்கு குர்ஆனிலோ ஹதீஸிலோ ஆதாரமில்லை. புனித குர்ஆனின் ஹதீஸ்களின் மூலமொழி அரபியாகும். 'ஷப்-ஏ-பராஅத்' இல் உள்ள 'ஷப்' என்பது அரபிச் சொல் கிடையாது; 'இரவு' என்ற பொருளில் வரும் பார்ஸிச் சொல்லாகும். 'ஏ'காரம் என்பது அரபு மொழியிலேயே இல்லாத ஓர் ஒலி. இப்படியிருக்கையில் தானாக உருவாக்கிக் கொண்ட ஒரு புதிய நடைமுறைக்கு 'ஷப்-ஏ-பராஅத்' என்ற பெயர் சூட்டி முஸ்லிம்களின் புனித ரமலான், ஹஜ்ஜுப் பெருநாள் போன்ற விஷேசமான இதர பண்டிகைகளின் பட்டியலில் காலங்காலமாக இதனையும் சேர்த்து விட்டனர்.

ராஜகிரி : இஸ்லாமிய வ‌ர‌லாற்றில் ஷஅபான் மாத‌ம்

ராஜகிரி : இஸ்லாமிய வ‌ர‌லாற்றில் ஷஅபான் மாத‌ம்


ஷஅபான் மாத‌த்தின் சிற‌ப்பு


அன்னை ஆயிஷா(ர‌ழி) அவ‌ர்க‌ள் அறிவிக்கிறார்க‌ள்: (ர‌மழானிற்கு)பிற‌கு ஷஅபான் மாத‌த்தை விட, வேறு எந்த‌ மாத‌த்திலும் ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ள் அதிக‌மாக‌ நோன்பு வைப்ப‌வ‌ர்க‌ளாக‌ இருக்க‌வில்லை. ஏனெனில் ஷஅபான் முழுவ‌துமே நோன்பு வைப்பார்க‌ள். ம‌ற்றொரு அறிவிப்பில் ஷஅபானில் சில‌ நாட்க‌ளைத் த‌விர‌, அதிக‌மான‌ நோன்பு வைப்ப‌வ‌ர்க‌ளாக‌ இருந்தார்க‌ள் என‌ அறிவிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. (புகாரி,முஸ்லிம்)


ஷஅபான் மாத‌ம் ப‌தினைந்தாம் இர‌வு அல்லாஹுத் தஆலா த‌ன் ப‌டைப்பின‌ங்க‌ள் அனைத்தின் ப‌க்க‌மும் க‌வ‌ன‌ம் செலுத்துகின்றான். ப‌டைப்புக‌ள் அனைத்தையும் ம‌ன்னித்து விடுவான். ஆனால் இருவ‌ர் ம‌ன்னிக்க‌ப்ப‌டுவ‌தில்லை. 1.அல்லாஹ்வுக்கு இணை வைப்ப‌வ‌ர். 2.எவ‌ருட‌னாவ‌து விரோத‌ம் கொண்ட‌வ‌ர் என‌ ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ள் அருளிய‌தாக‌ அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ர‌ழி) அவ‌ர்க‌ள் அறிவிக்கிறார்க‌ள். (அஹ்ம‌த்)

புதன், 14 ஜூலை, 2010

ராஜகிரி: மார்க்கத்தின் அதிகாரம் அல்லாஹ்வுக்கே

ராஜகிரி: மார்க்கத்தின் அதிகாரம் அல்லாஹ்வுக்கே


அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் யாதொரு காரியத்தை முடிவெடுத்து விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் சுயமாக வேறு அபிப்ராயம் கொள்வதற்கு, விசுவாசியான எந்த ஆணுக்கும், எந்த பெண்ணுக்கும் உரிமையில்லை. (அதில்) அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் எவர் மாறு செய்கிறாரோ அவர், பகிரங்கமான வழிகேடாக திட்டமாக வழி கெட்டுவிட்டார். (அல்குர்ஆன்:33:36)

இந்த ஒரு அத்தியாயம் மட்டுமே போதும், மார்க்கத்தின் உரிமை அல்லாஹ்விற்கே உரியது என்று சொல்வதற்கு. இறைவனுடைய சொல்லையே வாழ்க்கையாக வாழ்ந்து காட்டிய நபி (ஸல்) அவர்களுக்கே மார்க்கத்தின் சட்டங்களை இயற்றும் அதிகாரத்தை அல்லாஹ் கொடுக்கவில்லை என்றால், இன்று மவ்லவிகள், இமாம்கள், ஷெய்குமார்கள் என்று சொல்லக் கூடியவர்களுக்கு குர்ஆன் ஹதீஸ் ஒளியில்லாமல் மார்க்கத்தின் அதிகாரத்தில் கை வைக்க, மார்க்கத்தில் புதிதாக ஒரு விஷயத்தை இபாதத் என்று சொல்லவோ அல்லது மார்க்கத்தில் சொல்லப்பட்ட இபாதத்களை நீக்கவோ, திருத்தம் செய்யவோ என்ன அதிகாரம் இருக்க முடியும்.

செவ்வாய், 13 ஜூலை, 2010

ராஜகிரி : நீங்கள் ஒரு நல்ல பெற்றோரா?

ராஜகிரி : நீங்கள் ஒரு நல்ல பெற்றோரா?

உலகத்தில் எல்லா பெற்றோர்களும் தம் குழந்தைகள் மீது பாசம், அன்பு, நேசம், அக்கறை கொண்டிருப்பார்கள். இது இயற்கையான ஒன்று, இந்த அன்பில், அக்கறையில் எந்த கலப்படமும், வேறுபாடும் இருக்காது. ஆனால் எல்லா பெற்றோர்களுக்கும் கருத்துக்கள், எண்ணங்கள், ஆசைகள், விருப்பங்கள், கனவுகள், பண்பாடுகள், யுக்திகள் இப்படி எல்லாமே வித்தியாசப்படும். அவரவர் விருப்பப்படி தம் குழந்தைகளை வளர்ப்பார்கள். குழந்தைகளின் வளர்ப்பில் பலவித யுக்திகளை கையாள்வார்கள். இப்படி குழந்தைகளின் வளர்ப்பில் பல வித்தியாசங்கள் காணப்படும். இதில் சரியான முறையில் வளர்ப்பவர்கள் யார்? யார்? இதனால் பெற்றோருக்கு என்ன லாபம், தொடர்பு இவைகளை நாம் காணலாம்.


என்னைப் பொருத்தவரையில் எனது கருத்துப்படி எல்லா பெற்றோர்களுக்கும் சில தகுதிகள் அவசியம் தேவை. அது முதலில் அவரவர் தத்தம் குழந்தைகளின் மனதை நன்கு அறிந்தவர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகளின் நல்ல குணங்களை கண்டறிந்து ஊக்கமளித்து வழிநடத்தி செல்ல முடியும். அதுபோன்ற ஊக்கமும், ஒத்துழைப்புகளும்தான் அவர்களை வாழ்க்கையில் மென்மேலும் உயரச்செய்யும். இது போன்ற நற்காரியங்கள்தான் ஒரு பெற்றோரை நல்லவர்கள் என அடையாளங் காட்டும்.

வியாழன், 1 ஜூலை, 2010

ராஜகிரி: கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம்

ராஜகிரி: கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம்

[ ''தங்களின் மறைவிடங்களை பாதுகாத்துக்கொள்ளும் ஆண்களுக்கும், பாதுகாத்துக்கொள்ளும் பெண்களுக்கும்'' என்று தனது திருமறையில் கூறுவதின் மூலம் கற்பொழுக்கம் ஆண் - பெண் இருபாலருக்கும் அவசியம் என்பதை அல்லாஹ் வலியுறுத்துகிறான். அதிலும் பெண்களுக்கு முன்பாக ஆண்களை குறிப்பிடுகிறான் என்பதை ஆண்கள் கவனிக்கவும

''உலக அழிவு நாளை நெருங்கிவிட்ட நிலையில் இஸ்லாமிய பெண்களிடம் வெட்கமில்லை, பர்தா இல்லை, தெருக்களுக்கு வந்துவிட்டார்கள்'' என்றெல்லாம் கூறி பெண்களின் நிலையை மட்டும் பேசி விட்டு ஆண்கள் தங்களது கற்பை மறந்து வாழ்வது சரியல்ல. நியாயமும் அல்ல.

பார்வையை பேணுவதற்காக பொது இடங்களில் அமருவதை விட்டும் ஸஹாபாக்களை நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தடுத்தார்கள். நிர்பந்தமாக அமர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் பார்வையை தாழ்த்திக்கொண்டு அமருங்கள் என் கட்டளையிட்டார்கள்.

ஞாயிறு, 27 ஜூன், 2010

ராஜகிரி :தொலைபேசியும் இஸ்லாமிய பெண்களும்....

ராஜகிரி :தொலைபேசியும் இஸ்லாமிய பெண்களும்....


முஸ்லிம் பெற்றோர்களே, சகோதரர்களே! உங்கள் பெண் குழந்தைகளயும், நம் சகோதரிகளை நாம் பாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்வதும், கயவர் கூட்டத்தின் சதியை முறியடிப்பதும், நமது கடமையாக இருக்கின்றது. இதனை நாம் காலம் தாழ்த்தாமல் உடனே செய்ய வேண்டும் தற்சமயம் அதிக அளவில் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாத ஆடவருடன் ஓடிப்போவதும், மதம் மாறுவதும் நிகழ்ந்து வருகின்றது.



இத‌ற்கான‌ முழுப்பொறுப்பையும் பெற்றோர் ஏற்க‌ வேண்டி இருக்கிற‌து.


இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணிகள்:


1. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை முறையாக கவணிக்க தவறுவது.


2. அளவிற்கு அதிகமாக பணம் கொடுப்பது. வசதி உள்ளது என்பதற்காக மொபைல் போன் போன்ற சாதனங்களை வாங்கி கொடுப்பது.


3. மொபைல் ஃபோனில் தங்கள் பெண் குழந்தைகள் யாருடன் பேசுகின்றார்கள், என்ன எஸ்.எம்.எஸ் வருகின்றது போன்றவற்றை கவணிக்காமல் இருப்பது.

வியாழன், 24 ஜூன், 2010

ராஜகிரி; எச்சரிக்கை இறுதி நாள்(கியாமத்) நெருங்குகிறது!!

ராஜகிரி; எச்சரிக்கை இறுதி நாள்(கியாமத்) நெருங்குகிறது!!

உலக முடிவு நாள் எப்பொழுது சம்பவிக்கும் என்று ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு காலகட்டத்திலும் தனக்குள் கேள்வி எழுப்பி கொண்டே இருந்தான். அதற்கு தீர்வாக மனிதர்களுக்கு இறுதிநாளின் அடையாளங்களை நினைவுபடுத்துகிறோம்.

பொறுப்புடனும், பொறுமையுடனும் படித்து மரணத்தைப் பற்றியும், மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையைப் பற்றியும் பயந்து, சிந்தித்து உலக இறுதி நாளின் நெருக்கத்தில் நாம் இருக்கிறோம் என்பதை நினைவில் நிறுத்தி இறைவனுக்கு மட்டுமே கட்டுப்பட்டு நடப்போமாக என்று எங்களையும், உங்களையும் கேட்டுக்கொண்டு ஆரம்பம் செய்கிறோம்.



இந்த உலகம் நிரந்தனமானது அல்ல. பிறந்ததெல்லாம் இறந்தே ஆகவேண்டும் என்ற நியதியுடைய இவ்வுலகத்தின் அழிவை பற்றி விஞ்ஞானிகள் கூறும் பொழுது:- “உலகின் அழிவு துவங்கிவிட்டது.

நாம் ஒரு மாய நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்றோம். மனித இனம் என்ற சுவடே இல்லாமல் அழிந்தொழியும். பூமியானது தூள்தூளாகி அனைத்து மூலக்கூறுகளும், அணுக்களும் தூசியாகி விண்வெளியில் பறக்கும்” என்று விஞ்ஞானிகள் விஞ்ஞான வளர்ச்சியின் உச்சாணியில் இருந்து கொண்டு ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார்கள்.

புதன், 23 ஜூன், 2010

ராஜகிரி : தரிசனம் செய்யப்படும் இடங்கள்?

ராஜகிரி : தரிசனம் செய்யப்படும் இடங்கள்?


ஸிரியா, இராக், எகிப்து இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும், இவையல்லாத இன்னும் பல நாடுகளிலும் நாம் காணுகின்ற, கட்டப்பட்ட கப்றுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் எதனையும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை. கப்றின் மீது கட்டிடம் கட்டுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளது பின்வருமாறு அமைந்துள்ளது.

‘கப்றின் மீது சாந்து சுண்ணாம்பு பூசுவதையும், அதன் மீது அமர்வதையும், அதன் மீது கட்டிடம் கட்டுவதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்’ ஆதாரம்: முஸ்லிம்

மேற்காட்டிய ஹதீஸில் வந்த ‘தஜ்ஸீஸ்’ என்ற அரபு வார்த்தைக்கு சாந்து அல்லது சுண்ணாம்புகளின் கொழுப்புக்களைப் பூசுதல் என்று பொருள்படும்.

இமாம் திர்மிதி (ரஹ்) அவர்களின் ரிவாயத் ஒன்றில் ‘கப்றின் மீது எழுதப்படுவதையும் நபியவர்கள் தடை செய்துள்ளார்கள்’ என்று பதியப்பட்டுள்ளது. எழுதப்படுவது என்றால் அல்குர்ஆன் வசனம், ஹதீஸ் வாக்கியம், பாடல்கள், கப்றில் அடங்கியவரின் பெயர் போன்றவைகளாகும்.

சனி, 19 ஜூன், 2010

ராஜகிரி : ஜூலை 10 -ல் மிஹ்ரஜ் இரவு

ராஜகிரி : ஜூலை 10 -ல் மிஹ்ரஜ் இரவு

ரஜப் மாத முதல் பிறை ஜூன் 13 ஆம் தேதி தமிழகமெங்கும் தென்படாததால், ஜூன் 14 ஆம் தேதி மாலை ரஜப் மாத முதல் பிறையாக கணக்கிட்டு, ஜூலை 10 ஆம் தேதி மாலை மிஹ்ரஜ் இரவு என தஞ்சாவூர் மாவட்ட அரசு டவுன் காஜி டி. சையத் காதர் ஜூûஸன் புகாரி ஆலிம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




வியாழன், 17 ஜூன், 2010

ராஜகிரி மின்வெட்டை எதிர்த்துச் சாலை மறியல் - தடியடி பொய் வழக்குகள் - உண்மை அறியும் குழு அறிக்கை!

ராஜகிரி மின்வெட்டை எதிர்த்துச் சாலை மறியல் - தடியடி பொய் வழக்குகள் - உண்மை அறியும் குழு அறிக்கை!


தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் தஞ்சையிலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது ராஜகிரி கிராமம். இச்சாலையோர கிராமத்தில் வசிப்பவர்களில் பெரும்பாலோனார் (சுமார் 85 சதவீதம்) முஸ்லிம்கள். சுமார் 10 சதவீதம் தலித்கள். கடைதெருவிலுள்ள கடைகளிலும் பெரும்பாலானவை முஸ்லிம்களுடையவை.


இன்று தமிழகம் முழுவதிலும் கடும் மின்வெட்டு உள்ளதை அறிவோம். நகரங்களில் அறிவிக்கப்பட்ட மின்வெட்டு சுமார் இரண்டு முதல் மூன்று மணிநேரமும், அவ்வப்போது அறிவிக்கப்படாத மின்வெட்டுக்களும் செயல்படுத்தப்படுகின்றன. கிராமப்புறங்களில் மேலும் அதிக அளவில் மின் வெட்டுக்கள் உள்ளன. கிராமப்புறங்களை பொறுத்தமட்டில் எந்த நேரத்தில்; மின் வெட்டு மேற்கொள்ளப்படும் எனத் தெரியாத அளவிற்கு நிலைமைகள் உள்ளன.


ராஜகிரி கிராமத்தில் சென்ற மாத இறுதி வாரத்தில் நாள்தோறும் கிட்டத்தட்ட 10மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட பகல் முழுவதும், பல நேரங்களில், இரவுகளிங்கூட மின்வெட்டு இருந்துள்ளது. அருகிலுள்ள வங்காரம்பேட்டை முதலான கிராமங்களில் மின்சாரம் இருந்தபோதிலும்கூட ராஜகிரியில் மின்வெட்டு மேற்கொள்ளப்பட்ட நிலை அங்குள்ள மக்களுக்கு ஆத்திரத்தை வரவழைத்தது பலமுறை அவர்கள் மின்வாரிய அதிகாரிகளை உள்ளுர் அளவிலும் வட்ட, மாவட்ட அளவிலும் நேரிலும், தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு பேசிய போது யாரும் பொறுப்பாக பதில் சொல்லவில்லை. கிராமப்புறம் என்றால் அப்படித்தான் இருக்கும் “மேலதிகாரியிடம் வேண்டுமானால் சொல்லிப்பாருங்கள்” முதலான பதில்களையே தஞ்சையிலுள்ள உயர் அதிகாரி (ளுஊநு)வரை கூறியுள்ளார்கள். அருகிலுள்ள மற்ற கிராமங்களைக் காட்டிலும் தமது கிராமம் பெரிதும் பாதிக்கப்படுகிறது என ராஜகிரி மக்கள் கருதுவது குறித்து அவர்கள் யாரும் விளக்கம் அளிக்கவோ, அல்லது அது குறித்து கரிசனம் காட்டவோ, குறைகளை களையவோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

திங்கள், 7 ஜூன், 2010

ராஜகிரி : வட்டி சமுதாயத்தின் சாபக்கேடு!

ராஜகிரி : வட்டி சமுதாயத்தின் சாபக்கேடு!



முன்னுரை: சமீபத்தில் எத்தனையோ நாடுகள் பொருளாதாரத்தில் மாபெரும் வீழ்ச்சியைக் கண்டன. அவற்றுக்கு மூலகாரணம் வட்டியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கையேயாகும்.

உலகின் மிகப்பிரபல்யமான சர்வதேச வர்த்தக நிறுவனங்கள் சின்னஞ்சிறிய அதிர்வுகளைக்கூட தாக்குப்பிடிக்க முடியாமல் முழுவதும் முடங்கிப்போயின, இதற்கு காரணம் வட்டி அடிப்படையிலான வர்த்தகமேயாகும். பல குடும்பங்கள் அழிந்து போனதற்கும் வட்டியே முதற்க் காரணமாகும். இஸ்லாம் வட்டியை முற்றாக தடை செய்கிறது. அவற்றை தெரிந்து கொண்டு நமது வாழ்வில் கடைபிடிப்பது அவசியமாகும்.

1. வட்டி என்றால் என்ன?

அசலுக்கு அதிகமாக வாங்கும் தொகையே வட்டி எனப்படும். இதை கீழ்காணும் குர்ஆன் வசனம் விளக்குகிறது. '...ஆயினும் நீங்கள் (வட்டி வாங்கியதைப் பற்றி) மனம் திருந்தி மீண்டு விட்டால், உங்கள் பொருளின் அசல் தொகை உங்களுக்கு உண்டு...' (அல்குர்ஆன் 2:279)

இரட்டித்து அதிகரிப்பது வட்டியின் குணம். இதை அல்லாஹ் தனது திருமறையில் சொல்கிறான்.


'ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்...' (அல்குர்ஆன் 3:130) 

செவ்வாய், 1 ஜூன், 2010

ராஜகிரி: ஏகஇறைவனின் திருப்பெயரால்....தீவுத்திடலை நோக்கி அணி அணியாய்..

ராஜகிரி:  ஏகஇறைவனின் திருப்பெயரால்....


தீவுத்திடலை நோக்கி அணி அணியாய்..


இந்திய மண்ணை நேசித்து இந்தியாவுடன் தங்கிக் கொண்ட முஸ்லீம்கள் இந்திய அரசாங்கத்தால் கை விடப்பட்டக் காரணத்தால் பொருளாதாரத்தில் நலிவடைந்து வாழ்வதற்கு வழி தெரியாமல் அதிகமானோர் தங்களை கூலி வேலைகளில் ஈடுபடுத்திக் கொண்டு தங்களின் பிள்ளைகளையும் (வறுமையின் காரணத்தால் கல்வியைக் கொடுக்க முடியாமல்) பிஞ்சு வயதிலேயே கூலி வேலைகளில் ஈடுபடுத்தினர்.


வீடு வாசல்கள், நில புலன்கள், ஆபரணங்கள் போன்றவற்றில் சிறிதை வைத்திருந்தவர்கள் அவற்றை விற்று அரபு நாடுகளுக்கு தங்களுடைய பிள்ளைகளை பயணம் அனுப்பி வைத்தனர். அதற்கும் வசதி பெறாதவர்கள் இஸ்லாம் தடை செய்த வட்டிக்குப் பணம் வாங்கியேனும் பயணம் அனுப்பி வைத்தனர்.


அவ்வாறு சென்றவர்களில் ( வறுமையின் காரணத்தால் படிக்க முடியாதவர்கள் பிரபல கம்பெனிகளில் உயர் பொறுப்புகளில் அமர முடியாமல் ) அங்கும் குறைவான சம்பளத்தில் இதே கூலி வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இன்னும் ஒப்பந்தப் படிவத்தில் குறிப்பிடப்பட்ட வேலையும், சம்பளமும் கொடுக்காமல் குறைவான சம்பளம் கொடுத்து, தங்குமிட வசதியும் முறையாக செய்து கொடுக்காமல் அலைக்கழிக்கப்பட்டனர்.

புதன், 26 மே, 2010

ராஜகிரி : இஸ்லாத்தின் பார்வையில் திருமணம்!

ராஜகிரி : இஸ்லாத்தின் பார்வையில் திருமணம்!
உங்களில் வாழ்க்கைத் துணையில்லாதவர் (ஆண், பெண்)களுக்கு திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால், தன் நல்லருளைக் கொண்டு அல்லாஹ் அவர்களை சீமான்களாக்கி வைப்பான், மேலும் அல்லாஹ் (வாரி வழங்குவதில்) விசாலமானவன். (அல்குர்ஆன் 24:32)


இந்த வசனத்தில் இறைவன் ‘திருமணம் செய்து வையுங்கள்’ என்ற ஏவலை பயன்படுத்தியுள்ளதிலிருந்து தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பொறுப்பு பெற்றோர்களை சார்ந்தது என்பது விளங்குகிறது. குழந்தைகளை நல்லவிதமாக வளர்ப்பதும் அவர்களுக்கு சிறந்த வாழ்க்கைத் துணைகளை அமைத்துக் கொடுப்பதும் நல்லப் பெற்றோர்களின் அடையாளமாகும். திருமண வயதை அடைந்து விட்டப் பிறகும் ஏழ்மையைக் காரணம் காட்டி திருமணத்தைத் தள்ளிப் போட வேண்டாம் எனற வழிகாட்டலும் இங்கு கிடைத்துள்ளது.

செவ்வாய், 25 மே, 2010

ராஜகிரி: கல்விக்கு உதவிடும் நல்லவர்களின் கவனத்திற்கு

ராஜகிரி: கல்விக்கு உதவிடும் நல்லவர்களின் கவனத்திற்கு


'எந்த ஒரு சமுதாயத்தவரும் தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில் அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை.' (அல் குர்ஆன் : 13:11)

தமிழகத்தில் முஸ்லிம் சமூகத்தில் கல்விக்கு உதவக்கூடிய நல்ல உள்ளங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இது முஸ்லிம்களிடம் ஏற்பட்டுள்ள மார்க்கப் பிடிப்பையும் சமூகப் பற்றையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

ஒரு காலத்தில் ஒரு சில அறக்கட்டளைகள் மட்டுமே இந்த அறப்பணியைச் செய்து வந்தன ஆனால் இன்று தனிப்பட்ட முறையிலும் கூட தங்களால் இயன்ற அளவு படிக்கின்ற மாணவர்களின் நிலையை அறிந்து மனமுவந்து பலர் உதவி வருகின்றனர். இதன்மூலம் படித்து பட்டம் பெறும் முஸ்லிம் மாணவ மாணவியரின் எண்ணிக்கை ஆண்டு தோறும் பெறுகி வருகிறது என்பதில் மாற்றமில்லை.

சனி, 22 மே, 2010

ராஜகிரி தான்ஸ்ரீ உபைதுல்லா மெட்ரிக் பள்ளி 97 சதம் தேர்ச்சி

ராஜகிரி தான்ஸ்ரீ உபைதுல்லா மெட்ரிக் பள்ளி 97 சதம் தேர்ச்சி


இப் பள்ளியின் மாணவிகள்

ஏ. ஆமீனா நஸ்ரின் 1103,

எம். புஷ்ரா,1080, ,

கே. சலோபர் சிபாயா 1075

மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களை பெற்றனர்.


மேலும், பாட வாரியாக பள்ளி மாணவ, மாணவிகள்

ஹச். பாத்திமா தஸ்லீம்(தமிழ்,179),

எம். புஷ்ரா (ஆஙகிலம்,178),

ஏ. ஆமினா நஸ்ரின் (கணிதம் 191),

ஏ. ஆமினா நஸ்ரின் (இயற்பியல்,194),

மனோஜ் குமார் (இயற்பியல் 194),

ஆமினா நஸ்ரின் (வேதியியல்,191),

எம். புஷ்ரா (கணினி அறிவியல் 194),

ஹச்.பாத்திமா தஸ்லிம் (உயிரியல்,166),

எஸ். ஜொகரா நஸ்ரின் (பொருளியல் 185),

எஸ். ஜொகரா நஸ்ரின்(வணிகவியல்,200),

கே.எஸ். சலோபர் சிபாயா (வணிகவியல் 200),

கே.எஸ். சலோபர் சிபாயா (கணக்கு பதிவியல்,193)

உள்ளிட்டோர் பாட வாரியாக முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மாணவ, மாணவிகளை பள்ளியின் செயலர் ஏ. சாகுல் ஹமீது, ஒருங்கிணைப்பாளர் எம். முகமது உமர், முதல்வர் எஸ். கஸ்தூரி உள்ளிட்டோர் பாராட்டினர்.

வியாழன், 20 மே, 2010

ராஜகிரி: அல்லாஹ்வின் பெயர்களும் பண்புகளும்!»

ராஜகிரி: அல்லாஹ்வின் பெயர்களும் பண்புகளும்!»
அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படை விதிகள்!


மூலம்: அஷ்ஷெய்க் முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உதைமீன் (ரஹ்)

தமிழில்: முபாரக் மஸஊத் மதனி

அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகள் பற்றி அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படை விதிகள்:


முதல் அடிப்படை:

அல்லாஹ்வுடைய பெயர்கள் மற்றும் பண்புகள் பற்றி வந்துள்ள அல்குர்அன் வசனங்களையும் நபிமொழிகளையும் அணுகும் முறை.

அல்குர்ஆன் வசனங்களையும் நபிமொழிகளையும் பொறுத்தவரை அவை தருகின்ற வெளிப்படையான கருத்திலேயே அவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அதில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது. ஏனெனில் அல்குர்ஆன் அரபி மொழியிலேயே அருளப்பட்டுள்ளது. அவ்வாறே நபி (ஸல்) அவர்களும் அரபு மொழியையே பேசினார்கள்.


அல்குர்ஆனும் நபிமொழிகளும் தருகின்ற வெளிப்படையான கருத்துக்களை விட்டுவிட்டு அவற்றுக்கு வேறு அர்த்தங்கள் கற்பிப்பது அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டுவதாக அமையும். இது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 18 மே, 2010

ராஜகிரி: உலகம் உங்களை மதிக்க வேண்டுமென்றால்

ராஜகிரி: உலகம் உங்களை மதிக்க வேண்டுமென்றால்

மாபெரும் சபையினில் நீ நடந்தால்… நம்மை நாம் எப்படி வெளிப்படுத்துகிறோமோ அப்படித்தான் உலகம் நம்மை அறிந்து கொள்கிறது. சமூக மரியாதை, செல்வாக்கு என்றெல்லாம் சொல்கிறார்களே, அதற்கெல்லாம் என்ன பொருள்? நம்மீது பிறர் கொண்டிருக்கிற அபிப்பிராயம்தான் அவையெல்லாம்!



இந்த அபிப்பிராயங்களை அவர்களாக உருவாக்கிக் கொள்வதில்லை. நம்முடைய வார்த்தைகள், செயல்பாடுகள், அணுகுமுறைகள் எல்லாம் சேர்ந்து நம்மீது சில அபிப்பிராயங்களைக் கட்டமைக்கிறது.


நாம் நல்ல மனநிலையில் இருப்பதைப் பார்ப்பவர்கள், இவர் ரொம்ப அன்பான மனுஷன் சார்” என்று முடிவெடுக்கிறார்கள். எதற்கோ, யார் மீதோ அளவு கடந்து கோபப்பட்டதைப் பார்ப்பவர்கள் அய்யோ! சரியான சிடுமூஞ்சி என்று முத்திரை குத்திவிடுகிறார்கள்.

திங்கள், 17 மே, 2010

அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் படைக்கிறவன்!

அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் படைக்கிறவன்!


(நபியே! அவர்களிடம்;) "வானங்களுக்கும் பூமிக்கும் இறைவன் யார்?" என்று நீர் கேளும். அவன் அல்லாஹ்தான் என்று நீரே கூறும்; "(அவ்வாறிருக்க) நீங்கள் அவனையன்றி (வேறு தெய்வங்களை) இரட்சகர்களாக எடுத்துக் கொள்கிறீர்களா? அவர்கள் தங்களுக்கே யாதொரு நன்மையும் தீமையும் செய்து கொள்ளச் சக்தியற்றவர்களாய் இருக்கின்றனர்"; மேலும், கூறும்; "குருடனும் பார்வை உடையவனும் சமமாவார்களா? அல்லது இருள்களும், ஒளியும் சமமாகுமா? அல்லது அவர்கள் இணையாக்கிக் கொண்டிருக்கும் (தெய்வங்கள்) அல்லாஹ் படைத்திருப்பதைப் போல் எதையும் படைத்திருக்கின்றனவா? (அப்படியிருந்தால் இது யார்) படைப்பு என்று அவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம்!" (அவ்வாறில்லையே எனவே நபியே! நீர் உறுதியாகக்) கூறும்; "அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் படைக்கிறவன்; அவன் ஒருவனே (அனைத்தையும்) அடக்கி ஆள்பவன்" என்று. (அல்குர்ஆன்:13:16)

ஞாயிறு, 28 மார்ச், 2010

ராஜகிரி: குடும்பத்தில் நிம்மதியை தேடி அலையும் என் சகோதர, சகோதரிகளே!

ராஜகிரி :  குடும்பத்தில் நிம்மதியை தேடி அலையும் என் சகோதர, சகோதரிகளே!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்


குடும்பத்தில் நிம்மதியை தேடி அலையும் என் சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சகோதரர்களே! குடும்பம் அல்லாஹ்வுடைய மிகப்பெரும் அருட் கொடையாக உள்ளது ஆனால் நாம்தான் அதை மறந்து விடுகிறோம். நினைத்துப்பாருங்கள் குடும்பம் இல்லையெனில் நாம் அநாதைகள்தானே! நீங்கள் சொந்த நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ இருக்கலாம் எங்கிருந்தாலும் தொலைபேசி, கடிதம் வாயிலாக உங்களிடம் மிக நெருக்கமாக, ஆசை ஆசையாக பேசக்கூடிய நபர்கள் யார்? உங்கள் குடும்ப உறுப்பினர்கள்தானே! அப்படிப்பட்ட குடும்பத்தை நாம் எவ்வாறு பேணுவது? பெற்ற தாய் மற்றும் உடன் வாழும் மனைவி மக்கள் ஆகியோருக்கு இடையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுதான் என்ன? அலசிப்பார்ப்போம்!


எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தியாக நடந்து கொள்கிறார்களோ அவர்கள் நற்பாக்கியம் பெற்றவர்கள். அல்குர்ஆன் 24:52

வியாழன், 25 மார்ச், 2010

ராஜகிரி: ஆபாச சினிமா துறையும், சீரழிக்கும் சீரியல் துறையும்.

ராஜகிரி: ஆபாச சினிமா துறையும், சீரழிக்கும் சீரியல் துறையும்.

வாழ்நாளை எப்படிக் கழித்தான்? வாலிபத்தை எதில் ஈடுபடுத்தினான்? செல்வத்தை எப்படி சம்பாதித்து, எவ்வழியில் செலவு செய்தான்? கற்றவைகளில் எதைச் செயல்படுத்தினான்? என ஐந்து விஷயங்கள் பற்றி விசாரிக்கப்படாத வரை மறுமை நாளில் எந்த மனிதனின் பாதமும் தன் இறைவனிடமிருந்து நகர முடியாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத்(ரலி) நூல்: திர்மிதி (2531)


ஒவ்வொரு விஞ்ஞானத்தின் முன்னேற்றத்திலும் எவ்வளவு நன்மை இருந்தாலும் அதைவிடத் தீமைகளும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. நாம் பயன்படுத்தும் முறையைப் பொருத்துதான் அது நன்மையானதா? அல்லது தீமையானதா? என அறிய முடிகிறது. இதில் மின்னணு ஊடகங்கள் (Electronic Media) என்று சொல்லப்படும். வானொலி (Radio), ஒலிப்பதிவு (Recording), திரைப்படம் (Film), தொலைக்காட்சி (Television), போன்றவை குறிப்பிடத்தக்கது. கல்வி, தொழில் நுட்பம், தகவல் தொடர்பு, ஆன்மீகம் போன்ற நன்மைகளை இதன் மூலம் நாம் பெற முடியும். ஆனால் இந்த நன்மையான காரியங்களில் இத்துறை பயன்படுவதைவிட ஆபாசம், விரசம், கொலை, கொள்ளை போன்ற தீய செயல்களில்தான் இத்துறை முனைப்புக் காட்டுகிறது. குறிப்பாக திரைப்படம் மற்றும் தொலைக் காட்சிகளில் நாம் பெறும் நன்மையை விட தீமைகள்தான் ஏராளம். இதன் பாதிப்புக்கள் குக்கிராமம் முதல் முன்னேறிவிட்ட பெரு நகரங்கள் வரை வியாபித்திருக்கிறது.

செவ்வாய், 2 மார்ச், 2010

ராஜகிரி சுயபரிசோதனை!

 ராஜகிரி சுயபரிசோதனை!
       மரண ஓலம் உலகத்தை அப்பிக்கொண்டிருக்கிறது! எங்கு பார்த்தாலும் மனித இரத்தம் புவியை நனைத்துக் கொண்டிருக்கும் சிவப்புக் காட்சிகள்! குறிப்பாக முஸ்லிம்களின் விலைமதிக்க முடியாத உயிர், செல்லாக் காசுகளாகிவிட்ட கொடூர காலக்கட்டம்! எந்த நேரத்தில் நம் உயிர் பிரியும் என்பது யாருக்கும் தெரியாது! எங்கு தான் இந்த உயிர் பறிக்கப்படும் என்பதும் நமக்குத் தெரியாது!

எனவே அடிக்கடி நம்மை நாமே சுயபரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும். கடந்த கால நம் வாழ்க்கையை கொஞ்சம் அசைபோட்டுப் பார்த்து நம் எதிர்காலத்தை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். கடந்த காலம் குறித்த பின்னோக்கும் தன்மையும், எதிர்காலம் குறித்த திட்டமிடலும் கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனுக்கும் தேவை.

இராஜகிரி பைத்துல்மால் ©2011 rajaghiribaithulmal.blogspot.com. All Rights Reserved. Hosted by Rajaghiribaithulmal is Designed and Developed by rajaghiri.online